Share

Apr 4, 2019

கமலும் அவலும் உமியும்


கமல் தன் கட்சி திரினாமுல் காங்கிரஸோட கூட்டு சேர்ந்திருப்பதாக அறிவித்த விஷயம்..
Strange!
பலருக்கு நினைவிருக்குமா என்பது சந்தேகம். அப்படியா என்று கேட்பவர்களும் நிறைய.

மம்தா பானர்ஜி கூந்தல விரிச்சிப் போட்டு,சிலம்பை தூக்கிப் போட்டு  உடைச்சி,
ஒத்த முலையை பிச்சி வீசி 
"புரபசர் அம்பிகேஷ் மகாபத்ரா ஈமெயிலில் சர்குலேட் செய்த கார்ட்டூன்  எனக்கு விடப்பட்ட ஒரு கொலை மிரட்டல்"ன்னு
 ஒப்பாரி வச்சத இன்னிக்கும் மறக்க முடியுமா?
தொகுதி உடன்பாடுக்கு வழியே இல்லாத வினோத கூட்டணி. வாக்கு பொறுக்கவாவது வழியுண்டா?
கமல் தனக்குன்னு ஒரு பாணி வச்சு முத்திரைய குத்தியிருக்கார்?
எதற்கு கூட்டணி? என்ன பயன்பாடு?
He must get his head out of the clouds.

’நானும் மத்தவங்க மாதிரி ஒரு கூட்டணி போட்டிருக்கேன் பாருங்க. நானும் தான் நண்டு வலையில இருக்கேன்.’
தே.மு.தி.க வோட கூட்டணி சேரத்தயார் என்று சொன்னவர் தானே. 
டி.டி.வி. தினகரனோடு கூட சேர நினைத்தார் என்றெல்லாம் அரசல் புரசலாக காதில் விழுந்தது. அதுவும் உண்மையென்றால்
Yoo too Kamal?
அந்த மமதா அம்மாவாவது ‘போப்பா, போ. ஒன் துருத்திய நீ ஊது. என் துருத்திய நான் ஊதிக்கிறேன்.போ’ன்னு சொல்லிச்சான்னா, அது இல்ல.
அந்தமானுக்கு போய் திரினாமுல் காங்கிரஸுக்காக பிரச்சாரம் செய்யப்போவதாகவும் உற்சாகமாக கூறி விட்டார்.
ஒரு கேள்வி. மமதா பானர்ஜி சென்னப்பட்டணத்திற்கு ஒரு நாள் மக்கள் நீதி மய்யத்திற்காக பிரச்சாரம் செய்ய வருவாரா? ’வருவார், பிரச்சாரம் என் கட்சிக்காக செய்வார்’ என்று கமல் கூற முடிந்தால் சந்தோஷம். இல்லையென்றால் கூட்டணி ஒரு வான வேடிக்கை stunt தான்.
மமதா : ”நீ அவல் கொண்டு வா. நான் உமி தர்றேன். ரெண்டு பேரும் ஊதி ஊதி சாப்பிடுவோம்.”
கமல் வேட்பாளராக தானே களத்தில் இறங்கியிருக்க வேண்டும். வெற்றி இல்லாமல் போய் விட்டாலும் வாக்கு சதவீதம் கட்சிக்கு இதனால் அதிகரிக்க வாய்ப்பு இருந்திருக்கும்.
Politicians are shameless with their deeds, they exploit each other and the people in their own way.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.