சான்ஸே இல்ல வேற லெவல்
பதினஞ்சு வருஷத்துக்கு முன்ன 'சான்ஸே இல்ல' ன்ற வார்த்தை பேச்சு மொழியில், அதன் காரணமாக எழுத்திலும் ரொம்ப உபயோகத்தில் வர ஆரம்பித்து இன்ன வரைக்கும் புழக்கத்தில் தான் இருக்கிறது. நானே 'சான்ஸே இல்ல' ன்னு ஒரு ஆர்ட்டிக்கிளில் 2008ல் பயன்படுத்தினேன்.
இப்ப "வேற லெவல்" என்கிற வார்த்தை மிக, மிக அதிகமாக பிரயோகம் செய்யப்பட்டு cliche ஆகியிருக்கிறது.
'ராஜநாயஹம் எழுத்து வேற லெவல்'னு ஒருவர் யாருடைய பதிவிலோ குறிப்பிட்டதை படித்த போது தான் 'வேற லெவல்' ன்றதை முதல்ல கேள்விப்பட்டேன்.
டி. வியில் ரியாலிட்டி ஷோக்களில் இந்த 'வேற லெவல்' சகட்டுமேனிக்கு ஜட்ஜெல்லாம் கூட எப்பவும் வாய் நெறய்ய..
இனி அடுத்து என்ன வார்த்தை பிரபலமாகி வரப்போகுதோ?
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.