What it might have been? என்.சி.வசந்த கோகிலம் நல்ல இளமையில்
இறந்து போகாமல் இருந்திருந்தால் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அந்தஸ்து என்ன?
அண்ணாத்துரையை விட்டு ஈ.வி.கே.சம்பத்
பிரியாமல் இருந்திருந்தால் மு.கருணாநிதியின் அரசியல் வாழ்வு எப்படியிருந்திருக்கும்?அண்ணா மறைந்த போது சம்பத் தானே தமிழக முதலமைச்சர் ஆக வந்திருப்பார்.அங்கனமாயின் எம்ஜியாரின் சரித்திரம்
எப்படி மாறிப்போயிருக்கும்?!

"பறக்கின்ற வவ்வால்களே
பறந்து போங்கள்.
நீங்கள் பறந்து போவதற்கு முன்னாலே என்னுடைய பணிவான விண்ணப்பம். துருப் பிடித்த உங்கள் மூளைக்கு இரண்டு சொட்டு
எண்ணெய் விட்டுப் பாருங்கள்."
பறந்து போங்கள்.
நீங்கள் பறந்து போவதற்கு முன்னாலே என்னுடைய பணிவான விண்ணப்பம். துருப் பிடித்த உங்கள் மூளைக்கு இரண்டு சொட்டு
எண்ணெய் விட்டுப் பாருங்கள்."
1957ல் காஞ்சியில் அண்ணாத்துரையும்
குளித்தலையில் கருணாநிதியும் வெற்றி
குளித்தலையில் கருணாநிதியும் வெற்றி
பெற்ற போது சம்பத் நாமக்கல் நாடாளுமன்றத்தில்
பெருவாரியான வாக்குகள் பெற்று மிகப் பெரிய வெற்றி பெற்றார், ஒரு அதிசயம்.
நாமக்கல் நாடாளுமன்றத்திற்குள் உட்பட்ட ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக தோற்றுப் போனது .ஆனால் சம்பத்
பாராளுமன்றம் சென்றார் !
பெருவாரியான வாக்குகள் பெற்று மிகப் பெரிய வெற்றி பெற்றார், ஒரு அதிசயம்.
நாமக்கல் நாடாளுமன்றத்திற்குள் உட்பட்ட ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக தோற்றுப் போனது .ஆனால் சம்பத்
பாராளுமன்றம் சென்றார் !
சொல்லின் செல்வர் சம்பத்!
"அவர் பொய் சொன்னார் என்று சொல்ல மாட்டேன்.
உண்மைக்கு புறம்பாக பேசியிருக்கிறார் !"
உண்மைக்கு புறம்பாக பேசியிருக்கிறார் !"
தன்னைப் பேசவிடாமல் அநாகரீகமாக கூச்சலிட்ட மாணவர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே சொன்னார்
"காட்டுமிராண்டித்தனத்தின் மிச்ச சொச்சங்கள் !"
"காட்டுமிராண்டித்தனத்தின் மிச்ச சொச்சங்கள் !"
கண்ணதாசன் சொல்வார்
"ஜவகர்லால் நேருவின் சிரிப்புக்குப் பின் நான் கண்ட
அழகான சிரிப்பு என் தலைவன் சம்பத் சிரிப்பு தான். "
அழகான சிரிப்பு என் தலைவன் சம்பத் சிரிப்பு தான். "
"யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் புரியலே.இங்கே அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியலே " சம்பத்தை மனதில் வைத்து எழுதிய சினிமாப் பாடல்.
சிவாஜி கணேசன் " சந்திரமோகன் " நாடகத்தில் சிவாஜியாக நடிக்கும் முன்
வீர சிவாஜியாக சம்பத் தான் நடித்துக் கொண்டிருந்தார்!பின்னாளில் "அண்ணன் காட்டிய வழி யம்மா " பாடலில் சிவாஜி, சம்பத் போலவே உடை உடுத்தி சால்வை போர்த்தி நடித்திருப்பார் !
1951 ல் திமுக முதல் மாநில மாநாட்டின் நான்காவது நாள் அண்ணாத்துரை பேசுகிற வேளையில் ஸ்டன்ட் நடிகர்கள் புடை சூழ
எம்ஜியார் திட்டமிட்டு மேடையேறி கூட்டத்தில்
நடிகரை கண்ட பரவசத்தில் அமளி துமளி ஏற்பட்டு அப்போதே திமுக தலைவர் அலட்சியப் படுத்தப் பட்ட போது சம்பத் தான்
எம்ஜியாரின்
பகட்டு அரசியல் பாணிக்கு எதிராக அண்ணாத்துரையை
உடனேயே எச்சரித்துள்ளார்!
சம்பத்தை மீறிய,நெடுஞ்செழியனை தாண்டிய கருணாநிதியின் வளர்ச்சி பற்றி.... கருணாநிதியின் வார்த்தைகளில் "குளவிக்கூட்டின்
புழுப் போல கொட்டப்பட்டு
கொட்டப்பட்டுத்தயாரிக்கப்பட்டவன் நான்!"
அண்ணாத்துரையின் கணிப்பு "வெட்டி வா என்றால்
கட்டி வரும் தம்பி கருணாநிதி! "
இன்னொன்று சொல்வார்கள்
" அண்ணாவின் கை போகுமிடமெல்லாம்
கருணாநிதியின் கண் போகும் !"
1972ல் அண்ணாத்துரை உயிரோடு இருந்திருந்தாலும் எம்ஜியார் கணக்கு கேட்டு வெளியேறி "உண்மை திமுக" என்ற பெயரில் ஒரு கட்சி ஆரம்பித்து
சக்கை போடு போட்டிருப்பார் என்பது சர்வ நிச்சயம்.

I got to read the series on EVK Sampath in Dinamani Kathir.
ReplyDeleteWhat it might have been had xxxxxx happened / not happened ? Very very interesting question in life !!!!!!!!
People who are projecting themselves infront of public like MGR,Karunanidhi and Jayalalitha are becoming success in public life. Others should have strong destiny to lead them. Somebody has remarked with Anna (not hazare) that "if Parasakthi is not released we would have lost the greatest actor of our time" Anna's reply was Nobody can block the entry of Shivaji Ganesan into tamil cinema, if it is not Parasakthi he would have come in another film.
ReplyDeleteWow... Nice information, before never heard..
ReplyDeleteThank you
Sivaraj Mohan. S