2016ல் கூத்துப்பட்டறைக்கு ந,முத்துசாமி சாரை பார்க்க நடிகர் பசுபதி வந்திருந்தார். அவருடைய மனைவியும் உடன் வந்திருந்தார்.
புதிதாக மூன்று நாட்களுக்கு முன் தத்து எடுத்திருந்த மராட்டி பெண் குழந்தையை முத்துசாமி சாரிடம்
காட்டி ஆசி பெறுவதற்காக. மூன்றரை வயது குழந்தை.
பசுபதி பற்றி முத்துசாமி சார் நிறைய சொல்வார்.
பதினேழு ஆண்டுகள் கூத்துப்பட்டறையின்
நடிகராக இருந்தவர் பசுபதி.
எங்கே ட்ரெயினிங் அனுப்பினாலும்
உடனே சென்று வருவார்.
2017ல் மயிலாப்பூர் கற்பகம் ஹோட்டல் வளாகத்தில் நடிகர் பசுபதியின் குழந்தைக்கு
பிறந்தநாள் விழாவுக்கு முத்துசாமி, நடேஷ், பேராசிரியர் ரவீந்திரன் மற்றும் நான் போயிருந்தோம்.
எனக்கு ஒரு பழைய நினைவு.
1989ல் கற்பகம் ஹோட்டலில்
நான் தங்கியிருந்த போது என்னை சந்திக்க பிரமிள், அப்புறம் ஜெயந்தன் இருவரும் வந்த விஷயம்.
இதைப்பற்றி எழுதிய கட்டுரை
இப்போது "மணல் கோடுகளாய் "நூலில் கடைசியில் இடம் பெற்றிருக்கிறது.
அப்புறம் முத்துசாமி இறந்த போதும்,
குஞ்சலி மாமி இறந்த போதும் பசுபதி கூத்துப்பட்டறைக்கு வந்திருந்தார்.
நடிகர் சங்க தேர்தலில்
அரசியல்வாதி கராத்தே தியாகராஜனும்
ஓட்டு போட்டதைப் பற்றி உரையாடும் போது பசுபதி சொன்னார்.
ஆமாம் கராத்தே தியாகராஜன்
நடிகர் சங்க உறுப்பினர். திரைப்படங்களிலும் நடித்திருக்கிறாராம்.
எந்த படம் என்று கேட்க கூடாது.
நக்கீரன் தொடரில் கூட நடிகர் கராத்தே தியாகராஜன் பற்றி குறிப்பிட்டு
ராதா ரவி எழுதியிருந்தார்.
...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.