Share

Sep 7, 2012

Coetzee, Camus, Kafka


J.M.Coetzee


ஜே எம் கூட்சீ  இரண்டு முறை புக்கர் பரிசு வாங்கினார் . 2003 ல் நோபல் பரிசு வாங்கிவிட்டார் .
Great writers are the saints for the godless !
இவருடைய Disgrace நாவல் படித்தது முக்கிய அனுபவம். கீழே வைக்க முடியாத பிரதியின்பம் தரக்கூடிய நூல்கள் சில . அவற்றில் இந்த நாவல் முதல் வரிசையில் வைக்கப்பட வேண்டியது . The Master of Petersburg நாவல் நெஞ்சை பிழிந்து விடக்கூடிய துயரத்தை சாரமாக கொண்டது . கதை நாயகன் ரஷ்ய எழுத்தாளர் Dostoevsky யின் புத்திர சோகம் பற்றியது . என்றாலும் கூட்சீ இதை எழுதியதற்கு காரணம் கூட்சீ யின் மகன் 23 வயதில் ஒரு விபத்தில் இறந்ததால் தன்னுடைய புத்திர சோகத்தையே எழுதினார் .
தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர் . ஆஸ்ட்ரேலியா வில் இப்போது வாழ்கிறார் .
சிகரெட் கிடையாது . குடிபழக்கம் இல்லாதவர் . ஆச்சரியமாக மாமிசம் சாப்பிடுவது கூட கிடையாது . இப்படி ஒரு வெள்ளை எழுத்தாளர் !
இவருடைய நுட்பமான பார்வை ரொம்ப அபூர்வமானது .
வண்டியிழுக்கும் குதிரை யின் பார்வையை கூட்சீ அனுமாநிப்பதை உதாரணமாக சொல்லலாம் . ' வண்டிகளை இழுப்பதற்காக இவ்வுலகத்தில் தான் பிறந்திருக்கிறோம் என்பதே குதிரைக்கு தெரியாது .அதற்கு அந்த புரிதல் இல்லை . ஏதோ சவுக்கடி படுவதற்காக தான் பிறந்திருக்கிறோம் என்று அது நம்புகிறது . அடி தன் மேல் கடுமையாக விழும்போது தான் தப்பி ஓடி விடக்கூடாது என்பதற்காக தான் கட்டப்பட்டுள்ள மாபெரும் பளு தான் வண்டி என்றே தான் குதிரை நம்பிகொண்டிருக்கிறது .'
Dostoevskyயை நாம் உயிருடன் தரிசிக்கும் பிரமையை The Master of Petersburg நாவல் ஏற்படுத்திவிடுகிறது . அவருடைய படைப்புகளை படித்தவர்களுக்கு இந்த நாவல் முழு அனுபவம் ஏற்படுத்துவதுடன் அவரை படிக்காதவர்களுக்கு Dostoevskyயை அறிமுகம் செய்கிறார் கூட்சீ ! இந்த நாவல் தமிழில் சா . தேவதாஸ் மொழிபெயர்ப்பில் வந்திருக்கிறது .

Disgrace நாவல் தெனாப்பிரிக்க சூழல் . இந்த நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டால் இங்கே கூட்சீ யார் என நன்கறிய முடியும் . ஆங்கிலத்திலேயே படிக்க கிடைத்தவர்கள் பாக்கியவான்கள் .
கவிஞர் பைரன் பற்றி இந்த நாவலில் கூட்சீ பேசுமிடங்கள் மறக்க முடியாது .
டேவிட் லூரி என்ற ஒரு ஆங்கில பேராசிரியர் தான் கதை நாயகன் .
லூரி , லூசி , பீட்ராஸ் ,ரோசலின் , எல்லோரும் இன்னும் நினைவில் ஜீவனோடு நிற்கிறார்கள்.

