Share

May 1, 2012

கேளிக்கை



கோவிலுக்குப் போவது, தெய்வ நம்பிக்கை,இவையொட்டிய நெறிமுறைகள்,மத நூல்களை வாசிப்பது எல்லாமே அப்பட்டமாக கேளிக்கை சம்பந்தப் பட்டது தான்.
Entertainment ! - ஜே .கிருஷ்ணமூர்த்தி.

எந்த ஒரு நம்பிக்கையும் கடும் விஷம் - ஓஷோ.
எல்லாம் தெரிந்த விஷயம் தான். ஆனால் பிக்னிக் போவது எவ்வளவு சந்தோசமான விஷயம். அதிலும் பழங்கால, பாரம்பரியமான கோவில்களில் நுழையும்போது ஏற்படும் பரவசம் எனக்கு சொல்லி முடியாது.

தன்னை மிகவும் வாட்டிய 'கடவுள் உண்டா இல்லையா'
 கேள்வியை முன்  வைத்து  தாஸ்தாவ்ஸ்கி ‘Idiot’என்ற ஒரு நாவலே எழுதும்படியானது.

திருப்புல்லாணி  ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் இருந்த போது ஏற்பட்ட  சாந்தம்.
ராமாவதாரத்திற்கு விதை இந்த கோவில். தசரதன் பிள்ளை வரம் கேட்டு இந்த ஆதிகேசவப் பெருமாள் கோவிலில்   வேண்டியதன்  பலனாகத்தான் ராமாவதாரம்! ஐதீகம்!
ராமேஸ்வரம்- ராமர்  பிரம்மஹத்தி தோஷ நிவர்த்திக்காக ஈஸ்வரனை வழிபட்ட ஸ்தலம். சீதை விளையாட்டாக மணலில் பிடித்து உருவாக்கிய லிங்கத்தை வழிபட்ட  ஸ்ரீராமன் ! Playfulness is heaven!


அதிகாலையில் கடலில் நீராடி பின் இருபத்திரண்டு தீர்த்தங்களிலும் குளித்த போது இவ்வுலக நெருக்கடிகளிலிருந்து தப்பிக்கிற ஆசுவாசம் ஏற்படவே செய்தது. எந்த திட்டமிடலும் இல்லாமல் நடந்த இந்த ஸ்நானம் !  ஐஸ்வர்யம் தரும் மகாலட்சுமி தீர்த்தம் தாண்டியபின் சாவித்திரி தீர்த்தம், காயத்ரி தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் இம்மூன்று தீர்த்தங்களில் நீராடுவது
 மத நம்பிக்கையை கை விட்டு  விட்டவர் , மத சடங்குகளை கை விட்டவர்  இஷ்டசித்தி அடைவதற்காக! வேறெந்த மதம் இப்படி சலுகைகள் தரும்? நாத்திகனுக்கும் இடம் கொடுக்கும் இந்து மதம். கடவுளை எதிர்த்த பிரகஸ்பதிக்கும் இடம்! நாத்திக சார்வாக ரிஷிக்கும் இடமுண்டு! மாட்டுக்கறி சாப்பிட்ட யக்ஞவல்கியனுக்கும் கூட.



தெய்வ நம்பிக்கையை நான் உதறிய பின் "கோவிலுக்கு போகவேண்டும் " என்று என் மனைவி கேட்டதேயில்லை. போனவாரம் ராமேஸ்வரத்தில் இந்த ஸ்நானம் செய்ய நான் ஒப்புக்கொண்டதற்கு அவள் அடைந்த சந்தோசம்.
  I love the way of grace.



We properly understand the miracle of life when we allow the unexpected to happen.
- Paulo Coelho


http://rprajanayahem.blogspot.in/2009/09/blog-post_26.html



















2 comments:

  1. 'நீங்கள் ஆத்திகனாகிவிட்டீர்கள்'
    ஒருவேளை இதைப் படித்ததும் மீண்டும் நாத்திகனாகிவிடலாம் :)))

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.