நானும் ஒரு பெண்(1963) படப் பிடிப்பின் க்ளைமாக்ஸ் ஷூட்டிங்குக்கு எம்.ஆர் .ராதா சரியான நேரத்தில் வந்து காத்திருந்து பொறுமை இழக்கின்ற நிலை. ரங்காராவ் ரொம்ப தாமதமாக உள்ளே நுழையும்போது ராதா அவர் பாணியிலேயே ரங்காராவ் காதில் விழும்படியே
கமென்ட் அடித்திருக்கிறார்
கமென்ட் அடித்திருக்கிறார்
" கெட்டவனா நடிக்கிறவன் ஒழுங்கா கரெக்டா நடந்துக்கிறான். நல்லவனா நடிக்கிறவன பாரு . ஒரு ஒழுங்கு இல்ல.படாத பாடு படுத்துறான்." ரங்கா ராவ் ரொம்ப மனம் புண்பட்டு இயக்குனரிடம்
''இன்றைக்கு விடிய விடிய எவ்வளவு நேரம் ஆனாலும் சரி. ஷூட்டிங் வைத்து க்ளைமாக்ஸ் காட்சியை முடித்துக்கொள்ளுங்கள் .எனக்கு உடம்பு சரியில்லை.ஆனால் அது பற்றி கவலையில்லை." என்று ரோசத்தோடு சொல்லி அதன் படியே நடித்துக்கொடுத்தாராம்.
நானும் ஒரு பெண்ணில் மரணப் படுக்கையில் இருக்கும் ரங்காராவை " அத்தான்... ஒரே ஒரு கையெழுத்து போடு அத்தான்...."
- ராதா படாத பாடு படுத்துவார்.
..............
பக்த பிரகலாதா (1967) படத்தில் ரண்யகசிபு வாக ரங்கா ராவ் நடித்தார். ஷூட்டிங்குக்கு ரங்காராவ் சரியாக
ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று தயாரிப்பாளர் ஏ .வி.மெய்யப்ப செட்டியார் காதுக்கு தகவல் போனது.
ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று தயாரிப்பாளர் ஏ .வி.மெய்யப்ப செட்டியார் காதுக்கு தகவல் போனது.
'முழுக்க ஷூட்டிங்கில் நடிக்க மறுக்கிறார். ஒரு நாளில் மூன்று நான்கு மணி நேரம் ஆகிவிட்டால்
கிளம்பி விடுகிறார்.'
கிளம்பி விடுகிறார்.'
செட்டியார் கோபமாகி விட்டார்."நான் இன்று செட்டுக்கு வருகிறேன்.ரங்காராவை பார்த்துக் கொள்கிறேன்"
ஷூட்டிங் ஆரம்பித்து சிலமணி நேரத்தில் செட்டியார் ஆஜர். ரங்கா ராவுக்கு சூட்சுமம் புரிந்து விட்டது. கம்ப்ளைன்ட் ஆகியிருக்கிறது. ஷாட் ப்ரேக்கில் அவரே செட்டியாரிடம் வந்து அவர் அணிந்திருந்த கவச ஆபரணங்களைஎல்லாம் கழற்றி விட்டு சொன்னார் " மிஸ்டர் செட்டியார்! இந்த நகைகளை பிடியுங்கள் "
செட்டியார் கையில் வாங்கியிருக்கிறார் . சரியான கனம் ! "இவ்வளவு கனமான நகைகளைப் போட்டுக்கொண்டு புராண வசனமும் பேசி எவ்வளவு நேரம் நான் உழைக்க முடியும் சொல்லுங்கள்.நான் வீட்டுக்குப் போனபின்னும்
இந்த பாரம் சுமந்த வேதனை என்னை விட்டு நீங்காது "
இந்த பாரம் சுமந்த வேதனை என்னை விட்டு நீங்காது "
செட்டியார் கோபம் பறந்து விட்டது. பரிவுடன் சொன்னாராம் "நீங்கள் செய்தது சரிதான் "
.......
சந்திர பாபு செட்டில் இருந்தால் எப்போதும் ரெங்காராவிடம் அத்து மீறி விளையாடுவாராம்.
இவரால் தாங்கமுடியாத அளவுக்கு கலாய்ப்பார்.சகிக்க முடியாத அளவுக்கு பாபுவின் நடவடிக்கை இருக்கும் போது ரங்காராவ் ரொம்பவே
மூட் அவுட் ஆகிவிடுவாராம்.
மூட் அவுட் ஆகிவிடுவாராம்.
http://rprajanayahem.blogspot.in/2009/12/blog-post_19.html
http://rprajanayahem.blogspot.in/2009/03/blog-post_10.html
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.