ராஜஸ்தான் ஆளுங்கட்சி காங்கிரஸ் கூத்து. கெலாட், பைலட்
விவகாரம்.
இதில் மந்திர வாதி யாரு? ரத்தங்கக்கப்போறது யாரு?
இது ஒருபுறம் இருக்க, அதே ராஜஸ்தானில்
ராஜா மான்சிங் என்கவுண்டர் வழக்கு தீர்ப்பு
35 வருடங்களுக்கு பிறகு இப்போது.
இன்று 82 வயதாகி விட்ட அன்றைய என்கவுண்டர் டி. எஸ். பி. கன் சிங் பட்டிக்கு ஆயுள் தண்டனை.
ராஜஸ்தானில் மான்சிங் சுயேட்சை எம். எல். ஏ வாக 1952லிருந்து தொடர்ந்து 1980ல் கூட ஜெயித்தவர்.
1985ல் காங்கிரஸ்காரர்கள் இவருடைய பேனர்களை கிழித்து விட்டார்கள் என்பதால் அன்றைய முதல்வர் மாத்தூர் பேசவிருந்த மேடையையும், அவருடைய ஹெலிகாப்டரையும் தன் வாகனத்தை ஓட்டியே துவம்சம் செய்து விட்டு மறு நாள் 'சரி சரண்டராயிரலாம்' ன்னு நெனச்சி கெளம்பிப் போகும் போது என்கவுண்டர். பொரிச்சிட்டாங்கெ.
எல். என். மிஸ்ரா கொலை வழக்கு தீர்ப்பு 39 வருஷங்கழிச்சி வந்தப்ப அதைத் தொட்டு 2014 ல 'Grave Injustice' ன்னு சொல்லி
ஒரு பதிவுல கவலப்பட்டு எழுதினேன்.
இப்ப பரவாயில்லை.
நீதி கொஞ்சம் வேகம் கூடியிருக்கு.
மான்சிங் கேஸ்ல 35 வருஷத்திலயே தீர்ப்பு வந்திடுச்சி. Delayed Justiceனு சட்டுன்னு 'வாய் புளிச்சதோ, மாங்கா புளிச்சதோ' ன்னெல்லாம் சொல்ல முடியுமா?
'சக்கரத்தை எடுப்பது ஒரு கணம்,
தர்மம் பாரில் தழைத்தல் மறு கணம்"
ஏங்கினான் எட்டயபுரத்து எரிமலை பாரதி!
ராஜபாளையம் எம். எல். ஏக்கு 12ம் தேதி காய்ச்சல். கரோனா டெஸ்ட் 14ந்தேதி
எடுக்கப்பட்டதாக அந்த எம்எல்ஏ தங்க பாண்டியன் சொல்றாரு.
'ரிசல்ட் வர எட்டு நாளா? 'என்று வருத்தப்பட்டிருக்கிறார்.
நாகர்கோவிலுக்கு அனுப்பி ரிசல்ட் வாங்கியிருக்கிறார்களாம்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.