தீர்மானமாக ஒரு மனத்தடை.
இந்த சீரியல் கில்லர் படங்களே
இனி பார்க்கவே முடியாது.
நேத்து 'அஞ்சாம் பதுராவா? பத்துராவா?' மலையாளம்
பார்த்தவுடன் சைக்கோ கொலைகாரன் த்ரில் சமாச்சாரம் சுத்தமா திகட்டிடுச்சு.
இது இந்த படத்தாலன்னு தான்னு கெடயாது. இதுக்கு முன்ன சைக்கோ படமொன்னு பாத்தப்பவே போதும் போதும்னு சொறிஞ்சி விட்டு எந்திரிக்கும்படியா தான் ஆயி போச்சி.
அனா, ஆவன்னா அஞ்சாம் பத்துரா கதாநாயகன விட உதயநிதி ஸ்டாலின் நல்ல நடிகர். கதாபாத்திரத்தை
தன் நடிப்பில் முழுமையாக வெளிப்படுத்தியிருந்தார்.
என்னய்யா? சீரியல் கில்லர்னாலே
ஒரே கத தானே.
ப்ரசண்டேஸன்ல டைரடக்கர் கிளப்பிட்டாருன்னு படம் பாத்தவங்க பூச்சாண்டி காமிச்சா சரியாயிடுமா?
சின்ன பையனா இருக்கும் போதே
அவன் மனச பாதிக்கிற மாதிரி
சில அனுபவங்கள்.
சைக்காலஜிக்கலா அவன் பெரியவனானதும் சைக்கோவாகி கொலை, கொலையா முந்திரிக்கா..
அதான.
அதுல ஒரு சஸ்பென்ஸ் என்னன்னா
அவன யாருன்னு போலீஸால
கண்டு பிடிக்கவே முடியாது.
கதயில திருப்பம் என்னனா,
தாழன் கொடூரமா கொல பண்ற sadist.
பெரிய புடுங்கி. கண்ண புடுங்கி,
நாக்க புடுங்கி, ஹார்ட்ட புடுங்கி..
சும்மா டெர்ரரா மிரட்டுவான். ஊரே மிரளும்.
பன்னி பண்ணை.
கடைசியா போலீஸ் கையில சிக்குவான்.
ஜெயில்ல போட்டப்புறம், இல்லாங்காட்டி கோர்ட்டுக்கு போற வழியில என்கவுண்டர். சிக்காமலே கூட எஸ்கேப் ஆயிடுவான்.
போலீஸ் கேரக்டர் ரோல்ல வர்ரவனே கொலகாரன
தப்பிக்க விட்டு பொழச்சி போடான்னுடுவான்.
இல்ல கதய மாத்தனும்னா தற்கொலை பண்ணுக்குவான். அல்லாங்காட்டி
பைத்தியம்னு மென்டலாஸ்பத்திரி.
எதுனா புதுசா க்ளைமாக்ஸ் இருக்கா?
..
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.