Share

Jun 6, 2021

முதல் தடுப்பூசி

 காடு, மலை, பென்னியோட வீடு.. 

ஆறு, பாறை, முதலையோட ஏரி.. 

காடு, வரையிற பாலம், 

கோட்டை, பென்னியோட குட்டி வீடுன்னு.. 

ஏரி, சுரங்கப் பாதை, வானவில்லுன்னு                            இங்க சென்னைக்கு வந்ததில இருந்து ஆறு வருஷமா ஒவ்வொரு விஷயத்துக்கும், ஒவ்வொரு எடம்             கண்டு பிடிக்க 

டோராவோட பயணங்கள் மாதிரி தான். 


தடுப்பூசி எப்படி போட்டுக் கொள்வது என்பது தலையாய பிரச்சினையாகி அதற்கான தேடலும் முயற்சியும் தொடர்ந்து தோல்வியடைந்து, 

பிரைவேட் ஹாஸ்பிடல்களில் விசாரித்தும் இல்லை என்றாகி போரூர்ல போடுறாங்க, வளசரவாக்கத்துல, ராமாவரத்தில

 முகாம் நடக்குது ன்னு காடு, ஆறு, மலைன்னு தாண்டி 

இங்கே நாங்க குடியிருக்கிற பெரும்பாக்கம் பகுதிக்கான பிரைமரி ஹெல்த் சென்ட்டர் மூலம் கன்ஃபர்மேசன் வந்து உடனே கேன்சலேசன் வந்த போது விரக்தி நிலை தான். 

என்ன செய்வது என்றே தெரியாத கண்ண கட்டி காட்டுல விட்ட கதை. 


இரண்டு நாட்களுக்கு முன்பு பெரும்பாக்கம் பஞ்சாயத்து கம்யூனிட்டி ஹாலில் தடுப்பூசி போடுகிறார்கள் என்று ஊர்ஜிதமாகாத செய்தி வந்த போது இந்த கம்யூனிட்டி ஹால் எங்க இருக்குன்னு டுவிட்டரில எல்லாம் விசாரிச்சப்ப 

work from home ல இருக்கிற மகன் அஷ்வத்துக்கு ஆஃபிஸில் இருந்து மெயில். 11.45 A. M. 

12 மணியிலிருந்து 4 மணி வரை தடுப்பூசி அஷ்வத் ஆஃபிஸிலேயே. 

வேலை மும்முரத்திலும் இந்த மெயில் கண்ணில் பட்டது அதிர்ஷ்டம். உடனே பக்கத்தில் ELCOTல் இருக்கிற அஷ்வத் வேலை பார்க்கிற அலுவலகத்தில் தடுப்பூசி First dose போட்டுக் கொண்டு விட்டோம்.

இனி அடுத்து 84 நாளில் அடுத்த second dose. 


மிக சிறப்பாக தடுப்பூசி போடுவதை நிர்வகித்திருந்தார்கள். It was a cakewalk. கூட்டமில்லாமல் இப்படி சுலபமாக இந்நிகழ்வு கண்ணியமான முறையில் மரியாதையுடன் நிறைவேறும் என்று நினைக்கவேயில்லை. Miracle just happened. 


For this relief, much thanks.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.