"காமுகர் நெஞ்சில் நீதியில்லை"
" அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு "
" காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு "
"சித்திரத்தில் பெண் எழுதி சீர் படுத்தும் மானுடமே ஜீவனுள்ள பெண்ணினத்தை வாழவிட மாட்டாயா "
"பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நான் அதை பாடவில்லை "
"அத்திக்காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே "
"அத்திக்காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே "
" ஆதி மனிதன் காதலுக்குப் பின் அடுத்த காதல் இது தான்"
"நெஞ்சினிலே நினைவு முகம் நிலவிலும் தெரிவதும்
அழகு முகம் ஆசைமுகம் "
"நெஞ்சினிலே நினைவு முகம் நிலவிலும் தெரிவதும்
அழகு முகம் ஆசைமுகம் "
"எனக்காகவா நான் உனக்காகவா என்னைக் காணவா என்னில் உன்னைக் காணவா வா வா "
"புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் "
இந்த கீதங்களில் குழையும் ஜமுனா ராணி.
இது ஒரு வகை.
இன்னொரு பாணி பாடல்கள் உண்டு.
அன்பு எங்கே படத்தில் " மேலே பறக்கும் ராக்கெட்டு. மின்னல் பூச்சி ஜாக்கெட்டு "
உத்தம புத்திரனில் "யாரடி நீ மோகினி " பாட்டில்
" விந்தையான வேந்தனே !"
" விந்தையான வேந்தனே !"
குமுதம் படத்தில் " மாமா,மாமா மாமா "
மரகதத்தில் சந்திரபாபுவுடன் " குங்குமப் பூவே, கொஞ்சும்புறாவே"
மரகதத்தில் சந்திரபாபுவுடன் " குங்குமப் பூவே, கொஞ்சும்புறாவே"
ரொம்ப பல வருடங்கள் ஸ்டுடியோ வாசலையே மிதிக்காமல் இருந்த ஜமுனா ராணிக்கு 1987ல் 'நாயகன்' படத்தில் " நான் சிரித்தால் தீபாவளி''பாடலுக்காக இளைய ராஜா மூலம் வாய்ப்பு கிடைத்தது!
ஜமுனா ராணி அந்தக்கால இசை அமைப்பாளர்கள் இசையில் பாடிய அனுபவம் பற்றி சொன்ன விஷயங்கள்:
"1. ஜி. ராம நாத ஐயர் சொல்கிற சங்கதிகள் பாடுகிறவர் குரலில் வந்தே தீரவேண்டும். அந்த சங்கதிகள் வராமல் பின்னணி பாடகரை விடவே மாட்டார்.
2. மாமா கே.வி.மகாதேவன் மெட்டின் உருவத்தை அழகாக கோடி காட்டி விடுவார்." உன் கற்பனைக்கு ஏற்றவாறு உணர்ச்சி,பாவத்துடன் பாடி , தேவையான இடத்தில் சங்கதிகள் நீயே போட்டுக்கொள் " என்று பாடுபவருக்கு முழு சுதந்திரம் கொடுக்கக்கூடியவர்!
3. விஸ்வநாதன் -ராமமூர்த்தி எப்படி சொல்லிக்கொடுக்கிரார்களோ அப்படியே தான் அச்சர சுத்தமாக பாடியே தீரவேண்டும்.பாட்டின் ஒவ்வொரு சொல்லும் தெளிவாக ஒலிக்கவேண்டும்.இதில் இசை அமைக்கும் இருவருமே கவனமாக இருப்பார்கள்.அப்படிப் பாடலைன்னா ஒலிப்பதிவுக்கூடத்திலேயே பாடுபவரின் மானம் கப்பலேறிவிடும்." பாடத்தெரியாம ப்ளேபேக் சிங்கர்னு சொல்லிக்கிட்டு ஏன் பாடவர்றீங்க'' - இப்படி எம்.எஸ். வி கேட்டு விடுவார். அதனால் பயந்து கொண்டே தான் பாடுவோம்."
Keep going sir.
ReplyDelete