Share

Aug 27, 2012

பாலா படங்கள்

Feb 8, 2009


பாலா படங்களில் சில விஷயங்கள் Repeatஆகின்றன. Similarities தெரிகின்றன.எல்லா படங்களுமே Morbid வகையாய் இருக்கின்றன. கதாநாயகர்கள் ரொம்ப மூர்க்கமானவர்கள்.

நந்தா சூரியா, பிதாமகன் விக்ரம், நான் கடவுள் ஆர்யா மிகவும் பலசாலிகள். போலீஸ் இவர்களை கண்டு மிரள்கிறது .
நந்தா சூரியா, நான் கடவுள் ஆர்யா தாய்உறவு சீராக இல்லை. நந்தா சூரியா தாயின் உதாசீனம் கண்டு மன உளைச்சல் அடைகிறார். நான் கடவுள் ஆர்யாவின் உதாசீனம் தாயை கலங்கி தவிக்க விடுகிறது. நந்தா சூரியா மைனர் ஜெயில் என்றால் நான் கடவுள் ஆர்யா பால்யத்தை காசி மடம்.
கதாநாயகி சேது விக்ரமிடம் ,நந்தா சூரியாவிடம் , நான் கடவுள் ஆரியா விடம் அப்ரோச் செய்யும் காட்சிகள் ஓரளவு ஒத்த தன்மை கொண்டவை . பயந்து பயந்து பேசுவது.
பழைய பாடல்களுக்கு சூரியா சிவாஜி, சந்திரபாபு மாதிரி சிம்ரனுடன் ஆடுவார் .
நான் கடவுளிலும் எம்ஜியார், சிவாஜி, ரஜினி வேசமிட்டு பல பாடல்களுக்கு ஆடுகிறார்கள். கதாநாயகி நிறைய பழைய பாடல்கள் பாடுகிறார்.
பிதாமகன், நான் கடவுள் கதாநாயகர்கள் இருவருமே எதிரியை துவம்சம் செய்ய, சூழலை புரிந்து கொள்ள சிரமப்படுகிறார்கள். உசுப்பி விட்ட பிறகு தான் கொந்தளித்து எழுகிறார்கள்.இருவருமே உலக அளவுகோலின் படி மன நிலை பிறழ்ந்தவர்கள்.அப்படி தான் வேறுபட்ட கதாபாத்திரங்களையும் மீறி தெரிகிறார்கள்.
'சேது' படத்தில் நெஞ்சை உருக்கும் மனநிலை பிறழ்ந்த பைத்தியங்கள். 'நான் கடவுள் ' படத்தில் நெஞ்சை நிம்மதியில்லாமல் அடித்து காயப்படுத்தி ரணப்படுத்தி விடும் மறக்கவே முடியாத உடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்கள். எல்லா பிச்சைக்காரர்களின் முகங்களும் அவர்களின் ஊன வுருவங்களும் படம் பார்த்து விட்டு வந்த பின்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கின்றன.
கவிஞர் விக்கிரமாதித்தன் நடிகராக ஒரு நல்ல ரௌண்டு வந்து நிறைய சம்பாதிக்கவேண்டும். என் ஆசை இது.
வடிவேலை சில பல படங்களில் நிம்மதி இழக்கச்செய்யும் 'அந்த நான் கடவுள் முருகன் ' இந்த படத்தில் செமை நடிப்பு .
'நான் கடவுள் 'கதை யாருடையது ? பாலாவுடையது என்று தான் டைட்டில் வருகிறது . ஆனால் படத்திற்கு வசனம் எழுதிய ஆள் தன்னுடைய'ஏழாவது உலகம் 'நாவல் தான் 'நான் கடவுள் ' படத்தின் கதை என்று ஆங்கிலப்பத்திரிக்கையில் கூட குறிப்பிடுகிறார் . அப்படியானால் ' கதை ' தன்னுடையது என்று ஏன் பாலா போட்டுக்கொள்ள வேண்டும் .திரைக்கதை இவருடைய பெயரில் வருவது யதார்த்தமானது தான் . இயக்குனர் பெயரில் வருவது நியாயம் கூட .
பாலா ! Your whole future is before you! வயதும் காலமும் , திரையுலகின் மரியாதை,மதிப்பும் இன்னும் நிறைய உங்களிடம் இருப்பதால் இன்னமும் கூட தமிழ் திரையுலகத்தின் முதல் தர நம்பிக்கை நீங்கள் தான் !
Miles to go before you sleep!
இந்த 'நான் கடவுள் 'படத்தை எடுக்க மூன்று வருடம் தேவை தானா? ரொம்ப ஓவரா தெரியலே!
படத்தில் லாஜிக் ரொம்ப இடிக்கிறது.
மலையாள ப்ரோக்கரை துவம்சம் செய்யும்போது ஆர்யா ஒரு பார்வை பார்த்ததும் மலைகோயில் பக்தர்கள் ஓடி ஒளிவது, அந்த மலையாள ப்ரோக்கரை ஆர்யா என்ன செய்தார் என்பதை ஒருத்தர் கூடவா ஒளிந்திருந்து பார்க்க முடியாது. போலீஸ் ரொம்ப திணறி.......

