Share

Sep 27, 2012

சீர்காழி கோவிந்தராஜன்

Jul 24, 2009


சீர்காழி கோவிந்த ராஜன் குரலில் மெலடி கிடையாது. முரட்டு குரல்.

டிஎம் எஸ் குரலில் உள்ள 'கனிவு' 'தண்மை' 'குழைவு 'சீர்காழியிடம் அறவே கிடையாது.

பாடும்போது ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு விடுவார்.

நான் பாடுவதில் மேதையாக்கும் என்ற கர்வம் குரலில் வெளிப்படும்.

தமிழ் உச்சரிப்பு சுத்தம். ஆனால் தேவைக்கு மேல் அழுத்தம் கொடுத்து வார்த்தைகளை கடித்து விடுவார்.

அந்த காலத்தில் பல தமிழ் படங்களில் கதாநாயகி கலங்கி தவித்து தக்காளி விக்கும்போது
 சீர்காழி செயற்கை உருக்கத்துடன் "துள்ளி வரும் சூறை காற்று துடிக்குதொரு தென்னம்தோப்பு இல்லை ஒரு பாதுகாப்பு இது தானா இறைவன் தீர்ப்பு......காவல் இல்லா கன்னி என்றால் கண்கலங்கும் வாழ்க்கை உண்டு ''என்று கதறுவார் ." நீதி மத யானை வீதிவழி சென்றதம்மா !" என கேவுவார்.சிகரட் பிடிக்க ,ஒண்ணுக்கு அடிக்க பலரும் எழுந்து போவார்கள்.

சில பாடல்களை சவால் போல பாடி விடுவார்.
டிஎம் எஸ் " முருகா என்றழைக்கவா? முத்துக்குமரா என்றழைக்கவா?...எப்படி அழைப்பேன் உன்னை எங்கே காண்பேன் " என்றுபக்திபாடல் உருக்கமாய் பாடியதற்கு
சீர்காழி எதிர்ப்பாட்டு " முருகா என்றழைத்தால் என்ன ? கந்தா என்றழைத்தால் என்ன? கார்த்திகேயன் என்றால் என்ன?...எப்படியும் அழைக்கலாம்! எங்கிருந்தும் காணலாம் "
இதில் பக்தி கூட வேடிக்கையாக ஆகும்படி கூச்சலாக சீர்காழி ஆக்கியிருந்தார்.

சீர்காழியின் நளினமற்ற அபத்த கூப்பாடு க்கு ஒரு உதாரணம்.
'திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் ' பாட்டில்
டிஎம் எஸ் குரலை அமுக்கி மெலடி இல்லாமல் கூப்பாடு போடுவார்.


என்றாலும் கூட சீர்காழி பல பாடல்களை கணீரென்று தன் வெண்கல குரலில் அற்புதமாக பாடியிருக்கிறார்.
அந்த பாடல்கள் அவருக்கானவை மட்டுமே.அப்படி சில பாடல்கள் கீழே :

1. அமுதும் தேனும் எதற்கு ? நீ அருகினில் இருக்கையிலே எனக்கு "

2. பணம் பந்தியிலே ! குணம் குப்பையிலே ! இதை பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே !

3. எங்கிருந்தோ வந்தான் ! இடைச்சாதி நான் என்றான் !

4 . தேவன் கோயில் மணியோசை நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை

5 . ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே.

6.உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா !

7.மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா !

8.ஒற்றுமையாய் வாழ்வதாலே என்றும் நன்மையே

9.தட்டு தடுமாறி நெஞ்சம்
 கை தொட்டு விளையாட கெஞ்சும்
சிட்டு முகம் காதல் கொள்ளும்.
கண் பட்டு மலர் மேனி துள்ளும்.

10. சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடை உடுத்தி (பக்தி பாடல் )

11 .அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்.

12.கண்ணிலே நீர் எதற்கு காலமெல்லாம் அழுவதற்கு.

13. ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா

14. கல்லிலே கலைவண்ணம் கண்டான்

15 .நீயல்லால் தெய்வம் இல்லை எனது நெஞ்சே நீ வாழும் எல்லை முருகா ( பக்தி பாடல)


இரண்டு டைட்டில் சாங்க்ஸ். தியேட்டரில் கைத்தட்டு வாங்குவார்.
1.காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாரும் இல்லை

2.வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர் நீச்சல்.

சீர்காழியை முழுமையாக ஒதுக்கவே முடியாது.Once in a while, A consistency comes forward that is both sublime and foolish!

இந்த வார்த்தைகளை சீர்காழி கோவிந்தராஜன் என்று இல்லை. 'அரசியல்' துவங்கி எந்த துறையிலும் கலை,இலக்கியம், இசை, நடிப்பு என்று எந்த துறையிலும் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்த பலரை பற்றி எண்ணி பார்க்கும்போது சொல்ல வேண்டியிருக்கும்.

