Share

Jun 6, 2021

சரவணன் மாணிக்கவாசகம் இன்று எழுதியுள்ள பதிவு

 சரவணன் மாணிக்கவாசகம் இன்று( 06..06.2021) 

எழுதியுள்ள பதிவு 


"தமிழில் எழுத்தாளன் விமர்சகனாகும் போது தன்னுடைய எழுத்துலக வாழ்க்கையின் வெற்றி தோல்விகளை சுமந்து கொண்டே மற்ற இலக்கியப்படைப்பை அணுகுகிறான். 90 சதவீதம் இப்படித்தான் இருக்கிறது. தன்னைவிட சாதனை புரிந்தவனைப் பற்றி எழுதுகையில், அவனது அந்தராத்மாவிற்கு அது தெரிகையில், வரும் பயம் தான் சாக்கடையை அந்தப்படைப்புகளில் வீசச்செய்கிறது. எழுத்தாளர்கள் தமிழ் இலக்கியம் குறித்து எழுதுவதை நம்பாதீர்கள். 

R. P. ராஜநாயஹம் போல வெகு நேர்மையாக எழுதுபவர் வெகுசிலர். அவர்களைத் தேடிப்பின் தொடருங்கள். 


அயல்நாட்டு இலக்கியத்தையும் வாசியுங்கள். இங்கே பீடத்தில் இருப்பவர் எல்லோரையும் நீங்கள் கல்லூரி சென்றபின் உங்களுக்கு ஒன்றாம்வகுப்பு எடுத்த ஆசிரியரைப் பார்ப்பது போல் பார்ப்பீர்கள். Happy reading."





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.