மீள்பதிவு 10-09-2008
ஆனந்த விகடன் 01.12.2010 இதழில் செய்தி ஆசிரியர் ப.திருமாவேலன் இந்தப் பதிவின் ஒரு பகுதியை தான் எழுதிய அழகிரி -25 ல் எடுத்துப் போட்டுக்கொண்டார்.
நன்றி:R.P.ராஜநாயஹம் என்று ஒரு வார்த்தை கூட இல்லாமல்.
என்னுடைய மாமனாரின் பிராந்தி கடையில் நானும் அப்போது பங்கு தாரர் . என் திருமணம் நிச்சயிக்கப்படும் முன்னரே அதற்கான பங்குதொகையை அந்த பிராந்தி கடையில் போட்டு விட்டேன் ( சபாஷ் என்கிறீர்கள் )நானே செய்துங்க நல்லூர் சாராயகடை ராஜநாயஹம் பிள்ளையின் பேரன் தான் . ஆனால் என்னிடம் குடி பழக்கம் கிடையாது .சிகரெட்டே கிடையாது என்பதனால் தான் எனக்கு என் மாமனார் பெண் கொடுத்தார் . ( 'என்னைய மாதிரி பயலுக்கு பொண்ணு கொடுக்ககூடாது மாப்பிள்ளை' -என் மாமனார் எனக்கு பெண் கொடுப்பதற்கு சொன்ன காரணம் இது ! )
ஒரு நாள் பிராந்தி கடையில் உட்கார்ந்து வியாபாரம் பார்த்து கொண்டிருக்கிறேன் . வருடம் 1985 . ஒரு கார் கடை முன் நின்றது . காரிலிருந்து இறங்கியவருடன் அவருடைய நண்பர்கள் சிலர் . கடைக்கு வந்து இவர் என்னிடம் 'கோல்கொண்டா Full இரண்டு பாட்டில் கொடுங்க சார் .' கடையில் வேலை பார்த்து கொண்டிருந்த இருவரையும் கொடுக்க சொன்னேன் . கடையில் உள்ள ஆள் அதை எடுக்கும் போதே , இவருடன் வந்தவர் ' அப்படியே அஞ்சு கல்யாணி பீர் ' என்றார் . குற்றாலம் போகிறார்கள் . அதை இன்னொரு ஆள் எடுத்துக்கொண்டிருந்த போது நான் இவரிடம் ' மதுரையிலேயே செட்டில் ஆகிட்டீங்க போலிருக்கே சார் ' என்றேன் .
லேசாக திடுக்கிட்டு அவர் ' என்னை எப்படி கண்டு பிடிச்சீங்க !'
'என்ன சார் முன்னாள் முதல்வர் மகனை கண்டு பிடிப்பது என்ன சிரமமான காரியமா ?'
மு.க .அழகிரி ! அப்போதெல்லாம் அழகிரி - ‘The less-discussed son of Karunanithi’ . மு.க. முத்து வும் , மு .க . ஸ்டாலின் ஆகிய பிள்ளைகள் தான் பாபுலர் . 1985 எனும்போது அதற்கு பத்து பன்னிரண்டு வருடம் முன் முத்து ,ஸ்டாலின் போல கனிமொழி கூட அப்போது சிறுமியாயிருக்கும் போதே பிரபலம் !
( சட்டசபையில் கேள்வி - கனிமொழி யார் ? ' கருணாநிதி பதில் ' என் மனைவி தர்மா சம்வர்த்தினி யின் மகள்' . -'தர்மாசம்வர்த்தினி யார் ? ' 'என் மகள் கனிமொழியின் தாயார் ')
இப்போது தான் கனிமொழியின் தாயார் ராஜாத்தியம்மாள் என அழைக்க படுகிறார் .
கருணாநிதியின் மகன் என நான் சொன்னது தான் தாமதம் .கடையில் வேலை பார்த்த இருவரும் திமுக காரர்கள் . வாயை பிளந்தது மூடவே இல்லை . யார் யார் . இவர் தான் மு .க . அழகிரி .
அழகிரி என்னைப்பார்த்து ' உங்கள் முகம் ரொம்ப Familiar ஆ இருக்கு சார் ' என்றார் சிந்தனையுடன் .
