Share

Sep 11, 2026

129th episode Gemini Ganesan part 2

229th Episode 

R.P.ராஜநாயஹம் 
சினிமா எனும் பூதம் 

ஜெமினி கணேசன் பாகம் 2

13.09.2026
ஞாயிற்றுக்கிழமை 

முரசு டிவியில் 
காலை எட்டரை மணிக்கு

...

R.P. ராஜநாயஹம்
'முரசு டிவி'யில்
ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை எட்டரை மணிக்கு

2021 டிசம்பர் 5ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று
'சினிமா எனும் பூதம்' 
தொடர்ந்து ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

Aug 30, 2026

வெற்றிகொண்டான் ஆயாசம்

இவிங்கல்லாம் மந்திரிகளா? இவிங்கல்லாம் கட்சித்
தலைவர்களா? என்ற ஆயாசமும் சலிப்பும் 
 45, 50 வருஷ கால முன்பே இருந்தது.

வெற்றி கொண்டான் :  'பொன்னயன், பொண்டுகன் ,கொழந்தவேலு.
டேய் நீங்கல்லாம் மந்திரிங்கன்னா..
 நான் ஐக்கிய நாட்டு காரியதரிசிடா 
ஆளுக்கொரு சர்பத் ஸ்டால வச்சிக்கிட்டு கட்சின்னு சொல்ற நெடுமாறன், குமரி அனந்தன்லாம் கட்சித்தலைவர்னா 
நான் ஐக்கிய நாட்டு காரியதரிசிடா"

Aug 29, 2026

Episode 128 Cinema Enum Bootham

Episode 128 Cinema Enum Bootham 

"சிவாஜி கணேசன் - Part 2"

முரசு டிவியில் 
30.08.2026
ஞாயிற்றுக்கிழமை 
காலை எட்டரை மணிக்கு 

.....

R.P. ராஜநாயஹம்
'முரசு டிவி'யில்
ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை எட்டரை மணிக்கு

2021 டிசம்பர் 5ம் தேதி முதல் 
ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று
'சினிமா எனும் பூதம்' 
தொடர்ந்து ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

Lady Macbeth

Lady Macbeth can never be a Gentleman
பிரேமலதா"ஆளுங்கட்சி எதிர்க்கட்சி சட்டசபையில் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்" 

திமுகவையும் குறை சொல்லும் Lady Macbeth can never be a gentleman!

https://www.facebook.com/share/p/19CWWbwRH3/

Aug 23, 2026

சண்பகப்பூ

வீட்டு கேட் ஒட்டி செண்பக மரம்.
கைக்கெட்டாத உயரத்தில் ரெண்டு மூணு சண்பகப்பூ.

தி.ஜானகிராமன் எழுதிய "சண்பகப்பூ" கதை.
மோந்து பாத்தா மூக்குல ரத்தம் வந்திடுமோ?
ரொம்ப அழகான பெண்ணைப் பாத்தா சண்பகப்பூ ஞாபகம் வரும்.

https://www.facebook.com/share/p/1M9oDFK2JU/

https://www.facebook.com/share/p/1Bcqqk3tjL/

தொலைந்து போவதே குறியாக குழந்தை


காலையில் பூம்பூம்பூம் மாட்டுக்காரனை 
 பாலன் D நகரில் பார்த்ததும் 
பழனியில் இருக்கும்போது கீர்த்தி இரண்டு வயதில் பூம்பூம் மாட்டுக்காரன் பின்னாலே கூடவே ரொம்ப தூரம் போய் விட்ட நிகழ்வு ஞாபகம் வந்தது.

இரண்டு வயதிலே பல முறை காணாமல் போய் தேடி  
நினைத்தே பார்க்க முடியாத தூரத்தில் கீர்த்தியை கண்டு பிடித்த சம்பவங்கள்.
தொலைந்து போவதிலேயே
குழந்தை குறியாக ..

Aug 22, 2026

திருஞானம் சின்னகண்ணன்


சந்திக்க வந்த விசேஷமான 
அருமை நண்பர் 
பெங்களூரு திருஞானசம்பந்தன்.
திருஞானம் சின்னகண்ணன்

Thirugnanam Chinnakannan
முதல் சந்திப்பு. இப்போது தான் நேரில் பார்க்கிறேன்.

Aug 19, 2026

வேடிக்க - 71


வேடிக்க - 71

1. ஆங்ரி க்ரிஸ்டியன்

2.மன்மத நன்றி 

3. சேவை வரி

Aug 15, 2026

Two types in a single shirt



இரண்டு புகைப்படத்தில் இருப்பது ஒரே சர்ட் தான்.
Reversible Double sided Two in one shirt.

