Share

Jun 8, 2019

நம்பியின் தம்பி பேரன் சித்தார்த் தனஞ்செய்


தமிழின் முக்கிய எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பியின் தம்பி கிருஷ்ணன் வெங்கடாசலம். 

‘பயாஸ்கோப்’ என்று சிறப்பான ஒரு நூல் எழுதியிருக்கிறார். ஐம்பது பழைய திரைப்படங்கள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.
இன்னொரு சிறிய நூல் ’மாயலோகத்தில் சினிமாவுக்குப் போன சில படைப்பாளிகள்.’
இவருடைய ஒரு பேரன் சித்தார்த் தனஞ்செய்.
ஹாலிவுட் படங்களில் நடித்த இந்திய நடிகர்கள் என்றால் ஐ.எஸ்.ஜோஹர், கபீர் பேடி போன்ற நடிகர்கள் உடனே நினைவுக்கு வருவார்கள்.
’காந்தி’ படத்தில் நிறைய இந்திய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

ரோஹினி ஹட்டங்காடி, சயீத் ஜாஃப்ரி, ஓம்பூரி,அம்ரீஷ் பூரி, ரோஷன் சேத்.
ஸ்லம் டாக் மில்லியனர் படத்தில் அனில் கபூர் உட்பட இந்திய நடிகர்கள்.
பென் கிங்க்ஸ்லி கூட ஆங்கிலோ இந்தியன்? இவருடைய அப்பா ஒரு குஜராத்தி.
ஆங்கில படங்களில் நடிப்பது என்பது ஒரு ஸ்டேட்டஸ். ஜெயலலிதா ஆங்கிலப்படம் ஒன்றில் நடித்தார். சிவாஜி மகன் பிரபு ஆங்கிலப்படமொன்றில் நடித்தார் என்றெல்லாம் சொல்லப்படுவதுண்டு. அவையெல்லாம் ஹாலிவுட் படங்களல்ல.
கிருஷ்ணன் வெங்கடாச்சலத்தின் பேரன் சித்தார்த் தனஞ்செய் இப்போது அமெரிக்க நடிகர். ராப் பாடகர்.

இவர் ராப் பாடல்கள் அமெரிக்காவில் பிரபலமாகியதால் ஹாலிவுட்டில் ’பேட்டி கேக்ஸ்’ படத்தில் 2017ல் நடித்திருக்கிறார்.
ஹாலிவுட் படங்களில் தலை காட்டுவது பெரிய விஷயமா? பேட்டி கேக்ஸில் சித்தார்த் தனஞ்செய் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது தான் சிறப்பு.
‘Dhananjay the first’ என்று ராப் பாடல்களை யூட்யுபில் பார்க்கமுடியும்.
Patti Cake$ கேன்ஸ் ஃபெஸ்டிவலுக்கு அனுப்பப்பட்ட படம். சன்டேன்ஸ் ஃபெஸ்டிவலில் பங்கு பெற்றபடம். Musical movie.

ஒரு தமிழ் நடிகர் ஹாலிவுட் படத்தில் நடித்திருக்கிறார் என்பது சந்தோஷமான விஷயம்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.