Share

Aug 21, 2024

கயமைத்தன்மையை முதலில் தோலுரித்துக் காட்டிய R.P. ராஜநாயஹம்


வீரன்மணி பாலமுருகன் :
"நான் ஏற்கனவே பல பதிவுகளில் சொன்னது போல ஜெயமோகன் குறித்தும் அவர்தம் நுண் கயமைத்தனங்கள் வலதுசாரி சிந்தனைகள், இலக்கிய சட்டாம் பிள்ளைத் தனங்கள் பற்றியெல்லாம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் முன்பே 
ஒரு முன்னோடியாக பொது வெளியில் மிக காட்டமாக விமர்சித்து தோலுரித்துக் காட்டியவர் பன்முக கலைஞர் R.P.ராஜநாயஹம் அவர்கள் தான். 

தோழர் யமுனா ராஜேந்திரன் உள்ளிட்டோர் தொகுத்த ஜெயமோகன் பற்றிய இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம் எனும் தொகுப்பில்
 RPR-ன் மேற்படி விமர்சனங்களையும் காணலாம். 
அவர் தான் தன் சுரீர் என்ற எழுத்துச் சொல்லடிகள் மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பே மேற்படி இலக்கிய கள்ளப் பூனைக்கு கனத்த தொரு மணியைக் கட்டி விட்டவர். 

வடிவேல் பாணியில் சொன்னால் அந்த அடிக்கு பின்பு தான் பலரும் அவரை அடித்து பேமசானது. அன்னார் இன்று நடத்துக்கிற அணுக்கத் தொண்டர் இலக்கிய ஆராதனைக் கூட்டங்களின் அச்சாரம் தான் அன்றைய ஊட்டி தளையசிங்கத்தின் தொழுகை சிறுகதை குறித்த இலக்கிய விழா அதிலொரு வாசகராக கலந்து கொண்ட  RPR அவர்கள் மேற்படி ஆசாமிக்கி வலுவாக  கண்டன வஸ்துவை ஊட்டி விட்டதன் தொடர்ச்சி தான் இப்போது பலர் தீட்டி எடுப்பதுவும். 

அன்று தொழுகைக்கு போனவர் ஆழமாக உழுது விட்டும் ஆசானகப் பட்டவர் இன்று வரை இன்னும் திருந்திய பாடில்லை. 

ஆசானின் அவைப் புலவர்களாகவும் அணுகத் தொண்டர்களாகவும் இருந்தவர்களே இன்று அவரை அடித்து நொறுக்கும் நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள் என்பதே அவரின் கீர்த்தியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 

மேற்படி  பூனையின் கழுத்தை சுற்றி இறுகிய மணியின் ஓசை 
இப்போது பூனைக்கு பழக்கமான
 ஒரு சங்கீதமாகி விட்டது."

Veeranmani Balamurugan

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.