Share

Jul 18, 2024

I'm humbled

I’m humbled


பெருமை என்பது முறம். புடைத்து எடுத்தால் ஒன்றும் இல்லை.

I will survive even Praise.

கட்டுரை என்பதின் சம்பிரதாய வடிவத்தையே                  எழுத்தில் உடைத்தவன் நான்.

2009ல் பஞ்சரு பலராமன் : என்னைப் பொறுத்தவரை சுஜாதாவின் இடத்தைப் பிடிக்கும் தகுதியும், எழுத்து வன்மையும் கொண்டவர் தமிழ் பதிவுலகத்தில் மட்டுமல்ல எழுத்துலகத்தில் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் ராஜநாயஹம். மிகச் சமீபத்தில் அவரின் பதிவுகளை வாசகர் ஒருவர் மெயில் மூலம் அறிமுகப்படுத்தி இருந்தார். வாசிக்க ஆரம்பித்தவன் முடித்து விட்டுதான் மற்ற வேலைகளையே பார்க்க ஆரம்பித்தேன். ஹ்யூமர் எழுத்துக்கும், விஷய ஞானத்திற்கும் ராஜநாயஹம் எழுத்து உதாரணம் என்றே சொல்லலாம்.

நான்கு வருடங்களுக்கு முன் டிசம்பர் 1ம் தேதி ’கூத்தாடி’ ட்விட்டரில் எழுதினார்: இவர் இணையத்தில் இல்லையே என நான் வருத்தப்பட்ட ஒரு நபர் சுஜாதா. இவர் இருக்கிறாரே என அகமகிழ்ந்தது ராஜநாயஹம் சாரைப் பார்த்து. 

லக்கி கிருஷ்ணா:  துணுக்குக்கும் கட்டுரைக்கும் இடையிலான வடிவம் ராஜநாயஹத்துக்கு எப்படி சாத்தியமாகிறது என தெரியவில்லை. எழுதுவதற்கு கடினமான வடிவம் இது.
பழைய டயரியை புரட்டி வாசிப்பதைப் போன்ற சுகமான சுவாரஸ்யம் R.P.ராஜநாயஹம் எழுத்துக்களில் கிடைக்கிறது.
தோழர் ராஜநாயஹத்திற்கு ஒரு தனித்துவம் வாய்த்திருக்கிறது.
மேலும் R.P.ராஜநாயஹம் வலையின் வெற்றியே அவர் தேர்ந்தெடுக்கும் எளிமையான மொழியில் இருக்கிறது.

கிருஷ்ணமூர்த்தி S : எத்தனையோ ஆயிரம் பேர்கள் தமிழில் வலைப்பூ வைத்துக்கொண்டு பதிவுகள் எழுதுகிறார்கள்.
 ஆனால் ஒரு வலைப்பதிவு எப்படி இருக்கவேண்டும்  என்பதற்கு சிறந்த உதாரணம் சொல்ல வேண்டுமானால், தமிழில் ஒரு பத்து வலைப்பூ தேறுமா? 
சுருங்கச்சொல்லி, நெத்தியடியாக
 ’பத்தி எழுத்து’ என்றால் அது இப்படித்தான்
 என்று ஒரு உதாரணம் காட்ட வேண்டுமா? இலக்கியம், கவிதை, சினிமா என்று பல தளங்களிலும் தன்னுடைய அனுபவத்தைச் சொல்கிற ஒரு பதிவரை காட்ட வேண்டுமென்றால் அது R.P.ராஜநாயஹம் ஒருவர் தான்!

ஆல் தோட்ட பூபதி: அனுபவம் எனும்
 அழகிய குழந்தையை 
நீங்கள் அலு(ங்)க்காத நடையில் 
அழைத்து செல்கிறீர்கள்!

Kana Praba: என்ன எழுத்துய்யா… 
அசுரன் ஐயா நீங்கள்!

Selva/வினையூக்கி: The funny thing about ‘Miracles’ is that they happen! R.P.Rajanayahem is one such! You are an Information INTELLECT அமுதசுரபி!

