Share

Apr 2, 2012

பச்சை தமிழன்

 இது என்னுடைய ஐநூறாவது பதிவு !
 

பச்சை தமிழன்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUguu6iH9y8451WlQQQgZIlTUCuDIONpluS1rX2JgiU8GJwbxFYU8LF5FaTTd23FzcFFgFCedz4RWNacevncAZwpQXXeOBPVE6rG0sf4H64SxNtGcDRZm_pOvm9nJYiOMMvKeoo_A2c1Q/s1600/Kaamaraajar+Right+Hand.jpg

ஒரு நாற்பத்தைந்து வருடத்திற்கு முந்தைய அரசியல் மேடைப்பேச்சு. நெல்லை திராவிடமணி என்ற திமுக பேச்சாளர் மேடையில் திடீரென்று தன் சட்டைப்பையில் இருந்து ஒரு சின்னத்துண்டு தாளை எடுப்பார்.அதை உற்று பார்த்து படிக்கும் போதே கேட்பார்." இங்கே ஒளிந்துகொண்டு என் பேச்சைக்கேட்கும் கதர்ச்சட்டை காங்கிரஸ்காரர்களை கேட்கிறேன். சுவிட்சர்லாந்தில் உள்ள ஜான்சன் அண்ட் பீட்டர்சன் பேங்கில் ஒருகோடியே அறுபதுலட்சத்து முப்பத்தைந்தாயிரத்து எழுபத்தைந்து ரூபாய் பணம் காமராஜருக்கு எப்படி  வந்தது ? '' இந்த புள்ளி விவர பரவசத்தால் கழகக்கண்மணிகளின் விசிலும் கைத்தட்டலும் அந்த இடத்தை அதிரச் செய்யும்போதே திராவிடமணி குரலை நன்கு உயர்த்தி ''காமராஜரே,ஏழைப் பங்காளன் என்று இன்னும் எத்தனை காலம் இந்த தமிழ் நாட்டை ஏமாற்ற போகிறீர்கள்.உங்களுக்கு வெட்கமாயில்லையா?உங்கள் குட்டு இதோ வெளுத்து விட்டதே!"  கையிலிருக்கும் துண்டுச்சீட்டை உயர்த்திக்காட்டுவார்.

காலா காந்தி எப்படியெல்லாம் புளுகுப்புழுதியால் தூற்றப்பட்டார் என்பதற்கு  ஒரு உதாரணம் இந்த மேடைப்பேச்சு.

பெரியார் சொன்னார் 'பச்சை தமிழன் காமராஜ்.கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் இந்த பூமியில் தோண்றியிராத அதிசய மனிதர் காமராஜ்! '
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirA_cp3l2pjIJg6CRuws5KSi3h9wobVqRqqldj6-8-QKeuZs_6YoYjjoysta_7kv1tDWPUmqkngTWPstLbomZwatGywyiEgXyUJHWrL9iXPNiV0UPWa0OTOmZIYsEMo3iwdRcIUM4CKBM/s400/Periyar-Kamarajar-3.JPG


நம்முடைய முன்னோர்கள் கொடுத்துவைத்தவர்கள். அவர்களுக்கு கருப்பு காந்தி காமராஜர் இருந்தார்! நாம் அதிர்ஷ்டக்கட்டைகள்.
நமக்கு Nigger M.G.R. விஜயகாந்த் தான் !


கருப்பு காந்தி காமராஜர் வேஷமே போடத்தெரியாத தலைவர். 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8KJVQUFqXQvTNgNNCHvmuTxemypb-pgWOcsOszkqOFetpPUW7zlcwwX9QBWvxYHnWlalYRCfqx7xfuoMAfSWUWd2jvePwdPG10niI_4RupbcDSnkNDMIMac0u6j22Ip6X-FxF_vdMG48/s150/kamaraj.jpg
நேதாஜி என்பவர் " எங்கள் காமராஜருக்கு எலிசபெத்  மகாராணியே குடை பிடித்திருக்கிறார் " -இப்படி    புளகாங்கிதமாக மேடையில் பேசியபோது காமராஜர் கோபமாகி சொன்னார்  "உட்காருன்னேன். என்ன பேசுறேன்னேன்''.மாணவர் நேதாஜி மிரண்டு பதறி மைக்குக்கு கீழேயே உட்கார்ந்தாராம்.   
'ஜிகினா பந்தா' அரசியல் அறியாதவர் காமராஜர். ஒரு குடு குடு கிழவியை மேடையேற்றி கர்மவீரருக்கு மாலை போடச்செய்ய தொண்டர்கள் முயற்சித்த போது "அந்த கிழட்டுக்கூதியை கீழே இறக்குன்னேன்" மைக் அருகே இருந்ததால் காமராஜரின் எரிச்சலான குரல் கூட்டம் முழுவதும் கேட்கும்படியாக இருந்தது!

