Share

Sep 3, 2012

கி.ராஜநாராயணன் நாட்குறிப்பிலிருந்து

கதை சொல்லி 15வது இதழ்,ஏப்ரல் 2004
கி.ரா.நாட்குறிப்பிலிருந்து

R.P.ராஜநாயஹத்திடமிருந்து இன்று திடீரென்று தொலைபேசியில் குரல் வந்தது.

எங்கெயிருந்து பேசுறீக?

 திருப்பூரிலிருந்து.

திருப்பூருக்கு எப்பொப் போனீக ?

இப்போ திருப்பூரில தாம் இருக்கேன்.

திருச்சி என்ன ஆச்சி ?

திருச்சி என்னெக் கை விட்டுட்டது.


எனக்குப் பழக்கமானவர்களில் ராஜநாயஹம் முக்கியமானவர்.
சுவாரஸ்யமான ஆள்.பழகிவிட்டால் அவரை மறக்கவே முடியாது.அவர்
நம்முன் உட்கார்ந்து பேச ஆரம்பித்தால் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
பேச்சாளர்கள் என்றால் இவர்கள் தான் மெய்யான பேச்சாளர்கள். அரசியல்
கட்சிக்காரர்கள் இப்படி ஆட்களை ஏன் தங்கள் கட்சியின் முழுநேரப்
பேச்சாளர்களாக வைத்துக்கொள்ளவில்லை என்று கேட்கத்
தோன்றுகிறது!ஆனால் இந்த இவர்களுக்கு அரசியல் பேச வராது.
முழுப்பேச்சும் சமூகம் பற்றியது தான். அதுவும் முக்கியமாகத் தங்கள்
வாழ்க்கையில் நடந்த பிரச்னைகள், சம்பவங்கள்,தாங்கள் எப்படித் தோற்றோம் என்பதைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்ல அரசியல்காரர்களால்
முடியுமா? இவர்களால் முடியும். இந்தத் தோற்ற கதையைச் சொல்லுவதில்
தனம் குமாரசாமி என்று ஒரு நண்பர் இருக்கிறார்.அவரை யாரும் பீட்
பண்ணமுடியாது.அவரும் சிரித்து நம்மையும் சிரிக்க வைப்பார். இது
சிரிக்க வைக்கும் சமாச்சாரம் இல்லை தான். ஆனாலும் என்ன செய்ய
முடியும்? நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டே இருக்க முடியுமா?
 சொல்லி அடுத்தவர்களையும் வருத்தப்பட வைக்க ஆரம்பித்தால், ”நாம்”
தூரத்தில் வருவதைப் பார்த்தாலே ஓட்டம்பிடிக்க ஆரம்பித்து
விடுவார்களே.

                    இவர்களை வாழ்க்கை ஓடஓட அடித்து விரட்டுகிறது,எங்கேயும்
எதிலும் தாக்குப் பிடித்து நிற்க முடியலை இவர்களால்.”காலா அருகில்
வாடா ஒன்னைக் காலால் எத்தி மிதிக்கிறேன்” என்கிற ஒரு தைரியம் தான்.
வாழ்க்கையால் இவர்களை அழவைக்க முடியவில்லை.

                  ராஜநாயஹம் சொல்லுகிறார்.இது நான் இப்போது இருவதாவது
இடம்.நாள் ஒன்றுக்குப் பதினாலு மணி நேரம் உழைக்கிறேன் என்கிறார்.
தேர்ந்த இலக்கியவாசகர்.கூட்டில் தேன் சேர்த்து வைத்திருப்பது போலப்
புத்தகங்கள் சேர்த்து வைத்திருந்தார்.இசைஞானம் உண்டு.தேர்ந்த
இசைத்தொகுப்புகளைச் சேகரம் பண்ணி வைத்திருப்பவர்.புதுவையில்
இவர் இருந்த போது வாரம் ஒரு தடவை எங்களைப் பார்க்க வருவார்.
வந்தவுடன் நானும் கணவதியும் அவர் எதிரே உட்கார்ந்து அவர் பேச்சைக்
கேட்க ஆயத்தமாகிவிடுவோம்.அப்படி ஒரு பேச்சு.

ராஜநாயஹம் வீட்டில் அந்த அம்மையார் ( அவர் மனைவி ) வவ்வா மீனை
அருமையாகப் பொரித்து வைப்பார். அந்த மீனின் முட்களெல்லாம்கூட
முறுக்கு போல் தின்பதற்குப் பொருபொரு என்று சுவையாக இருக்கும்.
அப்படிச் சுவை எமக்குக் கிடைத்து அனேக வருடங்கள் ஆகி விட்டன.
கூட்டாகச் சேர்ந்து நண்பர்களோடு உண்டு பேசி சிரித்து மகிழ்வதைவிட
வேற என்ன இருக்கிறது? அந்தக் காலம் இனிவருமா?


http://rprajanayahem.blogspot.in/2008/08/blog-post_09.html

 http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_3493.html

http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_29.html

 http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_08.html

 

6 comments:

 1. கூட்டாகச் சேர்ந்து நண்பர்களோடு உண்டு பேசி சிரித்து மகிழ்வதைவிட
  வேற என்ன இருக்கிறது? அந்தக் காலம் இனிவருமா?

  Hopefully KiRa will have opportunity soon.

  ReplyDelete
 2. உங்க பையன் முதல் முதலாக சென்ற நிகழ்வை ஒரு பதிவில் சொல்லி இருந்தீர்கள். மிகவும் நெகிழ்வாக இருந்தது . இப்போ அவர் என்ன செய்கிறார் ? எங்கு இருக்கிறார் .?

  ReplyDelete
 3. அய்யா திருச்சிக்கு எப்போது வந்தீர்கள் எவ்வளவு காலம் தங்கி இருந்தீர்கள்? எங்கள் ஊர் திருச்சி பற்றி பழைய நினைவுகள் ஏதேனும் உண்டா?


  ReplyDelete

 4. கண்ணன் சார்! நன்றி!

  நாட்டான் சார்!
  என் மூத்த மகன் கீர்த்தி இப்போது ஒரு Buyer office இல் QA ( quality assurance ) ஆக வேலை பார்க்கிறான்.இரண்டாவது மகன் அஷ்வத் கோவையில் B.E. final year படிக்கிறான்.

  தமிழ் இளங்கோ சார்!
  என்னுடைய பதிவுகள் சந்திரஹாசன்,Individual Choice,புண் உமிழ் குருதி, தோழர் நல்லகண்ணு, பிரபலமான இருவீடுகள் போன்ற பதிவுகள் உங்க ஊர் பற்றிய பழைய நினைவுகள் தான்.

  ReplyDelete
 5. அருமை. கி ராஜநாராயணனை ஈர்த்திருக்கிறீர்கள். அந்த ஈர்ப்பை இனிமையாகவும் மறக்கமுடியாதவாறும் அதை அவர் நினைவு கூரும் வகையிலும் உங்கள் பேச்சுத்திறன் இருக்கிறது என்று மகிழ்ச்சியாகவும் பெருமையாகவு இருக்கிறது.

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.