பிரபல ரவுடி : உங்க ப்ளாக்கை 2008ல் இருந்து படிக்க ஆரம்பிச்சிருக்கேன். 
எழுத்து ராட்சசன்ங்க நீங்க… Awesome

 நல்லவன் : உங்க ஞாபக சக்தி ஒவ்வொரு பதிவை படிக்கும்போதும் ஆச்சரியப்படுத்துகிறது.

சித்ரா சம்பத்: ராஜநாயஹம் ’பயன் காணா மேதை’!

ராஜரத்தினம் : இந்த மனுஷனுக்கு (R.P.ராஜநாயஹம்) தெரியாத ஒரு விஷயத்தை கடவுள் கூட தெரிஞ்சிக்க ஆசைப்படமாட்டார்!

ஜெகன் T: சந்தோஷமோ, சோர்வோ – அதிலேயே விழத்தோன்றுகிறது. சந்தோஷம் கூட்டும் சோர்வை குறைக்கும் அந்த அதிசயம் R.P.ராஜநாயஹம் அவர்களின் எழுத்து.

கெக்கெ பிக்கினி : ராஜநாயஹம் பத்தி எழுத்தாளராக தனக்கென தனி இடம் பிடித்தவர். சினிமாச் செய்திகளை சொல்லும் விதமே தனி.

(சு)வாசிக்கப்போறேங்க! : வலைப்பதிவுகளின் வடிவமும், வெளிப் படுத்துகிற கலையும், புத்தகங்கள், கவிதை எழுதுவதை விட வேறானது. அதைக்கண்டு கொள்வதற்கு ஐம்பதாண்டுகள் போக வேண்டாம். இப்போதே இங்கேயே R.P.ராஜநாயஹம் ஒருவர் இருக்கிறார்!
 அவரை விட வலைப்பதிவுகளைத் திறமையாகக் கையாளத் தெரிந்த வித்தைக்காரரைப் 
பார்ப்பது மிகவும் கடினம்.

மகிழ்வரசு : கண்டிப்பா இணையத்தில் எனக்குப் பிடித்த எழுத்தாளர் ராஜநாயஹம். 
அப்பப்ப இவரை நான் quote பண்ணுவேன்.

SKP Karuna : உண்மை. இணையத்தில் எல்லோருக்கும் பிடித்த எழுத்தாளர் R.P.ராஜநாயஹம் தான். எத்தனை அனுபவம்! எத்தனை நினைவாற்றல்!

செந்தழல் ரவி: R.P.ராஜநாயஹம் இனிமேல் ஒரு நாவல் எழுதினால் அது சாகித்ய அகாடமி பெறக்கூடும்.

Prathipa :எல்லாவற்றையும் பகுத்தறிந்து எழுதுவது சாதாரணம் இல்லை! R.P.ராஜநாயஹம் சார் ப்ளாக் படிங்க. You will learn a lot!

UmamaheshVaran Lao Tsu :  ராஜநாயஹம் ஓர் அற்புதன். அவரை நான் காதலிக்கிறேன். இளவயதில் அந்த Carnal Thoughts
 படிக்காத நாளே இல்லை!

Covai M Thangavel :தமிழ் நாட்டுச் சாராயம் போல இருப்பவர்கள் எல்லோரும் இலக்கிய கர்த்தாக்கள் என்று அலறிக் கொண்டிருக்கும் போது அருமையான உடலுக்கும் உள்ளத்துக்கும்
 உவகை தரும் ஒயின் போத்தலான நீங்கள் அமைதியாக இருப்பதுதான் வேடிக்கை. 
எழுத்தாளர்களின் உச்சம் நீங்கள் தான்.
 இதை எங்கு வேண்டுமானாலும் சொல்வேன். உங்களின் அருகில் நிற்க கூட 
எந்த தமிழ் எழுத்தாளருக்கும் தகுதி இல்லை என்றே நினைக்கிறேன்.

https://www.facebook.com/share/p/9YJqapKCTJsm7JzC/?mibextid=oFDknk

.......

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.