நான் உடனே ' I am a nameless face .. or a faceless name.. ' சிரித்துகொண்டே ' என்னை நீங்க எங்க பார்த்திருக்க போறீங்க ' என்றேன் .
அழகிரி ' இல்ல சார் . உங்க முகம் எனக்கு ரொம்ப தெரிஞ்ச முகம் மாதிரியே இருக்கு '
சந்தோசமாக எனக்கு கை கொடுத்து விட்டு விடை பெற்றவர் கடையிலிருந்து காரில் ஏறுவதற்காக நடக்கும் போதும் அவருடைய நண்பர்களிடம் ' இவரை பார்த்தா.. எனக்கு இவர் முகம் ரொம்ப Familiar ஆ தெரியுது ' என்று மீண்டும் சொன்னார் .
காரில் ஏறியதும் சந்தோசமாக கை காட்டி விடை பெற்றார் .
அடுத்து சில நாளில் மதுரை போன போது தற்செயல் ஆக நான் கண்ட காட்சி . அவருக்கு இதில் ஒன்றும் இழுக்கு இல்லை . மதுரையில் சாதாரணமாக யாருக்கும் நடக்க கூடியது தான் . இன்று இவர் அஞ்சா நெஞ்சனாக எட்டு கண்ணும் விட்டெரிய வாழ்கிறார் எனும்போது இதை யாரும் நம்ப மாட்டார்கள் .
மதுரை பஸ் ஸ்டாண்ட் விட்டு நான் வெளியே வரும் போது அழகிரி அங்கு அவசரமாக ஆட்டோ திருநகருக்கு விசாரித்து கொண்டிருந்தார். ஆட்டோகாரன் அடாவடியாக வாடகை கேட்பதை கண்டு விலகி நடக்க ஆரம்பித்தார். ஆனால் மதுரை ஆட்டோ காரன் கோபமாகி 'டே கண்ணாடி என்ன நீ பாட்டுக்கு பதில் சொல்லாம போரே .. பதில் கூட சொல்லாம ' என்று சத்தமாய் கேட்டான். இவர் சட்டை செய்யவில்லை . நானும் அவரிடம் பேச நினைத்து நெருங்கினேன் .சூழல் சரியில்லை . அவரும் என்னையும் கவனித்து விட்டு தான் வேகமாக நடந்து அந்த இடத்தை விட்டு அகன்றார் . அந்த ஆட்டோ காரன் திமுக காரனாக கூட இருந்திருப்பான் . இவர் யார் என்று தெரிந்திருந்தால் காலில் விழுந்திருப்பான் . சும்மாவே திருநகர் கொண்டுபோய் விட்டிருப்பான் . அவனுக்கு தெரியவில்லை.
மதுரையில் சவாரி படியவில்லை என்றால் இன்று கூட யாரையும் அவமானப் படுத்த ஆட்டோ காரர்கள் தயங்குவதில்லை . டிராப் செய்யும்போது கூட தகராறு செய்கிறார்கள்.
கருணாநிதியின் வாரிசுகளில் அழகிரி தான் வெள்ளந்தியானவர் என்று சாரு நிவேதிதா சமீபத்தில் ஒரு கேள்வி பதிலில் குறிப்பிட்டிருந்தார்.
http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_07.html
http://rprajanayahem.blogspot.in/2012/04/blog-post_13.html
http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_02.html
http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_01.html
http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_10.html
ஆனந்த விகடன் 01.12.2010 இதழில் செய்தி ஆசிரியர் ப.திருமாவேலன் இந்தப் பதிவின் ஒரு பகுதியை தான் எழுதிய அழகிரி -25 ல் எடுத்துப் போட்டுக்கொண்டார்.
நன்றி:R.P.ராஜநாயஹம் என்று ஒரு வார்த்தை கூட இல்லாமல்.
”திருட்டு வகையில் மகா மோசமானது அறிவுத்திருட்டு.
தீமைக் குணங்களில் மிக மோசமானது உலோபம்.”
