Share

Nov 14, 2008

ராஜாஜி யின் ஸ்வர்ண ஆகர்ஷன மந்திரம்


ராஜாஜி இந்திய துனைகண்டத்தில் அனுபவிக்காத பதவிகள் கிடையாது . அவர் மஹாத்மாவின் சம்பந்தி . இந்தியாவின் முதல் பாரத ரத்னா .
இவ்வளவிற்கும் காரணம் என்ன தெரியுமா ?

இருபது வருடத்திற்கு முன் எண்பது வயது முதியவர் ஒருவர் என்னிடம் கேட்டார்.
நல்ல ஆங்கில புலமை !தன்னை தண்டபாணி தேசிகரின் ஒன்று விட்ட தம்பி என அறிமுகம் செய்து கொண்டார் .
அப்போதெல்லாம் தண்டபாணி தேசிகரின் " தாமரை பூத்த தடாகமடி !" பாடல் கேட்காமல் நான் தூங்கியதே இல்லை .

தண்டபாணி தேசிகரின் ஒன்று விட்ட சகோதரர் சுப்ரமணிய தேசிகர் அந்த வயதில் நான்காவது திருமணம் செய்திருந்தார் . அந்த நான்காவது மனைவி ஒரு வேலைக்கார பெண் . அந்த பெண் தன் நான்காவது மனைவி என்ற தேசிகர் தன் முந்தைய மூன்று திருமணம் குறித்தும் என்னிடம் சொன்னார் .

ராஜாஜி எட்டு கண்ணும் விட்டெரிய வாழ்ந்ததற்கு காரணம் 'ஸ்வர்ண ஆகர்ஷன மந்திரம்' தானாம் . எந்நேரமும் இதை மனதிற்குள் பாராயணம் செய்துகொண்டு தான் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் ஆயுள் முழுக்க இருந்தார் ,தேசிகர் உறுதியாக சொன்னார் .

வைஷ்ணவர் பாராயாணம் செய்த சைவ மந்திரம்??!!http://2.bp.blogspot.com/-BR_4k7ng-_Y/TV_adWnLkfI/AAAAAAAABTY/iGHx8QtgeJ0/s640/Swarna_Agarshana_bairavar2.166223028.JPG


 

"ஓம் ஜம் ச்லாம் க்லீம் கலும்
ஹ்ராம் ஹரீம் ஹ்ரூம் ஸகவம்
ஆபதோத்தாரனாய அஜாமில பந்தனாய
லோகேஸ்வராய சுவர்ணாகர்சன பைரவாய
மமதாரித்ரிய வித்வேஷனாய
ஓம் ஸ்ரீம் மஹாபைரவாய நமஹ"
இது ஸ்வர்ண ஆகர்ஸன பைரவ மந்திரம் !


ஆண்டு அனுபவித்து அந்திம காலத்தில் ராஜாஜி இந்த மந்திரத்தை யாருக்கேனும் உபதேசிக்க வேண்டிய தன் கடமையை எண்ணியிருக்கிறார் .ஆனால் அவருக்கு உபதேசிக்க தகுதியாக யாருமே தென்படவில்லையாம் . மகனுக்கு யோக்யதை இல்லை என முடிவாக நம்பியிருக்கிறார் . அரசியலில் கூட தன் சீடன் என்று தகுதியுள்ள யாரும் இல்லை என வெதும்பி வேதனையுடன் யோசித்தாராம் . சரி . இலக்கிய உலகில் ..ம்ஹூம் ... வேறு துறைகளில் இதை யாருக்காவது உபதேசிக்கலாமா .அப்படி யாருமே ராஜாஜிக்கு நம்பகமாக தோன்றவில்லையாம் .

ஆனால் சாஸ்த்திர படி ஸ்வர்ண ஆகர்ஷன மந்திரத்தை அந்திம காலத்தில் கட்டாயம் யார் காதிலாவது உபதேசிக்க வேண்டியது வேத கடமை . என்ன செய்ய . தன்னுடைய தொண்ணூறு வயதில் இது அவருக்கு பிரதான மன அவசமாய் இருந்திருக்கிறது .

கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தாராம் . மனிதர் யாருக்கும் தன்னிடம் உபதேசம் பெற யோக்யதை இல்லை .

வீட்டு கொல்லைபுறம் மாட்டு தொழுவத்திற்கு போனாராம் . பசு மாடு கன்றை தன் நாக்கால் தடவிகொடுத்து கொண்டு நின்றிருக்கிறது . பசுமாட்டின் காதில் மந்திரத்தை ரகசியமாக சொல்லிவிட்டார் !
விச்ராந்தியாய் ஆச்சாரியார் பெருமூச்சு விட்டாராம் !!

6 comments:

 1. Wow this one is out of the world, never come across this info. Rajaji was a statesman nonpareil though I am sure if this mantra contributed anything to his blazing intelligence.

  ReplyDelete
 2. :)
  ஆமா, அவருக்கு யாரு உபதேசிச்சாங்களாம்?

  ReplyDelete
 3. சரி அந்த மாடு கதை என்னாச்சு தெரியுமா ..? மாடு காதுல சொல்லும் போது கன்று கேட்டுடுச்சு ... கன்று ஓடிபோய் Chiranjeevekitta சொல்லிடிச்சு ... மாடு Vijayakanth காதுல மந்திரம் சொல்லிடிச்சி ...மீதி கதை உங்களுக்கே தெரியும்...

  ReplyDelete
 4. அந்த மாடு மு க காதுல தான் போய் சொல்லி இருக்கும் என்று நினைக்கறேன்...

  ReplyDelete
 5. Thanks a lot RPR! Hats Off for your efforts to edit it. And I am just 32 and please do not not call me sir - Your posts engage me a lot to question more & more about life's randomness.

  My sincere request to you is: Bring back 2008! I still remember the 2008-2009 period where you regularly updated the blog and many serious/regular bloggers at that time (Orupakkam Sridhar Narayanan, for instance https://twitter.com/orupakkam & SridharBlogs.com) paid a lot of attention to your writing. I am sure that you still have a lot of experiences to share (particularly I have a lot of respect for your rasanai) which will reach even wider audience in this twitter/facebook shared world!

  Hence please write a lot!

  Regards & Many thanks
  Venkatramanan

  ReplyDelete
 6. ரொம்ப வித்தியாசமான பதிவு.

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.