Share

Aug 24, 2024

"மேகம் கொண்டு வீடொன்று மின்னல் கொண்டு விளக்கொன்று விண்மீனால் பூவொன்று.."


ஷாஜி வாட்ஸ் அப்பில் அனுப்பிய இந்த 'நான்கு சுவர்கள்' பாடல்.

"நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்
நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்
மேகம் கொண்டு வீடொன்று
மின்னல் கொண்டு விளக்கொன்று
விண் மீனால் பூவொன்று சீர் கொண்டு
உன்னோடு நானும் வருவேன்
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்
காமதேனு வந்து
கறந்தப் பாலை தந்து 
அருந்தும் போது உன்னை
அணைக்க வேண்டும் கண்ணே
வானவீதி ஓரம்
தெய்வ வீணை நாதம்
கேட்கும் போது மெல்ல
கிள்ள வேண்டும் கன்னம்"

ஷாஜி : எம்.எஸ்.விஸ்வநாதனை நெருங்க முடியுமாய்யா?

நான்கு சுவர்கள் என்றாலே
"ஓ மைனா ஓ மைனா
இது உன் கண்ணா பொன்மீனா
ஓடும் புள்ளி மானா பூவில் சிந்தும் தேனா
ஓடும் புள்ளி மானா பூவில் சிந்தும் தேனா"
தான் ஞாபகத்தில் வரும்.

இந்த பாடல் கவனம் பெற்றதில்லை.

பாலச்சந்தர் "நான்கு சுவர்கள்" 
கண்ணதாசன் பாடல். இசை எம்.எஸ். வி
எஸ்.பி.பி., சுசிலா பாடிய
"நினைத்தால் நான் வானம் சென்று நிலவில் ஓடி ஆடி உன்னை.."காட்சியில் ரவிச்சந்திரன், வாணிஸ்ரீ.

ஜெய்சங்கர் நடித்த இரண்டாவது வண்ணப்படம்.
பாலச்சந்தர் இயக்கிய முதல் வண்ணப்படம்.
ரவிச்சந்திரன் தான் 
'கலர்' கதாநாயகனாயிற்றே.
ஸ்ரீவித்யா, ஒ.ஏ.கே. தேவர் 
படத்தில் உண்டு. 

பாலச்சந்தர் இயக்கியவற்றில்  தனக்கு பிடிக்காதவை என 'நான்கு சுவர்கள்'
'பத்தாம் பசலி' இரண்டை குறிப்பிட்டார்.

பத்தாம் பசலியில் நாகேஷுக்கு
 வி.குமார் இசையில் செளந்தர்ராஜன் பாடிய அருமையான பாடல் 
"வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு
முல்லைச்சரமே செல்லக்கிளியே
கண்மூடித் தூங்கம்மா
கண்மூடித் தூங்கம்மா
ஆராரோ ஆரீரோ ஆரீரோ ஆரிரரோ

காற்றடிக்குது மழையும் கொட்டுது
ஓலைக்குடிசையிலே.."

உட்கார்ந்து பார்க்கவே முடியாத பழைய படங்களில் கூட
எப்போதுமே அற்புதமான பாடல்கள் இருக்கும்.
இசைத்துறை எப்போதும் பெர்ஃபெக்ட்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.