Share

Aug 28, 2024

வேடிக்க - 10

வேடிக்க - 10

படிக்கிறப்ப அஞ்சாறு பேர் Jolly Trip போய் ராத்திரி தூங்கி எந்திரிச்சு சிரமபரிகார வேலை பண்ணி டூத் ப்ரஷ்ல பல் விளக்கும் போது "சீக்கிரம் பல்லு விளக்கிட்டு ப்ரஷ குடுறா " ன்னு சாதாரணமா
 'பேனாவ குடு கையெழுத்து போட்டுட்டு தர்றேன்' ற மார கூலா கேட்டான் கூதுர. 
தலக்கனம் பிடிச்ச கூதுர பெரும்பாலும் குளிக்க மாட்டான்.

"எதுக்குடா எம் ப்ரஷு" 

"பல்லு விளக்கிட்டு தரேன் "

மற்ற பயலுவல்லாம் காணல. அவிங்க கிட்டயும் கேட்டுப்பாத்திருக்கான். விசித்திர சித்ரவதை தாங்க முடியாம எல்லாரும் ரூம விட்டு எஸ்கேப். 

பம்மி எட்டிப்பாத்து எல்லாவனும் எதுத்த மரத்துக்கு பின்னால நின்னு சிரிக்கானுவ.

"டூத் ப்ரஷு எடுத்துட்டு வர மறந்திட்டியா?"

"இல்ல. வீட்ல மத்தவங்களுக்கு வேணும்ல."

புரியாம முழிக்கிறத பாத்து விளக்கினான்.
" எங்க வீட்ல எல்லாருக்கும் 
ஒரே டூத் ப்ரஷு தான். 
அம்மா, அப்பா, எங்கண்ணன், எந்தங்கச்சிக, தம்பி எல்லாரும்
 ஒரே ப்ரஷூலதான் பல்லு வெளக்குறோம்"
ஒத்துமயான குடும்பம். 
'பல்'விதமான குழப்பம்.

விசித்திர விதூஷகன் விரல நீட்டச்சொல்லி டூத் பேஸ்ட்ட பிதுக்கி "இன்னக்கி, நாளக்கி ரெண்டு நாளு விரலால பல்லு வெளக்கிக்க."

"விரலால வெளக்கினா பல்லு கொஞ்சம் கூட சுத்தமாகாதே"

" போடா வெண்ண,  யானயெல்லாம் பல்லா வெளக்குது? ஒம்பல்ல ரெண்டு நாளு லூசுல விடு. டூர்ல ஜாலியா இரு."

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.