Share

Aug 16, 2012

கழிவறையாய் நான் பார்த்த சமாதி

மீள் பதிவு  07-10 -2008

சிவாஜி கணேசன் இறந்த அன்று மாலை. அவர் இறப்பதற்கு சற்று முன்
அவர் பால்ய காலத்தில் வாழ்ந்த திருச்சிசங்கிலியாண்டபுரத்தில் இருந்தேன்.
ஏன் இருந்தேன் ? அன்று தான் அங்கே அதையொட்டி இருந்த எம்.கே தியாக ராஜ பாகவதரின் சமாதியை கண்டு பிடித்தேன்.

அவருடைய சமாதியை யாரோ ஒருவர் கழிவறையாக தினமும் உபயோகித்து வருகிறார் என தெரிந்தது. ( சாரு நிவேதிதா அவருடைய சின்னப்பா பற்றிய உயிர்மை கட்டுரையில் நான் தியாகராஜபாகவதர் சமாதிக்கு போனவிஷயத்தையும், கிட்டப்பா பற்றிய உயிர்மை கட்டுரை யில் இது குறித்த என் கடிதத்தையும் வெளியிட்டிருக்கிறார்.)

ரொம்ப புதிதான கொஞ்ச நேரத்திற்கு முன் கழிக்கப்பட்ட மலம்! அதோடு அந்த பிரபல பிரமுகரின் சமாதியை தினம் தன்னுடைய பிரபலமான கழிவறையாக பயன்படுத்தும் அந்த பிரகிருதியின் முந்தைய நாட்களின் மலக்கழிவுகள் காய்ந்த நிலையில் சமாதி முழுவதும் பரவலாக .அந்த பிரகிருதிக்கு இதில் ஒரு குரூர சந்தோசம். பிரபலமான கழிவறை!

எனக்கு ஷேக்ஸ்பியர் உடைய ஜூலியஸ் சீசரில் மார்க் ஆண்டனி யின் புலம்பல் தான் நினைவுக்கு வந்தது.

நான் வாய் விட்டே சொன்னேன்.
“Oh, MKT!
Were all your conquests, glories and triumps
Shrunk to this little measure ?”


நடித்தது பதின்மூன்று படங்கள். அதிலும் எட்டு படங்கள் தான் வெற்றி பெற்றன. ஆனால் தமிழ் ஜன சமூகம் அவருக்கு கொடுத்த அந்தஸ்து மரியாதை ... அவருடைய பிராபல்யம்!

தேஜஸ்! உன் பெயர் எம்.கே. டி !!
தங்க தட்டில் சாப்பிட்டு, பன்னீரில் குளித்து சகல சுக போகங்களையும் அனுபவித்து பின் தன் வாழ் நாளிலேயே அத்தனை இழப்பு,சரிவு,துயரம்,வர்ஜனம்,இழிவுகளையும் பார்த்து விட்டு மறைந்தால், இறந்த பின்னும்  தொடரும் அவமானம். சமாதியே மலஜலமாக .....

மயானத்திலிருந்து கிளம்பி வெளி வரும்போது அங்கே சங்கிலியாண்டபுரத்தில் பரபரப்பாக பலரும் பேசிகொண்டிருந்தார்கள்.
சிவாஜி இறந்து விட்டார்! டிவியில் அவர் இறந்த ஆஸ்பத்திரியில் கூடி நிற்கும் பிரமுகர்களை காட்ட ஆரம்பித்தார்கள்.
ஒன்பது வருடங்களுக்கு முன்
திருச்சி பெமினா ஹோட்டலில் சிவாஜி கணேசன் என்னை பார்த்து சொன்ன வார்த்தைகள் :
OK, Youngman!
I’m leaving!!


http://rprajanayahem.blogspot.in/2008/08/death-is-busy-every-where.html


http://rprajanayahem.blogspot.in/2009/11/blog-post_16.html


http://rprajanayahem.blogspot.in/2008/08/ok-young-man-i-am-leaving.html

3 comments:

 1. /// எம்.கே தியாக ராஜ பாகவதரின் சமாதியை யாரோ ஒருவர் கழிவறையாக தினமும் உபயோகித்து வருகிறார் ///

  கொடுமை...

  ReplyDelete
 2. என்னக் கொடுமை இது !!! ஒரு மாபெரும் நடிகனின் கல்லறை கழிப்பறையாக பயன்படுகின்றதா ???!!! இதே நிலை எதிர்க்காலத்தில் காந்தி சமாதிக்கும் - அண்ணா சமாதிக்கும் வரக் கூடும் .. யாருக்குத் தெரியும் .. இந்தியாவில் தான் 60 சதவீத மக்களுக்கு கக்கூஸே இல்லை என அல் -ஜசீரா சொல்லுது ... !!! வெகுவிரைவில் அனைத்து சமாதிகளும் கழிப்பறைகளாக மாறக்கடவ ... !!! கூடவே டாய்லட் பேப்பர்களை வருடா வருடம் சமாதியில் வைத்துவிட்டு வாருங்கள் மக்களே !!!

  ReplyDelete
 3. 1945க்கு முன் என் தந்தையின் பாட்டனார் கீதா பில்ம்ஸில் பார்ட்னராக இருந்தபோது சிவலிங்கம் சாட்சி என்றொரு படத்தை எம்.கே.டி பாகவதரை வைத்து எடுத்தார்களாம். படம் வெளி வரவில்லை. அது தொடர்புடைய சில பத்திரங்கள் எங்கள் வீட்டில் இருப்பதாக என் தந்தை கூறுவார்.

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.