சம கால நடப்புகள் பற்றிய கடும் அதிர்ச்சியோ, அதீத பரவசமோ எனக்கு எப்போதுமே கிடையாது. முடிந்தவரை எல்லோருமே விவாதிக்கும் விஷயங்களை நான் தொட விரும்பியதில்லை.
இந்த Demonitisation என் சொந்த வாழ்க்கையில் பெருந்துயரம் ஏற்படுத்தி விடப்போவதில்லை என்று ஒரு அயர்ச்சி முதலில் இருந்தது.எப்போதுமே கைக்கும் வாய்க்குமாக செலவுக்கு அல்லாடும் வாழ்க்கையில் இது என்ன மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியும். Living hand to mouth.
கறுப்பு பணம் ஒழிய வேண்டும் என்பதில் பெரிய மேல்மூடிகளையும், முதலைகளையும், கறுப்புக்குல்லாக்களையும் தவிர மற்றவர்களுக்கு அபிப்ராய பேதம் இருக்கமுடியுமா? Black money is the elephant in the room. A gorilla in the room.
ஆனால் நவம்பர் எட்டாம் தேதி சமூக வாழ்வை முற்றிலுமாக புரட்டிப்போட்டிருக்கிறதே. Common man is a lameduck to day.
"The road to hell is paved with good intentions” இதை சொன்னவர் சாமுவேல் ஜான்சனா?, ஜான் ரே? அல்லது செயின்ட் பெர்னார்ட்? ஜான்சனுக்கு முன்னரே ஜான் ரேயும் செயின்ட் பெர்னார்டும் சொல்லி விட்டார்களாம்.
தாஸ்மாக்கிலும், போக்குவரத்துக்கழகங்களிலும் அன்றாடம் சேர்கிற நூறு, ஐம்பதெல்லாம் பேங்க் போகும்போது பழைய 500,1000 ரூபாய் நோட்டாகி விடுகிற மேஜிக்!
‘Outlook’ மேகசினில் இந்த வாரத்தில் கவர் ஸ்டோரி India struggles with an unplanned transition towards a cashless future என்று மிரட்டுகிறது.
Shock therapyயில் அரிந்தம் முகர்ஜி குறிப்பிடுகிற விஷயம் ஒன்று.
“ 14 லட்சம் கோடி பணம் இந்தியாவில் புழக்கத்தில் இருந்திருக்கிறது. இதில் 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் 84 சதவீதம். மீதி 16 சதவீத நோட்டுக்கள் தான் 100,50,20,10. இப்போது மொத்த பண பரிவர்த்தனை பளுவும் இந்த 16 சத வீத நோட்டுக்கள் மீது. புதிதாய் வெளி வந்திருக்கிற 2000 ரூபாய் நோட்டுக்களுக்கு சில்லரைக்கு திண்டாட்டம் ஏன் ஏற்படாது?”

மோடி மஸ்தான் நடவடிக்கை எல்லோரையும் தெருவில் நிறுத்தி விட்டது. இவ்வளவு கோடி மக்கள் உள்ள நாட்டில் 84 சதவீத புழக்கத்தில் உள்ள ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செல்லாதென்று அறிவிப்பதற்கு முன் புதிய ஐநூறு நோட்டுக்களை எந்த அளவிற்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும்?
அடித்தட்டு மக்கள் வாழ்வின் சரிவுகளை எப்படி சரி செய்யப்போகிறாய்?
கால் முட்டாப்பயல் கூட இப்படி கூறுகெட்டு இருக்க முடியுமா?
An unplanned transition towards a cashless future.
கால் முட்டாப்பயல் கூட இப்படி கூறுகெட்டு இருக்க முடியுமா?
An unplanned transition towards a cashless future.
....................................................................................
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.