-டி.என்.ராமச்சந்திரன்
..............என்னுடைய மாமனாரின் பிராந்தி கடையில் நானும் அப்போது பங்கு தாரர் . என் திருமணம் நிச்சயிக்கப்படும் முன்னரே அதற்கான பங்குதொகையை அந்த பிராந்தி கடையில் போட்டு விட்டேன் ( சபாஷ் என்கிறீர்கள் )நானே செய்துங்க நல்லூர் சாராயகடை ராஜநாயஹம் பிள்ளையின் பேரன் தான் . ஆனால் என்னிடம் குடி பழக்கம் கிடையாது .சிகரெட்டே கிடையாது என்பதனால் தான் எனக்கு என் மாமனார் பெண் கொடுத்தார் . ( 'என்னைய மாதிரி பயலுக்கு பொண்ணு கொடுக்ககூடாது மாப்பிள்ளை' -என் மாமனார் எனக்கு பெண் கொடுப்பதற்கு சொன்ன காரணம் இது ! )
ஒரு நாள் பிராந்தி கடையில் உட்கார்ந்து வியாபாரம் பார்த்து கொண்டிருக்கிறேன் . வருடம் 1985 . ஒரு கார் கடை முன் நின்றது . காரிலிருந்து இறங்கியவருடன் அவருடைய நண்பர்கள் சிலர் . கடைக்கு வந்து இவர் என்னிடம் 'கோல்கொண்டா Full இரண்டு பாட்டில் கொடுங்க சார் .' கடையில் வேலை பார்த்து கொண்டிருந்த இருவரையும் கொடுக்க சொன்னேன் . கடையில் உள்ள ஆள் அதை எடுக்கும் போதே , இவருடன் வந்தவர் ' அப்படியே அஞ்சு கல்யாணி பீர் ' என்றார் . குற்றாலம் போகிறார்கள் . அதை இன்னொரு ஆள் எடுத்துக்கொண்டிருந்த போது நான் இவரிடம் ' மதுரையிலேயே செட்டில் ஆகிட்டீங்க போலிருக்கே சார் ' என்றேன் .
லேசாக திடுக்கிட்டு அவர் ' என்னை எப்படி கண்டு பிடிச்சீங்க !'
'என்ன சார் முன்னாள் முதல்வர் மகனை கண்டு பிடிப்பது என்ன சிரமமான காரியமா ?'
மு.க .அழகிரி ! அப்போதெல்லாம் அழகிரி - ‘The less-discussed son of Karunanithi’ . மு.க. முத்து வும் , மு .க . ஸ்டாலின் ஆகிய பிள்ளைகள் தான் பாபுலர் . 1985 எனும்போது அதற்கு பத்து பன்னிரண்டு வருடம் முன் முத்து ,ஸ்டாலின் போல கனிமொழி கூட அப்போது சிறுமியாயிருக்கும் போதே பிரபலம் !
( சட்டசபையில் கேள்வி - கனிமொழி யார் ? ' கருணாநிதி பதில் ' என் மனைவி தர்மா சம்வர்த்தினி யின் மகள்' . -'தர்மாசம்வர்த்தினி யார் ? ' 'என் மகள் கனிமொழியின் தாயார் ')
இப்போது தான் கனிமொழியின் தாயார் ராஜாத்தியம்மாள் என அழைக்க படுகிறார் .
கருணாநிதியின் மகன் என நான் சொன்னது தான் தாமதம் .கடையில் வேலை பார்த்த இருவரும் திமுக காரர்கள் . வாயை பிளந்தது மூடவே இல்லை . யார் யார் . இவர் தான் மு .க . அழகிரி .
அழகிரி என்னைப்பார்த்து ' உங்கள் முகம் ரொம்ப Familiar ஆ இருக்கு சார் ' என்றார் சிந்தனையுடன் .
நான் உடனே ' I am a nameless face .. or a faceless name.. ' சிரித்துகொண்டே ' என்னை நீங்க எங்க பார்த்திருக்க போறீங்க ' என்றேன் .
