Share

Aug 3, 2019

ரெண்டு ரூவா காசு


கொல்லம் எக்ஸ்பிரஸ். திருநங்கை கைதட்டி 'அப்பா' என்று கைநீட்டினாள். பத்து ரூபாய் கொடுத்ததை பெற்றுக்கொண்டபின் ஒரு இரண்டு ரூபாய் காயினைக்கொடுத்தாள். 'இதை பத்திரமா வச்சுக்கங்க அப்பா. செல்வம் கொழிக்கும் . இத ஒங்க பூஜையறையில வைங்க.
 உங்களுக்கு ரொம்ப அதிர்ஷ்டம் பெருகும்.தொலச்சிடாதீங்க . வீட்டுல பீரோக்குள்ற வச்சாலும் யோகம் தான். ஒங்களுக்கு பணக்கஷ்டமே வராது. நம்புங்க.'                                                                                           

நான் 'சரிம்மா '
                                                                                                                                               அடுத்து ரயில்ல கை நீட்டிய ஒரு பாவப்பட்ட ஜீவனுக்கு அந்த ரெண்டு ரூவா காச கொடுத்தேன்.

..

இந்த ’ரெண்டு ரூவா’ சமாச்சாரத்தில் ’அதியமான் நெல்லிக்கனி’, கர்ண கொடை ரேஞ்சுக்கெல்லாம் எதுவுமேயில்லை.

தேய்ந்த சொற்களை அடுத்த இரண்டு வரியாக இங்கே உபயோகப்படுத்த வேண்டியுள்ளது.
எனக்கு எப்போதும்மூட நம்பிக்கை கிடையாது.
ஏன் கடவுள் நம்பிக்கையே இல்லை.
திருநங்கை சொன்னதை நான் நம்பவேயில்லை.
தன் அன்பையும் மரியாதையையும் இப்படி வெளிப்படுத்தினாள். சற்றும் இது போன்ற விஷயங்களுக்கு புல்லரிக்காத இயல்பினால் அதை அடுதத பிச்சைக்காரருக்கு கொடுத்து விட்டேன்.
Very simple incident.

http://rprajanayahem.blogspot.com/2019/03/blog-post_13.html





Aug 2, 2019

காற்று கொட்டுகிற கோபுர வாசல் - 1


தென்காசி கோயில்  காற்று கொட்டுகிற வாசலில் மூன்று பெரியவர்கள். அவர்களின் சுவாரசிய உரையாடலில், திண்ணைப்பேச்சு வீரம் சொட்ட, சொட்ட சிந்தித்தெறித்தது.

                                                                                                                                           

காதுக்குள் சாரல்.
( Eavesdropping  என்பதை நயமாய் சொல்கிறேன்.)

 ஒரு பெரிய நடிகரின் அந்திம காலத்தில் பிரபல நடிகை பார்க்கப் போனாராம். நோய்ப்படுக்கையில் இருந்த அவரைப்பார்த்து சம்பிரதாய கண் கலங்கல், 'எப்டிருந்தீங்கண்ணே' புலம்பல் முடித்து விட்டு 'உங்களுக்கு ரொம்ப பிடிக்குமேன்னு கொண்டாந்தேன்'ன்னு ஒரு பலகாரத்தை அவருக்கு ஊட்டி விடும் போது வேலை பார்க்கும் பெண் வந்து அதை தட்டி விட்டுவிட்டு, நடிகையைப்பார்த்து கூப்பாடு போட்டாளாம்.' ஏம்மா, வந்தியா பாத்தியா போனியான்னு இல்லாம இப்டி செய்ற. ஏம்மா.. ஒடனே அது வெளிய வந்துடும்மா. நான்ல ஒர் நாளக்கி பத்து தடவ பேண்டத வழிச்சுப்போட்டு நசநசன்னு குண்டிய கழுவ வேண்டியிருக்கு. ஏம்மா தாலியறுக்ற'