உள் பக்கமும் உபயோகப்படுத்தக் கூடிய ரெடிமேட் ஷர்ட். Two different models in a single shirt.
1987

Eye Donation

Eye Donation 

14.08.2026 
Friday Evening 

Both R.P. Rajanayahem and R. Malarvizhi Donated Eyes to Aravind Eye Hospital

https://www.facebook.com/100006104256328/posts/4572123783001052/?app=fbl

Aug 14, 2026

Cliche

Cliche 

ஒக்காருங்க ஒக்காருங்க ஒக்காருங்க

Aug 13, 2026

M.R. Radha Car Gossips

M.R. Radha Car Gossips 

நக்கீரனில் ராதாரவி கர்ஜனை தொடரில் சொன்ன விஷயம்.

ராதா ரவி எழுதிய அந்த தொடரில் உள்ள சில சுவாரசிய தகவல்கள் பற்றி எழுதிய கட்டுரை சினிமா எனும் பூதம் பாகம் 2ல் இடம் பெற்றிருக்கிறது 

காதலிக்க நேரமில்லை படத்தில் ஆரம்ப காட்சி. ’என்ன பார்வை, உந்தன் பார்வை’ பாட்டில் வரும் அந்த Open top Convertible car! 
சிவப்பு நிற இம்பாலா செவர்லெட் டூரர் கார் எம்.ஆர் ராதாவுடையதாம். 
அவரிடம் கேட்டுப் பெற்று இயக்குனர் ஸ்ரீதர் 
பயன் படுத்தியிருக்கிறார்.

இந்த காரில் எம்.ஆர்.ராதா வைக்கோல் போர் ஒரு முறை ஏற்றியிருக்கிறார். ஆனால் அதை வைத்து உலவும் பிரபல வதந்தி கட்டுக்கதை.  
வைக்கோல் போர் வேண்டும் என்று  
மனைவி கேட்டுக்கொண்டதால் 
அவசரத்திற்கு காரில் ஏற்றியிருக்கிறார்.
 வேறு Motive எதுவும் கிடையாது என்ற 
 உண்மை ராதாரவி மூலம் தெரிய வந்திருக்கிறது.

https://www.facebook.com/share/p/1AeY4avE65/

தி.ஜானகிராமனின் சிகர சாதனை மோகமுள்

"எனக்கெட்டும் அளவில் அகில இந்திய புகழ் பெற்ற தாரா சங்கர், 
கிஷன் சந்தர் உட்பட ஞான பீட பரிசு பரிசு பெற்றோர் எவரும் சாதிக்காததை தி.ஜானகிராமன் 'மோகமுள்'ளில் சாதித்துள்ளார். 
தி.ஜானகிராமனின் சிகர சாதனை கணிக்கப்படாதது தமிழ் மொழியின்  துரதிர்ஷ்டம்"

- வெங்கட் சாமிநாதன்

R.P. ராஜநாயஹம் 1989ல் வெளியிட்ட 
தி.ஜானகிராமன் நினைவு மதிப்பீட்டு மடலிலிருந்து

......

அப்போது  தி.ஜானகிராமனுக்காக நினைவு மதிப்பீட்டு மடல் வெளியிட்டிருந்தேன்.

புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் 

கி வேங்கட சுப்ரமணியன் 
 எதிர் வீட்டில் அப்போது இருந்தார். அவர் ஆச்சரியப்பட்டு 
ஆள் அனுப்பி  அவர் வீட்டுக்கு அழைத்து 
என்னை வைத்து உடனே தி.ஜா வுக்காக கருத்தரங்கம் நடத்த தமிழ் துறை தலைவராயிருந்த 
க.ப. அறவாணனுக்கு
உத்தரவிட்டார்.

Aug 10, 2026

Vismaya Mohanlal's Thudakkam

Vismaya Mohanlal' Thudakkam 

"Make your father proud"

மோகன்லால் வசனம் மகளிடம்.

Serial killer  இனி பார்க்கவே கூடாது என்று ஆறு வருடங்களாக வைராக்கியமாக உஷாராக இருந்தும் கதை தெரியாமல் துடக்கத்தில் சிக்கிக்கொள்ளும்படியாகி விட்டது.

Aug 9, 2026

வேடிக்க - 69


வேடிக்க - 69

'ஆட்டுக்கார அலமேலு' ஆடு
 ஊர்வலமாக கொண்டு போகப்பட்ட போது செம ஜனத்திரள் 

பேராசிரியர் அப்துல் காதர் எழுதிய கவிதை

" ஆடு என்னவோ கம்பீரமாக தான் நின்றது 
மக்கள் தான் மந்தையாகிப்போனார்கள்"

..........

