ஒரு படத்தில் என்னுடன் இருந்த சக உதவி இயக்குனர் ஒருவன் சொன்ன வார்த்தைகள்:
”வீட்டில இருந்து மாசாமாசம்
எனக்கு பணம் அனுப்புறோம்னு சொன்னாங்கங்க. நான் வேண்டாம்னுட்டேன்.
நானே spend பண்ணி loss பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டேன்.”
- நானே spend பண்ணி loss பண்ணிக்கிறேன்?? -
ம்… spend பண்ணா loss வரத்தானே செய்யும்.
'சொந்தக்கால்ல நின்னுக்கிறேன்'னு சொல்லிட்டானாம்.
................
இயற்கை சீற்றமோ,
நெருப்போ, தாஸ்மாக் தாய்மார்கள் போராட்டமோ, கிளர்ச்சி,
குடிதண்ணீருக்கான மறியலா?
இந்த கரோனா லாக்டவுன் பெருந்துயரா?
எதுவாக இருந்தாலும்,
சோகமாக, கோபாவேசமாக பேசும் பெண்கள், ஆண்கள் பக்கத்தில் நின்று,
சூழ்நிலை இறுக்கத்தை நிராகரித்து
டி.வி.யில் வீடியோ கேமராவைப் பார்த்து,
கண்கள் மலர சிரிக்கும் சிறுவர்கள், சிறுமிகள்! இந்த குழந்தைகளை பார்ப்பது காட்சி இன்பம்.
.....................
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.