"எனக்கெட்டும் அளவில் அகில இந்திய புகழ் பெற்ற தாரா சங்கர்,
கிஷன் சந்தர் உட்பட ஞான பீட பரிசு பரிசு பெற்றோர் எவரும் சாதிக்காததை தி.ஜானகிராமன் 'மோகமுள்'ளில் சாதித்துள்ளார்.
தி.ஜானகிராமனின் சிகர சாதனை கணிக்கப்படாதது தமிழ் மொழியின் துரதிர்ஷ்டம்"
- வெங்கட் சாமிநாதன்
R.P. ராஜநாயஹம் 1989ல் வெளியிட்ட
தி.ஜானகிராமன் நினைவு மதிப்பீட்டு மடலிலிருந்து
......
அப்போது தி.ஜானகிராமனுக்காக நினைவு மதிப்பீட்டு மடல் வெளியிட்டிருந்தேன்.
புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர்
கி வேங்கட சுப்ரமணியன்
எதிர் வீட்டில் அப்போது இருந்தார். அவர் ஆச்சரியப்பட்டு
ஆள் அனுப்பி அவர் வீட்டுக்கு அழைத்து
என்னை வைத்து உடனே தி.ஜா வுக்காக கருத்தரங்கம் நடத்த தமிழ் துறை தலைவராயிருந்த
க.ப. அறவாணனுக்கு
உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.