Share

Aug 31, 2012

டீ காஃபி


ஏதோ ஒரு ஊரில் ரயில் பின்னிரவில் நிற்கும் போது  ‘டீ , காஃபி’ , ‘ டீ காஃபி’ என்ற கூவல் ரயிலில் அரைத் தூக்கத்தில்  காதில் விழுகிறது.அந்த நேரத்திலும் டீ,காஃபி சாப்பிடும் பயணிகள்.

சென்னையிலிருந்து திருச்சி திரும்பிக்கொண்டிருந்த போது அதிகாலை மூன்று மணி ‘டீ, காஃபி டீகாஃபி என்ற கூப்பாடு.விழித்தபோது தொழுதூர் மோட்டலில் பாட்டு”சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாள்,கன்னம் சிவக்க சிவக்க வந்து கதை படித்தாள்”
அந்த அதிகாலையில் அந்தப் பாடல் -எவ்வளவோ தடவை கேட்ட பாடல்-
ஆஹா இன்றும் நினைவில்.


ஊர்,ஊரா எத்தனை டீகடை, காபி கிளப். எப்ப பாத்தாலும் ஏராளமா டீ, காபி சாப்பிட்டுக்கொண்டு  இருக்கிறார்கள்

மதுரை ஏ.ஏ ரோட்டில் டீகடை  வைத்திருந்த குருட்டுபிராசம்-ஷார்ட் சைட், ஆனால் கண்ணை டாக்டரிடம் காட்டமாட்டார். செக் செய்து கண்ணாடி போடவும் மாட்டார். கண்ணை அடிக்கடி இடுக்கி உற்றுப் பார்த்து தான் ஆளை அடையாளம் தெரிந்து கொள்வார்.  பெயர் பிரகாசம். மதுரை சல்லிகளுக்கு குருட்டு பிராசம் போடுவது டீதானா என்ற சந்தேகம்.
காலை எட்டுமணி. பிராசத்தின் கூரைக்கடையில் ஏற்கனவே ஆட்டுமூக்கன்,ஒத்தக்காதன்,மண்டைமூக்கன்,கொலாப்புட்டன் உட்கார்ந்து ரெண்டு வட்டை டீயை பகிர்ந்து குடித்துக்கொண்டு தினமலர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

’’யோவ் எம்.ஆர்.ஆர் வாசு செத்துட்டானாம்யா’’
”’ஓவர் குடி! தேங்கா சீனிவாசனும் வாசுவும் சந்திச்சி பேசிக்கிறதை   குமுதத்தில படிச்சேன்.தேங்காக்கிட்ட சொன்னான்.’எனக்கு நாலு பொண்டாட்டி இப்ப. ’ ’மூணு தானே மாப்பிளே’னு தேங்கா சீனிவாசன் கேக்கறான். வாசு’ இப்ப ஒண்ணு ஆசைப்பட்டுச்சி அதையும் முடிச்சிக்கிட்டேன்’னான்.

தொல்லை உள்ளே நுழைந்தான். டீக்கடையில் ஒரு பத்துபேர்.
நல்லா சவுண்டா தொல்லை சொன்னான்”யோவ் ப்ராசம்! குடிக்கிற மாதிரி ஒரு டீ போடுயா”
”இங்க குண்டி கழுவத்தான் டீ போடுறோம்”spontaneous ஆக குருட்டுப்பிராசம் பதில்.


சமயவேல் கவிதை-

வாருங்கள்

உனக்கும் எனக்கும்
எனக்கும் அவனுக்கும்
இவனுக்கும் உனக்கும்
கடைசியில் ஒன்றுமில்லை
என ஆனது

அதனாலென்ன வாருங்கள்
டீ குடிக்கப் போகலாம்
என்றேன் நான்.


தேவதேவன் கவிதை -

ஒரு காதல் கவிதை

கட்டிப்பிடித்து முத்தமிடவா முடியும்;
ஒரு காபி சாப்பிடலாம், வா..“If this is coffee, please bring me some tea; but if this is tea, please bring me some coffee.”
-Abraham Lincolnhttp://rprajanayahem.blogspot.in/2009/02/blog-post_07.html

http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_20.html

http://rprajanayahem.blogspot.in/2009/08/blog-post_17.html


http://rprajanayahem.blogspot.in/2012/07/carnal-thoughts-34.html

2 comments:

 1. அதே பேட்டியில் நாடகம் போடுபவர்களில் பர்ர்ப்பனருக்கும் அபார்ப்பனருக்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் பற்றியும் பேசிக் கொள்வார்கள்.

  முன்னவர் போடும் நாடகங்கள் கிண்டியைத் தாண்டாது எனச் சூளுரைப்பார்கள்.

  இப்பேட்டி வருவதற்கு சர்று முன்னால் சபாக்கள் பார்ப்பனர்களை மட்டுமே ஃபேவர் செய்கின்றன என நடிகை பிரமீளா வேறு குறை கூறியிருந்தார்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 2. மற்றவர்கள் எழுத கூச்சப்படும் விஷயங்களை அனாயசமாக spontaneously எழுதித் தள்ளுகிறீர்கள். அதிலும் ஒருவித ரசனை இருக்கத்தான் செய்கிறது.

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.