Share

Aug 18, 2024

Necrophilia

Necrophilia

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தை சேர்ந்த 22வயதான ரங்கராஜ் என்ற நபர், இளம்பெண் ஒருவரை கொலை செய்து அந்த உடலுடன் உடலுறவு கொண்டுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு விசாரணை துமகூரு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் குற்றவாளியான ரங்கராஜுக்கு ஆயுள் தண்டனையும், பிணத்துடன் உடல் உறவு கொண்டதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.

 

 தண்டனையை எதிர்த்து ரங்கராஜ் தரப்பில் கர்நாடக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

 வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் வீரப்பா மற்றும் வெங்கடேஷ் நாயக் அடங்கிய அமர்வு  தீர்ப்பு வழங்கினர்.

அதில் குற்றவாளியான ரங்கராஜனுக்கு கொலை செய்த குற்றத்திற்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை செல்லும் எனவும், பிணத்துடன் உடல் உறவு கொண்ட குற்றத்திற்காக வழங்கப்பட்ட
 10 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து செய்யப்படுவதாகவும் தீர்ப்பு வழங்கினர்.

குற்றவாளி பிணத்துடன் உறவு கொண்டுள்ளார். இது சட்டப்படி குற்றமாகுமா? அல்லது குற்றம் இல்லையா? சட்டப்படி ஒருவரின் இறந்த உடலை மனிதராக கருத முடியாது. அதனால் இந்திய தண்டனை சட்டம் 375, 377 (இயற்கைக்கு மாறான உடலுறவு) ஆகியவை குற்றமாக பொருந்தாது. 376வது கற்பழிப்பு பிரிவின் கீழ் அது தண்டனை உரிய குற்றம் ஆகாது. இதனால் இறந்துபோன ஒருவரின் உடலுடன் உறவு கொள்வது குற்றம் ஆகாது என்று, தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

 

அத்துடன், இறந்துபோன ஒருவரின் உடலுடன் உறவு கொள்வதை குற்றம் என்பதை உறுதி செய்ய இந்திய தண்டனை சட்டத்தில் இடம் வேண்டும் அல்லது புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும் என நீதிபதிகள் வீரப்பா மற்றும் வெங்கடேஷ் நாயக் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பு  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் இது சட்ட ஆராய்தலுக்கு உட்பட்டது என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

https://www.facebook.com/share/p/CJjwhfhkutAr597R/?mibextid=oFDknk

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.