Disgrace நாவலில்
' ஒரு ஆண் நாய் . பெண் நாய் வாடையை உணரும்போது , அண்மையில் பெண் நாய் வந்திருப்பதை தன் மோப்ப சக்தியால் உணரும்போதேல்லாம் அந்த ஆண் நாய் அதன் சொந்தக்காரர்களால் கடுமையாக அடிக்கப்படுகிறது . செக்ஸ் அதற்கு மறுக்கப்படுகிறது . இது போல அந்த வில்லாவின் வெளியே பெண் நாய் வரும்போதெல்லாம் தொடர்ந்து கடுமையாக நாய்க்கு அடி . என்ன செய்வதென்றே அந்த நாய்க்கு தெரியவில்லை . ஒரு கட்டத்தில் பெண் நாய் வாடை இதற்கு உணர கிடைத்தவுடன் தன் காதுகளை விரைத்து,அதன் வால் அதன் பின்னங்கால்களுக்கு இடையில் வைத்து தன் குறி மறைத்து ,ஊளையிட்டு அழுதுகொண்டே தன்னை அடியிலிருந்து காப்பாற்றிக்கொள்ள தோட்டத்தில் ஓடி ஒளிந்துகொள்ள இடம் தேடும் . அந்த நாய் ,பெண் நாய் மீது தனக்கு ஏற்படும் இயற்கையான இச்சையையே வெறுக்க ஆரம்பித்து விடுகிறது .'

.......................


Albert Camus’s
‘The Fall’

ஜெகம் பிராடு எழுத்தாளன் இருக்கானே , அவன் சுந்தர ராமசாமி செத்தப்ப சாப்பிடாம தூங்காம பேலாம எழுதின புத்தகத்திலே 'அல்பெர் காம்யுவை எனக்கு பிடிக்காது 'ன்னு எழுதியிருக்கான் .
அதை படிச்சப்ப எனக்கு ஒரு ஞாபகம் வந்துச்சு . மௌன்ட் ரோட்டில் அந்த காலத்தில் ஒரு பிச்சைக்காரன் ஒக்கார்ந்திருப்பான் . அடிக்கடி அவன் சத்தம் போட்டு சொல்வான் ' ஸ்விட்சர்லாந்து எனக்கு பிடிக்காது . அங்கே நான் போக மாட்டேன் . போகவே மாட்டேன் '
பாவம் ஜெகம் பிராடு கூட இந்த பிச்சைக்காரன் மாதிரி தான் .

ஆல்பெர் காம்யு வின் " வீழ்ச்சி " நாவலில் ஒரு காட்சி .

"சுவர்களால் கட்டப்பட்ட ஒரு பெட்டி போன்ற ஒன்று . அதற்குள் சிறைகைதிகள் ஆடாமல் அசையாமல் நிற்பது மட்டுமே சாத்தியம் . கைதிகளின் முகங்கள் மேலே காணும்படி கதவின் உயரம் தாழ உள்ளது . அந்த பாதையில் செல்லும் சிறை அதிகாரிகள் கைதியின் முகத்தில் காறி உமிழ்ந்து விட்டு போவார்கள் . சங்கிலியால் நன்கு பிணைக்கப்பட்ட கைதி தன் முகத்தில் வழியும் எச்சிலை துடைக்க வழியேதும் கிடையாது . ஆனால் அதிகாரிகள் காறி உமிழும்போது கைதிகள் தங்கள் கண்களை மூடிக்கொள்ள அனுமதிக்கபட்டிருந்தார்கள் ."

இந்த நாவல் மனிதவியல் ,உளவியல் பற்றி முன் வைத்த கேள்விகள் முழுமையாக அதிக பட்சமாக இருக்கிறது .
போப் தன் சிம்மாசனத்தை விட்டு , வாடிகனை விட்டு கிளம்பி அயோக்கியர்கள் இடையில் வாழவேண்டும் . நாம் சீக்கிரமாக ஒரு புது போப் தேர்ந்தெடுக்க வேண்டும் .
பரிசுத்தம் , நீதி இரண்டுமே ஒன்று சேர முடியாத படி பிரித்து வைக்கப்பட்டுள்ளன . பரிசுத்தம் சிலுவையில் அறையப்பட்டும் நீதி என்பது அலமாரியிலும் தெரியகிடைக்கின்றது .