 இந்திய திரை பின்னணி பாடகர்களில்
 முழுமையான பி பி ஸ்ரீநிவாஸ்,கிஷோர்குமார் பாடல்கள் பற்றி மட்டுமே மேற்கண்ட மேற்கோளை பிரயோகிக்க முடியாது. (இவர்களில் பிபிஎஸ் ஒருகாலகட்டத்தில் மார்க்கெட்டை இழந்து விட்டவர் என்றாலும் கூட )

8 comments:

 1. "சிரிப்பு தான் வருகுதையா,
  உலகைக் கண்டால் சிரிப்பு தான்....." -'பொன்வயல்' படத்தில் சீர்காழி கோவிந்தராஜனின் இந்த பாட்டைக் கேட்ட ஜி.ராமநாதன் தான் இசை அமைத்துக் கொண்டிருந்த 'கோகிலவாணி' படத்தின் பாடல்களை எல்லாம் பாட அழைத்தாராம்.
  1. சரச மோகன சங்கீதாம்ருத சாரலில்....
  2.திருவே என் தேவியே வாராய், தேனார் மொழி...
  3.அழகோடையில் நீந்தும் இள அன்னம்... போன்ற அருமையான பாட்டுக்களைத் தேடி கேட்டுப்பாருங்கள்.
  சகாதேவன்

  ReplyDelete
 2. RP Sir, I am very happy to note that you have similar interests (PBS, thi.jA). Yesterday I recorded "kAthal nilavE" one more time as it is your favourite song.

  Keep writing. We enjoy your blog.

  ReplyDelete
 3. Dear RPR:

  What a blunt assessment! (I remember a joke by a friend that his dad would shout as soon as Sirkazhi's song played on the radio to shut it off lest it should get damaged.)

  I am glad you mitigated it with the list of Sirkazhi's golden songs. I want to add a couple more to this list:

  1) பாலாற்றில் சேலாடுது
  2) சமரசம் உலாவும் இடமே

  Ravi

  ReplyDelete
 4. பெரும்பாலும் சோகக் கட்டத்தில் சுடுகாட்டில் எல்லாம் ஓ் என்று கத்தி பாடி ரசிகர்களை கதி கலங்க அடித்ததால் அவருக்கு மக்களிடையே ‘ மயான பாகவதர்’ என்ற பெயர் இருந்தது. அவர் மகன் சிவ சிதம்பரமும் அப்பனை போலவே கதி கலங்க அடிப்பதால் ஓரம் கட்டி விட்டனர்.

  ReplyDelete
 5. தவறான ஒப்பீடு என்பது எனது கருத்து. திரை இசைக்கு ஜாம்பவான் டிஎம்எஸ்தான். தமிழிசைக்கு சீர்காழிதான் என்பது பரவலாக அனைவரும் ஏற்றுக்கொண்ட கருத்து.

  காதல் பாடல்களைப் பாடவோ நளினமான சினிமா ரகப்பாடல்களைப் பாடவோ சீர்காழியையோ சுந்தரம்பாளையோ கூப்பிடப்போவதில்லை. அவர்களுக்கென்று பாடல்கள் உண்டு.

  உப்புமா பாகவதர் என்கிற அளவிற்கு உங்கள் எழுத்தில் இல்லாவிட்டாலும் இதற்கு பின்னூட்டம் இட்டுள்ளவர்களின் எள்ளலில் உள்ளது. எனது ஆதங்கம் சீர்காழியைக் குறை சொல்பவர்கள் குறைந்த பட்சம் சங்கீத ஞானம் கொண்டவர்களாக இருக்கவேண்டும். அனானியாக பதில் போடும் இழிநிலையில் உள்ளோர் பாத்ரூமில் பாடினாலும் யாரும் கேட்கப்போவதில்லை.

  தமிழிசையில் அவரது பங்கு மறக்க இயலாதது. சங்கீதம் சாப்பாடு மாதிரி. எல்லாருக்கும் எல்லாம் பிடிக்கும் என்பது சொல்ல இயலாது.

  வயதில் சிறியவன். என்றாலும் கருத்தைக் கூற விரும்பினேன்.

  ReplyDelete
 6. RPR,

  வெண்கலக் குரலோன் சீர்காழியின் குரலில் "அபிராமி அந்தாதி" பாடல்களைக் கேட்பவர்கள் அவரைப் பற்றிய உங்களின் கருத்துக்களை நிச்சயம் மறுப்பார்கள்.

  I would recommend you to hear hymns on Abirami sung by Dr.Seergali Govindarajan.

  More over, சிங்கத்திடம் "கர்ஜனையை" தான் எதிர்பார்க்க முடியும். அதனிடம் கிளியின் பேச்சை எதிர்பார்க்க முடியாது. தெலுங்கு கீர்த்தனைகள் வியாபித்திருந்த சபாக்களில் தமிழ் இசை முழக்கி கூட்டத்தை ஈர்த்த சாதனைக்கு உரியவர் சீர்காழி.

  Though your post ends with a good note on Seergali, the comments disprove your final note and this post has been taken granted by the comment writers to ditch Seergali.

  Anyways Thank you for listing his everlasting Golden songs.
  ReplyDelete
 7. திரு ராஜநாயகம் சார் அவர்களுக்கு

  வாழையடி வாழை படத்தில் - ஸ்வீட்டி ஹெலோ ஸ்வீடி - பாடல் திரு எஸ் வீ .கிருஷ்ணமுர்த்தி என்று நினைவு -
  'அங்கமெல்லாம் தங்கமோ ' பாடல் தான் - சீர்காழி பாடியது என்று நினைவு

  ReplyDelete
 8. மிகவும் நன்றி கிருஷ்! தவறை பதிவில் திருத்தி விட்டேன்!

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.