Share

Aug 6, 2024

நாயன்மார் வேடிக்க - 3


வேடிக்க - 3

மருந்தீஸ்வரர் கோயிலில் நாயன்மார்களை நின்று நின்று வேடிக்கை பார்த்த பரவசமான வேளை:

ஓஹோ, இளையராஜாவுக்கு முன்னரே
இசை ஞானி இருந்திருக்கிறாரோ? நாயன்மார்களில் ஒருவர் பெயர்
'இசை ஞானியார்'. மற்ற நாயன்மார்கள் வேட்டி கட்டிக்கொண்டிருக்க யாரோ இளையராஜா ரசிகர் இவருக்கு பட்டுடுத்தி விட்டு மரியாதை செய்திருக்கிறார் போல என நினைத்தால் தவறு. இசை ஞானியார் பெண். காரைக்கால் அம்மையார் போல.
அதனால் பட்டாடை.

( கம்பராமாயணம் எழுதியவர் இவராகத்தான் இருக்கும் என்று எடப்பாடியால் சந்தேகிக்கப்பட்ட) சேக்கிழார் கூட நாயனே தான்.

அவரவர் செயல்பாடு வைத்தே சில நாயன்கள் பெயர்.

'சித்தத்தை சிவன் பால் வைத்தார்' எல்லா நாயன்மார்களின் சித்தமெல்லாம் சிவம் தானேயானாலும் இவர் தான் இதில் அத்தாரிட்டி என புரிந்து கொள்ள வேண்டும்.

' முழு நீறு பூசுவார்' நெற்றி துவங்கி பாதம் வரை வெள்ளையடிப்பது போல திரு நீறு பூசிக்கொள்வாராயிருந்திருக்கலாம்.

இந்த ஊரில் தான் பிறந்திருக்கிறார் மற்ற நாயனான 'திருவாரூர் பிறந்தார்'


பணிவான குணவானான நாயன் 'பத்தராய் பணிவார்' 

மானிடரை பாட மறுத்த பிடிவாதமான நாயன் நாமம் 'பரமனையே பாடுவார்'

அறுபத்து மூன்று நாயன்மார்களில் 'முப்போதும் திருமேனி தீண்டுவார்'  நாமம் தரித்தவரும் உண்டு.

நாமகரணம்.
'நாமம்' ஆங்கிலத்தில் 'NAME'.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.