ஒரு மனிதன் தன் பொய்களை பற்றி ஒப்புக்கொள்ளாமல் மரணமடைய கூடாது .

சந்தோசம் உள்ளவனாக இருக்க வேண்டுமானால் அடுத்தவர்களை பற்றி ரொம்ப பொருட்படுத்தாமல் இருக்கவேண்டும் .



க்மன்ஸ் சொல்கிறான் " தூள் பிகரை பார்க்க வாய்ப்பு கிடைக்கும் போது நான் ஐன்ஸ்டீன் உடன் பத்து சந்திப்பை  ஒதுக்கியிருப்பேன் . அந்த பெண்ணுடன் பத்து சந்திப்பிற்கு அப்புறம் தான் ஐன்ஸ்டீன் பற்றியோ அல்லது ஒரு நல்ல முக்கியமான புத்தகத்தையோ விரும்பி எண்ணுவேன் ."
.........


Franz Kafka’s

“First Sorrow”


சில கதைகள் படித்தால் மனதில் உட்கார்ந்து விடும் .
Kafka வின் கதை “First Sorrow”

Kafka வுக்கும் Nietzsche வுக்கும் திருமண வாழ்க்கை கொடுத்து வைக்கவில்லை பாருங்கள் . இரண்டு பேருக்குமே நிச்சயம் நடந்து கல்யாணம் நடக்கவில்லை .

'முதல் துயரம்' என்ற Kafka வின் கதை தமிழில் கூட ஆர் .சிவகுமார் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு 'தொனி' என்ற சிற்றிதழில் வெளிவந்தது .
பார் விளையாட்டு கலைஞன் பற்றிய கதை .
பார் விளையாட்டு என்பது அடைவதற்கரிய மனித சாதனைகளில் ஒன்று .
இந்த பார் கலைஞன் ஒற்றை பாரில் விளையாடுபவன் . அவனுக்கு திடீரென்று
 ' இனி எப்போதும் எதிர் எதிராக இருக்கும்படியாக இரண்டு பார் தன்னுடைய நிகழ்ச்சிகளுக்கு கட்டாயம் தேவை என்று தோன்றி விடுகிறது . ஒற்றை பாருக்கு பதிலாக இரண்டு பார் இருப்பது நிகழ்ச்சியை இன்னும் பிராமாண்டமாக்கும் . அதன் விறுவிறுப்பு , கணம் , சுவை கூடிவிடும் என அவனுக்கு நிச்சயமாகி ஒரு நிலையற்ற தன்மையை அவனுக்குள் உருவாக்குகிறது .
'என் கைகளில் ஒரே ஒரு பார் . நான் எப்படி இனி தொடர்ந்து வாழ முடியும் ?'
“Sense of incompleteness”
இப்படி அவனுக்கு மனதில் பட்டு விட்ட பிறகு அவனை அந்த எண்ணம் அமைதியாக இருக்க விடுமா ?
அவனுடைய' இருப்பு 'அச்சுறுத்தலுக்கு இனி உள்ளாவதை தவிர வேறு வழியேது .
துயரத்தின் முதல் ரேகைகள் !


 

http://rprajanayahem.blogspot.in/2008/10/willa-cather-s-my-antonia.html


http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_3239.html

2 comments:

  1. Albert Camus’s ‘Stranger’ - அந்நியன் - நாவல் குறித்து எழுத இயலுமா. பல இடங்களில் அது குறித்து மேற்கோள் காட்டப்பட்டிருப்பதை படித்திருக்கிறேன். அந்த நாவல் எதைப்பற்றி - ஒரு அறிமுகம் தாருங்களேன்.
    -ஜெகன்

    ReplyDelete
  2. அட! Willa Cather ‘s My Antonia’ - பதிவில் படிக்கவேண்டிய நூல்களில் Albert Camus - The Outsider (The Stranger)ம் இருக்கிறது. அறிமுகம் ப்ளீஸ்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.