ஃபுட் பாயிசன் தான் சாவுக்கு காரணம்?
அழுகுன பன்னிக்கறிய ஒரு பொம்பள புத்தருக்கு கொடுத்துட்டாளாமே. அத சாப்பிட்டுத் தான் செத்தாராம்.

மதுரையில கறுப்பு பன்னிக்கறிய ’கட்டக்கால்’னு கம்மாக்கரையில சொல்வாய்ங்கே. மூல வியாதிக்கு மருந்து இந்த ’கட்டக்கால்’னு பேச்சு உண்டும்.
ஆரப்பாளையம் ரிக்ஷாக்காரன் நெட்ட ஆலமரத்தான் முள்ளுக்காட்டில வெளிக்கு போகும்போது பன்னிங்க மேஞ்சிக்கிட்டிருக்கும்.
இவன் குத்த வச்சிக்கிட்டே ஒரு பார்வை பாப்பான். பன்னி வளக்கிற ஆளுங்க பக்கத்தில இல்லன்னு தெரிஞ்சிக்க. எந்திரிச்சி ஒரு ரெண்டடி தள்ளி ஒக்காருவான்.
இவன் பேண்ட பீயில வாய வக்க வரும் சின்ன பன்னிக்குட்டிங்க.கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு பன்னிக்குட்டிய நாலு காலையும் சேத்துப்பிடிச்சி ஓங்கி தரையில் அடிப்பான். அத கைலிக்குள்ள போட்டு மடித்து கட்டிக்கொண்டு வீட்டுக்கு போயிருவான். அன்னக்கி ஆல வீட்டில கட்டக்கால் கறி கொழம்பு வாசன தூக்கி அடிக்கும்.

மதுர சல்லிங்க அப்பெல்லாம் பேண்ட் போட்ட கல்லூரி மாணவர்களை அடையாளமிட “ குழாகார காவாலிக”னு ஒரு வார்த்தையால சொல்வதுண்டு.
நல்லா ஸ்மார்ட்டா ஒரு கல்லூரி மாணவனை பாத்தா உடனே வாயில் வரும் வார்த்தை “ தாழன் ’சைஸ்’ சரியில்ல”.

வேட்டி கட்டாம, கைலி கட்டாம,
கால் சராய் குழாய் மாதிரி நீளமா மாட்டிக்கொண்டு கையில் ஒரு புத்தகம், நோட் புக்கோட கல்லூரிக்கு போகிறவன் “ குழாகார காவாலி”

”அப்பு டேய், குழாக்கார காவாலிங்க டேஞ்சர் டயாபாலிக்குடா. ஒன்னாம் நம்பர் பிக்காலிக.. சூதானமா பழகனும். நம்மள வில்லங்கத்துல மாட்டி விட்டுடுவானக” எச்சரிக்கை மணியடிப்பான் ஆட்டு மூக்கன்.
ஒத்தக்காதன் கையில நூறு ரூபா கொடுத்து ஒரு குழாகார காவாலி சில்லற மாத்திட்டு வரச்சொல்லியிருக்கான். ஆஹா.. அடிச்சிது லாட்டரின்னு கிளம்புன ஒத்தகாதன் ஆசைக்கனவில் மண்.
அடுத்த அரை மணி நேரத்தில் பி6 போலீஸ் ஸ்டேசனில் சந்தேகக் கேஸில் லாக் அப்பில் இருந்தான். “ ஏட்டயா, அடிக்காதீங்க ஏட்டயா” என்று மன்றாடும்படியாகி விட்டது.
’ஏதுடா உங்கிட்ட இந்த நூறு ரூபா.எங்க ஆட்டய போட்ட, உள்ளத சொல்லு’ விசாரணை கமிசன்.

ச்சே..குழாகார காவாலிக டேஞ்சர் டயாபாலிக்கு.
குழாக்கார காவாலி சினேகிதத்தை பெருமையாக நினைக்கிற சல்லிகளும் அன்று இல்லாமல் இல்லை.
கட்டக்கால் குழம்பு கறி கொடுத்து சல்லிகள் அன்னாரை கௌரவிப்பார்கள்.

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.