Share

Nov 3, 2008

பசுத்தோல் போர்த்திய புலி

நம்பியார் சுவாமி சினிமாவில் வில்லன் . நிஜ வாழ்க்கையில் புனிதர் . இப்படி பலரும் நினைத்துகொண்டிருக்கிறார்கள் . அந்த காலத்தில் எம்ஜியார் படங்களில் வில்லன் ஆகியதால் பெண்களின் கடுமையான வசவுக்கும் சாபத்துக்கும் ஆளானவர் . பின்னர் பொது மக்கள் மத்தியில் ஐயப்ப பக்தர் என்பதனாலும் பலருக்கும் சினிமாவுலகில் மாலை போட்டவர் என்பதால் ஒரு Saintly Image இவருக்கு உண்டாகி, மேலும் சினிமாவை புரிந்து கொண்ட பெருமையும் சினிமா வில்லன் நிஜ வாழ்க்கையில் உத்தமன் என்பதை உறுதி செய்ய கிடைத்த Role Model ஆக்கி நம்பியாரை தூக்கி பிடித்தார்கள் .

நம்பியாரை பற்றிய நிஜம் ஒன்று . அவர் பேச்சில் ஆபாசம் ,விரசம் இருக்கும் .Vulgarity! ஏதோ ஒழுக்க கண்ணோட்டம் கொண்டு நம்பியாரை அளந்து பார்ப்பதாக எண்ணிவிட வேண்டாம் . ஆனால் ஐயப்ப விரதம் என்பது சுத்தத்தை அடிபடையாக ஏற்று கொண்டு உணவு , லாகிரி , செக்ஸ் எல்லாவற்றையும் புறந்தள்ளி கடுமையான ஒழுக்க கோட்பாடுகளின் அடிப்படையில் நம்பிக்கை வைத்து மேற்கொள்ளப்படுவது என்பதை நினைவிற்கொள்க. அதோடு இந்த பரிசுத்த நம்பிக்கையின் குருசாமியாகி பலருக்கு மாலை போட்டு தனக்கு ஒரு புனித பிம்பத்தையும் ஏற்படுத்திக்கொண்டு ஏற்றுகொண்ட அனுஷ்டானங்களுக்கு உண்மையாக இருக்க வேண்டாமா !

நான் வேலை பார்த்த படத்தில் மனோரமா நடித்தார் . கதாநாயகனின் தாயாக . பிரசாத் தோட்டத்தில் அந்த படத்தின் சண்டைகாட்சி எடுக்கப்பட்ட போது மனோரமா வேறொரு ஷூட்டிங்கில் அங்கே அருகில் இருந்தார் . அவருடைய ஹேர் ட்ரெஸ்ஸெர் கலா என்பவர் ஆச்சி ஷூட்டிங்கில் இருப்பதை தெரியப்படுத்தி வந்து பாருங்கள் என்றார் .

மனோரமா கோபிசெட்டிபாளையத்தில் இரவு பத்து மணிக்கு நான் சின்ன வாக் போய்க்கொண்டிருந்த போது என்னை அடையாளம் கண்டு தன் காரை நிறுத்தி ' ஏம்பா , காரில் ஏறிக்கொள்ளுங்கள் .ஏன் நடக்க வேண்டும் ' என்று பரிவோடு ஒரு முறை சொன்னார் . நான் ' இல்லை அம்மா நீங்க போங்க .நான் தூங்கு முன் சின்ன வாக் போகிறேன் .' என்று சொன்னேன் .எல்லோரும் அக்கா என்று தான் அவரை அழைப்பார்கள் . நான் அம்மா என்று தான் சொல்வேன் .

ஆச்சியை அந்த ஷூட்டிங்கில் நான் பார்க்க போன போது கயிற்று கட்டிலில் இவருடன் நம்பியார் சாமி மறு பக்கமாக திரும்பி அமர்ந்திருந்தார் .ஆர்க் புரூட் எனும் சக்திவாய்ந்த விளக்கு என் மீது அப்போது தற்செயலாக திருப்பப்பட்டது .

