Share

Nov 4, 2008

A joke is a very serious thing!


மூக்கு கண்ணாடி கைவசம் இல்லாததால் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் மெனு கார்டை சர்வரையே வாசித்து காட்ட சொன்ன போது அந்த சர்வர் தன்னிரக்கம் மிகுந்து வழிய வருத்தத்துடன் சொன்னான் . " நானும் உங்களை மாதிரி எழுதபடிக்க தெரியாதவன் தாங்க . எனக்கும் படிப்பு எல்லாம் கிடையாது "

........
இந்தியாவின் முதல் ஜனாதிபதி பாபு ராஜேந்திர பிரசாத் பற்றி அதிகம் கேள்விபட்டிருக்க மாட்டீர்கள் . நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது அவர் பற்றி ஒரு சுவாரசியம் மிக்க செய்தி படித்தேன் .
அவர் பள்ளியில் படிக்கும் போது ஆண்டு தேர்வில் பத்து கேள்விகள் கொடுத்து ஏதேனும் ஐந்து கேள்விகளுக்கு பதில் எழுதினால் போதுமானது என்று கொஸ்டின் பேப்பரில் எழுதப்பட்டிருந்ததாம் . சிறுவன் ராஜேந்திர பிரசாத் பத்து கேள்விகளுக்கும் பதில் எழுதி விட்டு மேலே ஏதேனும் ஐந்து பதில்களுக்கு மார்க் போட்டால் போதுமானது என குறிப்பிட்டாராம் !

...
அருந்ததி ராய் நாவலில் ஒரு Anecdote:
ஒரு தகப்பன் . அவனுக்கு இரட்டை குழந்தைகள் . பீட் ஒரு Optimist. ஸ்டுவேர்ட் ஒரு Pessimist. இருவருக்கும் பிறந்த நாள் வந்தது . அப்பா ஸ்டூ வேர்ட் க்கு ஒரு வாட்ச் , சைக்கிள் பரிசு கொடுத்தார் . அந்த பையனுக்கு வாட்ச் மாடல் பிடிக்கவில்லை . சைக்கிள் கூட அவனுக்கு பல குறைகள் உள்ளதாக தோன்றியது . அவன் அழுது புலம்பி கொண்டிருந்தான் .

பீட்டுக்கு பிறந்த நாள் பரிசாக அவன் அறை முழுவதும் குதிரை சாணத்தை அப்பா நிரப்பி வைத்து விட்டார் .
சரி . பீட் என்ன செய்கிறான் . அப்பா அவன் ரூமுக்கு போன போது
அந்த அறையிலிருந்த சாணத்தை அள்ளி அள்ளி வீசிகொண்டிருந்தான் பீட் . இவர் ஆர்வத்துடன் 'பீட் ! என்ன செய்கிறாய்?' என கேட்டதற்கு
உற்சாகமாக பீட் சொன்னான் ' குதிரை யை தேடிகொண்டிருக்கிறேன் அப்பா ! இவ்வளவு சாணம் இங்கே இருக்கிறதென்றால் இங்கே நிச்சயம் ஒரு குதிரை இருக்கும் தானே !'

......

கிரா பேசும்போது ஒரு நடைமுறை யதார்த்தம் பற்றி சொன்னார் .
"குற்றாலத்தில் உள்ளூர்க்காரன் அருவியில் குளிக்கமாட்டான் தெரியுமா !"

........

'முப்பத்தைந்து வயதான எந்த குடிமகனும் இந்தியக்குடியரசு தலைவராகும் வாய்ப்பு இருப்பது போல ,
மு மேத்தாவும் எதிர்காலத்தில் என்றாவது கவிதை எழுதக்கூடும் !'
-வெங்கட் சாமிநாதன்

......

"நான் செத்த பிறகு தயவுசெய்து எனக்காக இரங்கல் கூட்டம் நடத்தாதீர்கள் . என்னால் வர முடியாது ."
- நகுலன்

..............

சாரு நிவேதிதா கோணல் பக்கங்களில் அடித்த ஒரு ஜோக் .
ஒரு சர்தாரிணி ப்ரா வாங்க கடைக்கு கிளம்பினாள் .
சர்தார்ஜி ' உனக்கு தான் அந்த இடத்தில் ஒன்றுமே இல்லையே ! உனக்கு எதற்கு ப்ரா ?'
சர்தாரிணி ' யோவ் , போன வாரம் நீர் ஜட்டி வாங்கினீர் ! நான் ஏதேனும் கேட்டேனா ?'

..............
A lot of lies are going around the world and the worst of it is
Half of them are true !
- Winston Churchill.
ஒரு விஷயம் . இந்த பதிவின் தலைப்பை சொன்னது கூட சர்ச்சில் தான் !

6 comments:

 1. படித்தேன் ரசித்தேன். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. Dear RPR

  I am really very happy to see you in Tamilish. I am a regular reader of your blog though I have not sent any comments. The happiness never seen it boundaries. Good Day.

  ReplyDelete
 3. Hilarious anecdotes and jokes, thanks for sharing.

  ReplyDelete
 4. இது கொஞ்சம் 'கெட்ட' ஜோக். கெட்டது என்று நினைத்தால் பிரசுரிக்க வேண்டாம். ஆனால் கேட்டதுமே ‘குபுக்'கென்று எனக்கு சிரிப்பை வரவழைத்த ஜோக்.

  கடற்கரை மணலில் இரவில் காதலர்கள் ஒருவரையொருவர் இதழ் கவ்வியவாறு நெருக்கமாக இருக்கிறார்கள். ரோந்து வரும் போலிஸ்காரர் அவர்கள் மீது டார்ச் அடிக்கிறார். காதலனை பார்த்து கேட்கிறார்.

  “என்னய்யா பண்ணிக்கிட்டிருக்கீங்க?”

  காதலன் கடுப்புடன், “ம்ம்.. பல்லாங்குழி விளையாடிக்கிட்டிருக்கோம்”

  ”என்னய்யா நக்கலா?”

  “இதுவரைக்கும் நக்கலை சார். இனிமே தான்!”

  ReplyDelete
 5. ungaladhu ezhuththukkalai indrudhaan padikka naerndhadhu. Pala ariya vizhayangalai therindhu kolla mudindhadhu. Idhuvarai padikkaamal vittu vittomae endra varuththamum vandhadhu MIKKA NANDRI

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.