காமராஜர் பற்றி  கண்ணதாசன் : 'ஆண்டி கையில் ஓடு இருக்கும். அதுவும் உனக்கில்லையே.'
http://methalodai.weebly.com/uploads/2/6/3/9/26398836/3639442_orig.jpg

'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்' என்று எழுதியதும் பெருந்தலைவரை நினைத்துத்தான்.

'மேகத்தால் மழை பொழியும் மேகத்துக்கு லாபமென்ன

தியாகத்தால் எமை வளர்த்த தெய்வம் கண்ட லாபமென்ன


தன்னையே தேய்த்துத் தரும் சந்தனம் உந்தன் உள்ளம்

மண்ணிலே ஒருவரில்லை மன்னன் உனக்கீடு சொல்ல  



கல்யாண சுகமுமில்லை கடமைக்கு முடிவும் இல்லை

எத்தனை இரவு கண்டாய் என்ன நீ உறவு கண்டாய்

கண்மூடும் வேளையிலும் எம்மைதான் கனவு கண்டாய் '

என்றெல்லாம் கண்ணதாசன் அரற்றினார்.


காமராஜரின் பெருங்குறை - மனிதாபிமானம் குறைவு   - இப்படி பழி போடுவார்கள். பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு ஊட்டிய உத்தமர் மீது கூட அபத்தமாக  களங்கம் சுமத்த முடிகிறதே! அவருடைய அளவு கடந்த நேர்மையும், அரசியல் தூய்மையும் அவருடைய முதிய தாயாரைக் கூட சிரமத்திற்குள்ளாக்கியிருக்கிறது.
http://mmimages.maalaimalar.com/Articles/2012/May/97f72d41-8e60-401f-ad1a-db551adfcfa9_S_secvpf.gif

முதலமச்சச்சரான மகனைப் பார்க்க ஆசையாய் வந்த தாயிடம் காமராஜர்
 " சரி.நீ ஊருக்கு கிளம்பு. சொந்த பந்தங்கள் உன்னைப் பார்க்க இங்கே வர ஆரம்பித்து விடப் போறாங்க ."

தலைவரின் தாயார் தள்ளாத வயதில் விருதுநகரில்  தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதை பார்த்து விட்டு பதறி அன்றைய மந்திரி கடையநல்லூர் மஜீத் அவர்கள் சிவகாமியம்மாளுக்கு வீட்டில் தண்ணீர் குழாய் முனிசிபாலிட்டி மூலம் ஏற்பாடு செய்து கொடுத்ததற்காக  காமராஜரிடம் வாங்கிக்கட்டிக்கொண்ட வசவு.


"ஸ்த்ரீயே,உனக்கும் எனக்கும் என்ன ?" ஜீசஸ் க்ரைஸ்ட்  தன் தாய் மேரியிடம் சொன்ன வார்த்தை !


http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_9319.html

11 comments:

  1. ஐநூறாவது பதிவுக்கு வாழ்த்துகள் சார்.

    ReplyDelete
  2. பள்ளிக்கூடத்துல சாப்பாடு இருக்கணும்னு முயற்சி எடுத்ததே அந்த மாதிரியான நல்ல சிந்தனை உள்ளவருக்குத்தான் சாத்தியம்...முக்கியமான திருப்புமுனை தமிழகத்தில். ஆனாலும் less sung hero...

    ReplyDelete
  3. WE ARE VERY HAPPY THAT YOUR RETURN IN BLOG WRITING. PLEASE DO CONTINUE.

    ReplyDelete
  4. வாழ்த்துகள் RPR அவர்களே!

    ReplyDelete
  5. நம்பர்ல என்ன இருக்கு முடிஞ்சா ஒரு கோடிக்கு try பண்ணுங்க ;)

    ReplyDelete
  6. என்ன ஒரு வார்த்தை ஜாலம். எளிய இயல்பான உரை நடை. boss இவ்வளவு திறமை இருந்தும் இன்டர்நெட் உலகம் முலம் உங்களை படிச்சதில சந்தோசம் . அந்தகால நினைவும் உணர்வும் என்னிடம் மிச்சம் இருக்கிறத உங்கள் ப்ளாக் முலம் தான் தெருஞ்சுகிட்டேன் . இடையில் மனசுக்கு மட்டும் தெரியும் தவிப்பா இருந்த எனக்கு! மீண்டும் உங்கள் ப்ளாக் ஒரு மயில் இறகு. உங்க பாணில சொன்ன
    "டே நாதேறி இந்தனை நாளா எங்க போன?" உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  7. அந்த நேதாஜி சமீபத்தில் தான் காலமானார்

    ReplyDelete
  8. Sir,I am from kadayanallur..happy to see our town's name in your post!!!

    ReplyDelete
  9. நிறைய ஆச்சர்யமான தகவல்களை உங்கள் மூலம் தெரிந்து கொண்டு வருகிறேன்.இன்னும் ஆச்சர்யம் கொடுங்கள்

    ReplyDelete
  10. இவ்வளவு தகவல்களா அதுவும் சுவாரஸ்யமாக!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.