தேவதச்சனின் பொன் துகள்
தேவதச்சனின் துளிகள் தெறிக்கும் போதெல்லாம்
’ஆடு கீரையை மேய்வது போல இவர் வாழ்வின் வண்ண கணங்களை மேய்பவர்’ என்று தோன்றும்.
சேதாரமின்றி பொன்னை நகையாக்கும் பக்குவம் தேவதச்சனுக்கு கைவந்திருக்கிறது.
”காற்று ஒரு போதும் ஆடாத மரத்தைப் பார்த்ததில்லை
காற்றில்
அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள், காலில்
காட்டைத்தூக்கிக்கொண்டு அலைகின்றன
வெட்ட வெளியில்
ஆட்டிடையன் ஒருவன்
மேய்த்துக்கொண்டிருக்கிறான்
தூரத்து மேகங்களை
சாலை வாகனங்களை
மற்றும் சில ஆடுகளை!”
...........
நெஞ்சில் ஊஞ்சலாடும் சிலவரிகள்.
முழுக்க காட்சியாய் விரிகின்றது.
ஐந்தாறு வருடங்களுக்கு முன் படித்தது.
போதனை இல்லை. பெரிய தத்துவமில்லை. மூளையை வருத்தும் சிக்கல் இல்லை.
அரசியல் இல்லை. எகத்தாளம் இல்லை. புத்திசாலித்தனம் துறுத்தவில்லை. வாசகன் சிந்திக்க வேண்டியதில்லை. கற்பனைக்கு வேலையிலலை. ரொம்ப எளிமை.
புதிர் கிடையாது.
ஆனாலும் மனதில் மனப்பாடம் செய்யாமலே ’பச்சக்’ என்று ஒட்டிக்கொண்டது.
எஸ்.வி.வேணுகோபாலன் எழுதியது.
தலைப்பு ‘விட்டுப்பிடித்தல்’
“ஒற்றைப் பனை
ஓங்கிய மலைத்தொடர்
பசேல் என்று வயல்கள்
எருமைகள் நீந்தும் சிலீர் தண்ணீர்க் குளம்
............எல்லாம்
அழைத்தும்
கோபம் குறையாத
குழந்தை மாதிரி
இரைந்த படி ஓடிக்கொண்டிருக்கிறது ரயில்
‘போ போ
நாளைக்கும்
இந்த வழி தானே
வரணும் நீ?’
என்றவாறு குடிசைக்குத்
திரும்புகிறாள்
ஆடு மேய்க்கும் சிறுமி”
......
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.