Share

Sep 3, 2019

சேவல் முட்டை


அசோகமித்திரனுக்கு கொடுத்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், மளையாள சினிமா பாடலாசிரியர் ஒருவருக்கு ஞானபீடப் பரிசு கொடுக்கப்பட்டது.                                                 அசோகமித்திரனிடம் அலை பேசி உரையாடிய போது சொன்னார் 'இங்கே செல்வாக்கு மிகுந்த திரை பாடலாசிரியருக்கு இந்த விஷயம் மிகுந்த ஊக்கம் ஏற்படுத்தும். தனக்கான முயற்சிக்கு வேகமாக செயல் பட வைக்கும்.'

கி. ராஜநாராயணனுக்காவது அடுத்து ஞான பீட விருது கிடைத்து விடாதா? எதிர்பார்ப்பில் வருடங்கள் ஓடுகின்றன.

இன்று காலை ஒரு செய்தி கண்ணில் விழுந்தது.  ஒரு முன்னணி தமிழ் திரை நடிகர் ஏதோ ஒரு மளையாளப் படத்துக்கு பாடல் எழுதுவதாக.

                அதிர்ஷ்டக்காரனுடைய சேவல் முட்டையிடும்.

Sep 2, 2019

'ரஸிகன்' என்ற ஹிண்டு நா. ரகுநாதய்யர்


ஸ்டீபன் ஸ்பெண்டரும் ஹிண்டு எடிட்டர் நா. ரகுநாதய்யரும் பற்றி க. நா. சு வின் நினைவுகள் பற்றிய என் பதிவை படிக்கிற யாராவது ரகுநாய்யர் தான் தமிழில் சிறுகதைகள், ஏன் நாடகங்களும் எழுதிய ’ரஸிகன்’ என்ற எழுத்தாளர் என்பதை கண்டு கமெண்ட் செய்ய மாட்டார்களா என்று நினைத்தேன்.

 அப்படி பின்னூட்டம் தான் என் பதிவுகளுக்கு என் எதிர்பார்ப்பு. 
                               
1939ல் கே.எஸ் வேங்கடரமணி ஆரம்பித்து ஒரு வருடம் நடத்திய பாரத மணி பத்திரிக்கையில் அவருடன் கு. ப. ரா. வும் இணைந்து எழுதிய போது அதில் ரஸிகன் என்ற புனைபெயரில் ரகுநாதய்யரும் கதை, நாடகம் பல தரமாக எழுதியிருக்கிறார். புத்தகமாகவும் அவை வெளிவந்து பரவலாக கவனம் பெற்றன. க. நா. சு. வின் அபிப்ராயத்தில் 'தரையில் காலூன்றி எழுதிய லட்சியவாதியாக' ரஸிகன் தோற்றம் தந்திருக்கிறார்.

அவர் மனைவியுடன் வாழ முடியாத நிலையில் தனியாக இருக்க நேர்ந்திருக்கிறது.

                      அவருடன் அளவளாவிய போதெல்லாம் அளவற்ற பொக்கிஷங்கள் தான் கிடைக்கப்பெற்றதாக க. நா. சு. 'இலக்கியச் சாதனையாளர்கள்' நூலில் பெருமிதமாக நினைவு கூர்ந்தார்.

https://m.facebook.com/story.php?story_fbid=2504298563116928&id=100006104256328