அழகிரி ' இல்ல சார் . உங்க முகம் எனக்கு ரொம்ப தெரிஞ்ச முகம் மாதிரியே இருக்கு '
சந்தோசமாக எனக்கு கை கொடுத்து விட்டு விடை பெற்றவர் கடையிலிருந்து காரில் ஏறுவதற்காக நடக்கும் போதும் அவருடைய நண்பர்களிடம் ' இவரை பார்த்தா.. எனக்கு இவர் முகம் ரொம்ப Familiar ஆ தெரியுது ' என்று மீண்டும் சொன்னார் .
காரில் ஏறியதும் சந்தோசமாக கை காட்டி விடை பெற்றார் .
அடுத்து சில நாளில் மதுரை போன போது தற்செயல் ஆக நான் கண்ட காட்சி . அவருக்கு இதில் ஒன்றும் இழுக்கு இல்லை . மதுரையில் சாதாரணமாக யாருக்கும் நடக்க கூடியது தான் . இன்று இவர் அஞ்சா நெஞ்சனாக எட்டு கண்ணும் விட்டெரிய வாழ்கிறார் எனும்போது இதை யாரும் நம்ப மாட்டார்கள் .
மதுரை பஸ் ஸ்டாண்ட் விட்டு நான் வெளியே வரும் போது அழகிரி அங்கு அவசரமாக ஆட்டோ திருநகருக்கு விசாரித்து கொண்டிருந்தார். ஆட்டோகாரன் அடாவடியாக வாடகை கேட்பதை கண்டு விலகி நடக்க ஆரம்பித்தார். ஆனால் மதுரை ஆட்டோ காரன் கோபமாகி 'டே கண்ணாடி என்ன நீ பாட்டுக்கு பதில் சொல்லாம போரே .. பதில் கூட சொல்லாம ' என்று சத்தமாய் கேட்டான். இவர் சட்டை செய்யவில்லை . நானும் அவரிடம் பேச நினைத்து நெருங்கினேன் .சூழல் சரியில்லை . அவரும் என்னையும் கவனித்து விட்டு தான் வேகமாக நடந்து அந்த இடத்தை விட்டு அகன்றார் . அந்த ஆட்டோ காரன் திமுக காரனாக கூட இருந்திருப்பான் . இவர் யார் என்று தெரிந்திருந்தால் காலில் விழுந்திருப்பான் . சும்மாவே திருநகர் கொண்டுபோய் விட்டிருப்பான் . அவனுக்கு தெரியவில்லை.
மதுரையில் சவாரி படியவில்லை என்றால் இன்று கூட யாரையும் அவமானப் படுத்த ஆட்டோ காரர்கள் தயங்குவதில்லை . டிராப் செய்யும்போது கூட தகராறு செய்கிறார்கள்.
கருணாநிதியின் வாரிசுகளில் அழகிரி தான் வெள்ளந்தியானவர் என்று சாரு நிவேதிதா சமீபத்தில் ஒரு கேள்வி பதிலில் குறிப்பிட்டிருந்தார்.
http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_07.html
http://rprajanayahem.blogspot.in/2012/04/blog-post_13.html
http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_02.html
http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_01.html
http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_10.html
அறியாத தகவல்கள் ஐயா... நன்றி...
ReplyDeleteமீள் பதிவுகள் என்ற போதும், மீண்டும் மீண்டும் படித்தேன். இப்போது கூட அவர்கள் “நன்றி:R.P.ராஜநாயஹம் “ என்று சொல்லலாம். செய்வார்களா?
ReplyDeleteநல்ல பதிவு...அப்படி இருந்தவரு இப்ப இப்படி இருக்காரு.ரொம்ப லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டுதான்...
ReplyDeleteஎஙக தானைத் தலைவன் தங்கத் தலைவன் விஜய ராசேந்திரரையே தாண்டி போயிட்டீங்கோவ். எத்தினி வேலெ தான் செஞ்சிங்க தலைவா என் கணக்கு படியே பத்தை தாண்டுதே ஒரு லிஸ்ட் குடுத்தீங்கன்னா ரொம்ப நல்லாயிருக்கும்
ReplyDeletereally we missed you a lot my dear Sir. For the last one year I was checking your blog at least thrice in a week.When I found that you have come back after your hibernation it was like meeting an old friend after a long time and shouting long time no see thank you wise old man