Share

Nov 18, 2016

ஈயடிச்சான் காப்பி - அறிவுத்திருட்டு



http://rprajanayahem.blogspot.in/2013/02/blog-post_12.html
மேற்கண்டஎன்னுடைய ஜெமினி பதிவைத் திருடி
இங்கே ஃபேஸ்புக்கில் ராமசுப்ரமணியம் நாகேஸ்வரன் என்கிற ஆள் தன் பதிவாக நேற்று போட்டிருக்கிறார். கடைந்தெடுத்த அயோக்கியத்தனத்திற்கு  பாராட்டு மழை வேறு.
வேதனையாய் இருக்கிறது.
இதை கண்டிக்க வேண்டும். கீழே இருப்பது திருட்டுப்பதிவு
https://www.facebook.com/JeyaRam20…/posts/10207568474829880…

சாயம் வெளுத்த பின், காப்பியடித்த ஆளின் கிறுக்குத்தனமான பதில் :பதிவை நீக்கும் எண்னமோ, மன்னிப்பு கேட்கும் எண்னமோ எப்போதுமே கிடையாது. கூகுள் சர்ச்சில் இருந்த சில நல்ல விஷயங்களை எப்போதும் எடுத்தாள்வது, நமது சொந்த வரிகளுடன் வழக்கம். வேண்டுமென்றால்...எடிட் செய்து...உங்கள் பெயரை இணைத்து விடுகிறேன். அவ்வளவு தான் செய்ய முடியும்.

.............................................




https://www.facebook.com/rprajanayahem/posts/1557924741087653?pnref=story


மேற்கண்ட ராஜநாயஹத்தின் கே. பாலாஜி பதிவை இன்னொரு ஆள் (  ) அப்படியே தன் பதிவாக எடுத்துப்போட்டுக்கொண்டுள்ளான் பாருங்கள் கீழே.
 http://tamilindianfilmssecrets.blogspot.in/.../blog-post...

........................

எவனென்று தெரியவில்லை. "இனியவன் என்றும்" என்ற பெயரில் ஒரு ப்ளாக். என்னுடைய வெற்றிகொண்டான், .வி.கே.சம்பத், பழைய கணக்கு, கண்கள் பனித்தன நெஞ்சம் இனித்தது,கட்சி தலைமை,ஜேப்பியார், நெடுஞ்செழியன்,கண்ணதாசனின் அரசியல் வாழ்வு ஆகிய பிரபலமான பதிவுகளை திருடி அவனுடைய ப்ளாக்கில் தன்னுடையது போல எடுத்துப்போட்டுக்கொண்டிருக்கிறான். 'இடுகையிட்டது ranga rasu' என்று குறிப்பிட்டுள்ளான்.
இப்படி எவனெவனோ செய்து கொண்டிருக்கிறான்.
என் 'சாவித்திரி' பதிவை ஒருவன் இப்படி தன் பதிவாக போட்டுள்ளதை பார்க்க நேர்ந்தது. என் 'எஸ்.வி.ரங்காராவ்' பதிவை மற்றொருவன் தன் பதிவாக போட்டுள்ளதை எனக்கு கவிஞர் மகுடேசுவரன் சொன்னார்.
' ராதா இல்லாத படம் சாதா' என்ற பெயரில் என் பதிவுகளை ஒருவன் பயன் படுத்தியிருக்கிறான்.

நான் 2008ல் எழுதிய ’டவுன் பஸ் கண்ணப்பா’ பதிவை காப்பியடித்து என்ற ப்ளாக்கில் 2012ல் போட்டிருப்பதை கண்டுபிடித்தேன். திருடி போடப்பட்டுள்ள ப்ளாக் லிங்க்.

...

என்னுடைய 'எம்.ஜி.ஆர் பேச்சு' பதிவில் இருந்து ஆனந்த விகடன் (25-9-13) இதழில் திருடிப்போட்டிருக்கிறார்கள். அழகிரி பதிவில் இருந்து திருடி ஆனந்த விகடனில் திருமாவேலன் போட்டது அனைவருக்கும் தெரியும்

குமுதம் பத்திரிக்கை காக்கா ராதாகிருஷ்ணன், டி.எஸ்.பாலையா ஆகியோர் பற்றி நான் எழுதியதை திருடியதுண்டு.

குன்ஹா தீர்ப்பு பற்றி நான் எழுதியதை ஜூனியர் விகடன் கழுகார் பதிலில் எடுத்துப்போட்டார்கள்.


.................................................................


http://rprajanayahem.blogspot.in/…/10/untoward-incident.html
http://rprajanayahem.blogspot.in/2012/08/blog-post_12.html
http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_07.html

3 comments:

  1. Disgusting guy, look at the way he replies everyone with glee.

    It is a pity one pops up everyday :(

    ReplyDelete
  2. Dear RPR sir, there is an option to prevent copy by disabling copy text, image in website, pls see if it helps.

    ReplyDelete
  3. Nice idea, disable the right click.

    At least make it difficult for the casual thieves.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.