மறு நாள் டப்பிங் தியேட்டர் வேலையின் போது மனோரமா அங்கு வந்தவர் முந்தைய நாள் ஷூட்டிங்கில் நம்பியாரை திட்டியதை சொன்னார் . ' இனிமே இப்படி அசிங்கமா ஆபாசமா பேசுனா அப்புறம் பார்த்துக்குங்க . ஏன் கிட்ட பேசவே வேண்டாம் '

அவருடைய உதவியாளரை கூப்பிட்டு ' என்னப்பா இவரு இப்படி எப்பவுமே அசிங்கமா பேசுறாரே ' ன்னு சொன்னேன் . அதுக்கு அந்த ஆள் ' ஐயோ அதை ஏன் கேக்கறீங்க . பூஜையில இவரு ஒக்காந்திருக்கும் போது மகளும் மருமகனும் வந்தாங்க . இவரு ' ரூம்லே போய் வச்சுக்கங்க . இது பூஜை பண்ற இடம் . உங்க பூஜையை ஒங்க பெட் ரூம் போய் வச்சுக்கங்க ' ன்னு சொன்னாரு . மகளிடமே அப்படி தான் பேசுறாரு ' ன்னு சொல்றான் .பார்த்துக்கங்க .' என்று சொன்ன மனோரமா உரத்த குரலில் நம்பியார் பற்றி " பசுத்தோல் போர்த்திய புலி " என்றார் .

நம்பியார் விரசமாய் பேசுபவர் என்பது திரைப்பட துறையில் உள்ள அனைவரும் அறிந்த ஒன்று தான் .

மனோரமா யாரைப்பற்றியும் தைரியமாக வெளிப்படையாக கம்மன்ட் அடிப்பார் . நான் கூட ஆச்சரியப்படுவேன் . 'இந்த மாதிரி லூஸ் டாக் செய்பவர் எப்படி திரையுலகில் நிலைத்து நிற்க முடிகிறது '

...

சித்தர்கள் மத அனுஸ்டானம் , பூஜை புனஸ்காரம் , சாஸ்த்திர சம்பிரதாயங்களை ,சமுக கட்டுப்பாடுகளை உதறி வாழ்ந்தவர்கள் .

கெட்ட வார்த்தை ,கோபம் நிரம்பிய சாமியார் இலங்கையில் இருந்தார் .யோகர் என்று பெயர் .இவர் பற்றி பிரமிள் சொல்வார் .

யாராவதுயோகர் சுவாமியிடம் தன் கஷ்டத்தை முன் வைத்தால் அவர் பதில் ' ஒரு பொல்லாப்பும் இல்லே . எப்போவோ முடிஞ்ச காரியம்டா புண்டை மகனே ' என்பார் .

பிரமிள் சொல்வார் . ' ஆனால் அவர் அருகில் நாம் இருக்கும்போது அருவி சாரல் அருகில் இருப்பது போன்றுஜிலு ஜிலுன்னு இருக்கும் ! ரொம்ப விஷேசமான ஆத்மீக அனுபவம் '

4 comments:

 1. You seem to have insider view of all things in Tamil film world. Never before, I have come across this side of veteran actor Nambiar.

  ReplyDelete
 2. M.N.Nambiar died yesterday. I could not help thinking about this post of yours on hearing the news. Celebrities live on, and out of, their carefully sculpted images. It is revealing, and sometimes outright shocking, when an insider like you breaks their images and shows their real, gory faces (incl.MGR).

  N.Ramakrishnan

  ReplyDelete
 3. நம்பியார் படம் ஒன்றை இணைத்திருக்கலாம்...!!!

  ReplyDelete
 4. //யாராவதுயோகர் சுவாமியிடம் தன் கஷ்டத்தை முன் வைத்தால் அவர் பதில் ' ஒரு பொல்லாப்பும் இல்லே . எப்போவோ முடிஞ்ச காரியம்டா புண்டை மகனே ' என்பார்.//

  I'v heard this:) My granpa used to say the exact lines when talking about Yogar Swami!

  Please write more about பிரமிள்:)

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.