தீவிரவாதிக்குரிய சகல கல்யாண குணங்களும் பாலாவின் நாயகர்களுக்கு இருக்கின்றன.நந்தா சூரியா வுக்கு ஒரு ராஜ்கிரண். நான் கடவுள் ஆர்யாவுக்கு ஒரு காசி சாமியார்.கதாநாயகி கடைசியில் கதாநாயகனால் கொலை செய்யப்பட காசி சாமியாரின் மூளை சலவை தான் காரணமா? காசி சாமியார் சொன்ன ஒரு வாக்கியம் கதாநாயகனின் நினைவிற்கு வந்தவுடன் கொலை செய்யும் கதாநாயகன். இது தான் தீர்வா ?

இப்படி காட்சி பார்க்கும்போது ஸ்ரீராம் சேனா, பஜ்ரங் தள தொண்டர்கள்,சத்ரபதி சிவாஜி ரயில் நிலைய கொலைகாரன் பாகிஸ்தான் தீவிரவாதி கசாப் எல்லோரும் ஏன் கொள்கை ஓநாய்கள் ஆகிறார்கள் என்பது நினைவுக்கு வருகிறது.

"கொலை " என்பது ஏனைய சினிமாக்காரர்களுக்கு "சாதாரண கத்திரிக்காய் " !பாலாவுக்கும் அப்படித்தான் என்பது அவருடைய படங்களிலிருந்து தெரியவருகிறது.
'பருத்தி வீரன்' அமீர் , 'சுப்ரமணியபுரம்' சசிகுமார் ஆகிய நம்பிக்கை நட்சத்திரங்களும் தங்கள் அடுத்த முயற்சிகளில் இந்த' கொலை 'என்ற தீர்வை உதறி தள்ளி நல்ல படைப்பை தரவேண்டும். படம் பார்ப்பவனின் கபாலத்தில் தாக்கி காயப்படுத்த இந்த 'கொலை'யை விட்டால் வேறு தீர்வே கிடையாதா?

'அன்பே சிவம்' படத்தில் நிறைய உரையாடல் கமல், மாதவன் இடையே அந்த படத்தின் கதையை செழுமைப்படுத்தியது. ' நான் கடவுள் ' தீம் 'அகம் பிரமாஸ்மி' பற்றி விளக்கம் ஏதும் இல்லாதது ஏமாற்றமாக இருக்கிறது. இதுவும் ஏதோ காசி சாமியாரின் ஒற்றை வாக்கிய மூளைசலவை போல பதிவாகிவிட்டது.5 comments:

 1. RP sir, you have mentioned lot of similarities between nanda and naan kadavul. But I cannot see the similarities in any of the instances mentioned, not even influence. Naan kadavul is one of the best products from Bala to Tamil cinema. Fantastic screenplay.

  ReplyDelete
 2. சேது, நந்தா பட இறுதிக் காட்சிகள் - சுற்றி இருபவர்களால் தானாகவே மனநிலை சரியில்லாதவனாக
  அடைபட்டு கொள்ளும் தனியாவர்த்தனம் மம்மூட்டியையும், அதே படத்தின் இறுதி காட்சியில் தாயே மம்மூட்டிக்கு விஷம் கலந்த உணவை கொடுத்து இருவரும் இறப்பதையும் ஞாபகபடுத்தின.

  ReplyDelete
 3. எனது நம்பிக்கை.. வெற்றிமாறன் :)

  பொல்லாதவன், ஆடுகளம்

  ReplyDelete
  Replies
  1. அசோக், நீங்கள் சொல்லுவதை நான் வழி மொழிகிறேன் - வெற்றி மாறன் படைப்புகள் அருமை!. பாலாவின் மிகைப்படுத்தப்பட்ட மனித சித்திரங்கள் நம்மைக் ' கொலையாய்க் கொன்று எடுக்கின்றன ' ( என்னதான் தமிழுக்கு அவார்ட் கிடைக்குது என்றாலும் ! )

   - கார்த்திக்.

   Delete
 4. உண்மையே, ஆனால் கசக்கிறது..
  யோசித்து பார்க்கும் பொழுது ஒவ்வொறு படத்திலும் ஒரேமாதரியான காட்சிகள் அமைக்கப் பட்டுள்ளது தெளிவாகிறது.
  எதிர்கால நட்சத்திர இயக்குநர்களும் கடினமான காட்சிகளை தற்கொலை, கொலை, உறுப்புகளை வெட்டுவது, கற்பழிப்பு காட்சி போன்ற வற்றை அப்பட்டமாக காட்சிபடுத்துவது தவிர்க்க (அ) குறைக்க வேண்டுகிறேன்.
  Sivaraj Mohan. S

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.