 பேராசிரியர் அப்துல் காதர் பற்றி இந்த கவிதை பற்றியெல்லாம் ராஜநாயஹம் பழைய பதிவொன்றில் குறிப்பிட்டதுண்டு

2019ல் ராஜநாயஹம் எழுதிய பதிவு 

http://rprajanayahem.blogspot.com/2019/09/blog-post_16.html?m=1

மந்தை
- R.P. ராஜநாயஹம் 

உயிரோட ஒர்த்தன் குழியில எறங்கப்போறான்ன உடன
 எவ்வளவு 'ஆன்மீக கலை தென்றல்கள்' 
கூடி நிக்கறானுங்க. 

எங்கங்க இருந்தெல்லாம் கெளம்பி வர்றாங்க. என்னா ஒரு வக்ரம். 

கும்பல் கும்பலா 'சாமியார் தாழன்' கால்ல விழுந்து உண்டியல்ல பணத்த போடுறானுங்க. 
சூடத்த கொளுத்தி, துண்ட போட்டு தாண்டுறானுங்க. 
குழிக்குள்ள எறங்கப்போறத பாக்கணுமேன்னு, மண்ணு ஒரு பிடி போட்டு குழிய மூடனுமுன்னு விடிய விடிய தவிச்சி தக்காளி விக்றானுங்க.

எழுபத்தஞ்சு வருஷத்துக்கு முன்ன சர்ச்சில் கூட்டத்தில பேச வந்தப்ப அவரோட கைபாணம் ஒர்த்தன் கண்ண விரிச்சி "உங்க செல்வாக்க பாருங்க. எம்மாஞ்சனம், எம்பூட்டு கூட்டம்" னப்ப, 
சுருட்ட வாயில இருந்து எடுத்து சர்ச்சில் ரீயாக்சன் "அட போடா, அப்படியெல்லாம் வாய பொளந்து ஏமாறக்கூடாது. என்னய இப்ப இந்த எடத்துல உயிரோட தூக்குல போடப்போறதா சொல்லியிருந்தா இத விட பல மடங்கு அதிகமா,
 எள்ளு போட்டா எள்ளு எடுக்க முடியாதுன்ற அளவுக்கு கெட சனம் கூடியிருப்பாங்கெ. போப்பா போ"

  ஆட்டுக்கார அலமேலு படத்தில் நடித்த ஆட்டை ஊர் ஊரா கொண்டு போனப்ப அத பாக்க கெட சனம். எல்லா ஊர்லயும் கூட்டமான கூட்டம்.

பேராசிரியர் அப்துல் காதர்  அப்ப  ரெண்டு வார்த்த சொன்னார். செம.

"ஆடு என்னவோ கம்பீரமாகத்தான் நின்றது.
மக்கள் தான் மந்தையாகிப்போனார்கள்"

.....

வேடிக்க - 70



வேடிக்க - 70


1.Bigg Boss 10 விளம்பரத்தில அடையாளமே தெரியாத குடுகுடுப்பைக்காரன் 
விஜய் சேதுபதி 

2. சகிக்க முடியாத விளம்பரம் ATMல நகை.
சிவகார்த்திகேயன் தமிழக மக்களை பனகல் பார்க் அருகே வரச்சொல்லி அழைப்பு. விளம்பரத்திலேயே பரவசமாக 
'நக' வாங்கனும்னு 'தவித்து தக்காளி விக்கும்' ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்ஸ்.

3. சரத்குமார் 'நாட்டாமை குடும்பம்' Tattoo
பச்ச குத்திக்கிட்டவங்க எப்பனாலும் நாட்டாமைய சந்திக்க வரலாமாம்.. Offer!

Aug 7, 2026

சந்திர பாபு சினிமா மார்க்கெட்

Chandra babu with MSV and L.R. Eswari 
'பொறந்தாலும்' பாட்டு கூட இந்த காம்பினேஷன் தான்.
ஒருவேளை இந்த ஸ்டில் கூட அந்த ரிக்கார்டிங் போது தானோ என்னவோ?
திருநெல்வேலியில விசுவநாதன் கச்சேரியில பாபு  solo song 
'பம்பரக்கண்ணாலே' பாடும்போது
கூட்டம் ஆட்டம் உற்சாக ஆரவாரத்துடன்.
ஆவேச ஜனத்திரளில் இருந்து ஏகப்பட்ட குரல்கள். 
"Once More"

பாபு பாடி முடித்ததும் "டேய் விசு, என்னடா எனக்கு சினிமால மார்க்கெட்டே இல்லேன்றாங்க. இங்க பார்ரா."

Jul 31, 2026

கௌரவம்

என்னடா இவ்வளவு கௌரவம்?
பொன்னாடை, பூச்செண்டு 
கேமரால கவர் பண்றாங்க...
வெளி வராத Short film shoot
 actor Rajanayahem R.P. Rajanayahem 
2018
Location: SRM University Ramavaram


"And one man in his time plays many parts"

- Shakespeare in 'As you like it'

 
"A poor player struts and frets his hour upon the stage, and then is heard no more"

- Shakespeare in 'Macbeth'