மனோரமா பேசும்போது சொன்ன ஒரு விஷயம்.
சிவாஜிகணேசனுக்கு
உச்சத்தில் அவர் இருந்த காலங்களில் 1960களில் அவருக்கு வெறித்தனமான ரசிகர்கள்
இருந்தார்கள். ஸ்டுடியோவிலோ,அவுட் டோரிலோ ஷூட்டிங் நடக்கிற நேரங்களிலோ அவரை பார்த்த
பரவசத்தில் ஆர்வத்தோடு ஒரு கும்பலாக,குழுவாக
ரசிகர்கள் நெருங்கும்போது தன் அல்லக்கைகளிடம் “டேய், அவனுங்கள என் கிட்ட வர விட்டுடாதீங்கடா,அப்படியே
நகத்தி கொண்டு போயிடுங்கடா…” என்பாராம்.
”சிவாஜிக்கு மனுஷ
வாடையே பிடிக்காது”- மனோரமா!
08-01-1994
ஜெமினிகணேசன் பேச்சில் எதைப்பற்றியும் சுலபமாக அபிப்ராயம்
சொல்பவராய் இருந்தார் என்பது தான் உடனே என் மனதுக்குப் பட்ட விஷயம்.
இரண்டு வருடம் கழித்து
அவ்வை சண்முகியில் நடித்தார்.
நான்கு வருடம் கழித்து தான் ஜுலியானாவை திருமணம் செய்தார்.
”உங்க மருமகன் ஜிஜிமாப்பிள்ளை ஸ்ரீதர் ராஜன் படம் ஏதும் பண்றாரா..என்ன செய்றார்?”
ஜெமினி கணேசன் சலிப்பான பதில் : “இருக்கான்…. He is a BLACK
MARK in my life…”
ராசுக்குட்டியில் நடித்த ஐஸ்வர்யா பற்றி விசாரித்தார்.
நான் சொன்னேன் “ A spoiled child”
ஜெமினி உடனே “ அவ அம்மா லக்ஷ்மி … அவ … என் வாயால
சொல்லக்கூடாது…”
டி.வி யில் அப்போது ஒரு சானலில் சிவாஜியும் இவரும் சாவித்திரியுடன் நடித்த ’பாசமலர்’ படத்தில் தொழிலாளி ஜெமினியுடன் பேசிக்கொண்டே முதலாளி சிவாஜி கோபத்தை அடக்க முடியாமல் வெறி மின்னும் கண்களுடன் பென்சில் சீவும் காட்சி-அதை ரசித்துப் பார்த்துக்கொண்டே மாடியேறிய ஜெமினி “ சிவாஜி கணேசன் என்னை விட எட்டு வயசு இளையவன் தான்...ஆனா நடிகன்னா அவன் தான் நடிகன்!”
என் பெரிய மாமனார் S.M.T அங்குராஜிடம் சொன்னார்-
”அங்குராஜ்! உங்க தம்பி மருமகன் ராஜநாயஹம் என்னமா பேசறார்!ஆறு மணி நேரம் போனதே தெரியல”
“ மருமகன் சினிமாவில இருந்தவங்க”
எனக்கு இப்படி யாராவது என்னைப் பற்றி சொன்னால் எரிச்சல் தான்
வரும்.
ஜெமினியும் ரொம்ப எரிச்சலாகி “இருக்கட்டுமே! சினிமாவில எவன் இல்ல..எவன் எவனோ இருக்கான்.சினிமாவில
எவன் தான் இல்ல. இந்த method of speaking
எந்த சினிமாக்காரன் கிட்ட இருக்கு.” என்றவர் நான் விடை பெற்றவுடன் சொன்னாராம். “ அங்குராஜ்!
உங்க தம்பி மருமகன் ராஜநாயஹம்! டைம் சரியில்ல. இல்லன்னா சினிமால பெரிய ஆளா வந்திருப்பான்!”
மறுநாள் காலை ஆறுமணிக்கு மாடியிலிருந்து கீழே இறங்கி கிச்சனுக்கு
வந்து உட்கார்ந்து காபி சாப்பிடும்போது அதே வார்த்தைகள்- “ உங்க தம்பி மருமகன்.. டைம் சரியில்ல. இல்லன்னா ராஜநாயஹம் சினிமால பெரிய ஆளா வந்திருப்பான்!”
காரில் ஏறி கிளம்பி கிருஷ்ணன் கோயில் அருகே மீண்டும் திருவாய்
மலர்ந்தாராம்- “ ராஜநாயஹத்துக்கு டைம் தான் சரியில்ல...”
http://rprajanayahem.blogspot.in/2008/06/blog-post_1413.html
http://rprajanayahem.blogspot.in/2012/09/blog-post_25.html
Do write more on actress luxhmi:)
ReplyDeleteரொம்ப அருமை சார்,ஓவ்வோன்றையும் இருமுறை படிக்க வைத்த எழுத்து,இன்று ஒரு பதிவு தானா?என பார்க்க வைத்தது
ReplyDeleteSeems you don't have good impression about Sivaji..That reflected in another post too (scolding prabhu)....and u r always writing good things about MGR..
ReplyDeleteRaj
http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_4726.html
ReplyDeletehttp://rprajanayahem.blogspot.in/2012/03/blog-post_30.html
ReplyDeletehttp://rprajanayahem.blogspot.in/2012/05/blog-post_08.html
Sorry Sir for my previous comment.You are not biased..Please keep writing..
ReplyDeleteRaj
In hollywood, bisexuality is very common..I hope its same in indian film industry too nowadays..would u mind writing about that??
ReplyDeleteRaj
http://rprajanayahem.blogspot.in/2012/06/carnal-thoghts-32.html
ReplyDelete