வயிரவனுக்கு குஷ்டம். ஆத்துக்கு அந்த பக்கம் தத்தனேரிக்கு படம் பாக்க போற ஆரப்பாளய சல்லிங்களுக்கு ரொம்ப நெருக்கம்.
கஞ்சா விக்கற தொழு நோயாளியிடம் கொஞ்சமும் அய்யரவு காட்டாத இந்த கஸ்டமர்கள்
வயிரவன் பற்றி எப்போதுமே விசால மனதுடன்
' There is nothing wrong with seller
Vairavan. He is an important person in our Thathaneri premises. We are depending on him' என்ற காந்தீய நோக்கில் கௌரவித்தார்கள்.
போலீஸ் எப்போதும் வயிரவனை லத்தியால லேசா ரெண்டு தட்டு தட்டி விட்டு சரக்க புடுங்கிட்டு ' ச்சீ போறான். இவன எதுக்கு தூக்கிட்டு போனும்' ன்னு அரெஸ்ட் பண்ணாம போயிடுறதுண்டு.
இந்த வயிரவன் பேச்சில் அதிகமும் அவனுடைய மனைவி தான் இடம் பெறுவாள்.
'எம் பொஞ்சாதிக்கு மல்லிகப்பூ தாம்பா ரொம்ப பிடிக்கும் '
' எம் பொஞ்சாதி சுசிலா பாட்டு
ரசிச்சு கேப்பா '
' எம். ஜி.ஆரு படம் ரிலீஸ் ஆனா போதும். எப்பயா கூட்டிட்டு போறன்னு அனத்துவா. '
' ஒன்ன இப்படி உருக்கொலச்சுட்டானே ஆண்டவன்.
நா சாமியே கும்பிட மாட்டேம்பா எம்பொஞ்சாதி. வைராக்கியமானவ. கோயிலுக்கு நா கூட்டிப்போனா கஞ்சா விக்றது ஒரு பொழப்பா? எங்கள நாசம் பண்ணிட்டியே. நீ வெளங்கவே மாட்ட போன்னு சாமிய கன்னா பின்னான்னு திட்டுவா.'
'ரொம்ப எரக்க சுபாவம்ப்பா.. சர்க்கஸ் பாக்கப்போனா அங்க அந்த பிள்ளைக வித்த காட்டும் போது பரிதாப படுவா.
ஐயோ, ஐயோ ன்னு புலம்பி, பாவம் இந்த பிள்ளங்கன்னு உச்சு கொட்டுவா. கண்ணு கலங்கிடுவா. ஆபத்தான வித்தய சர்க்கஸ்ல பாக்க மாட்டாப்பா. கண்ண மூடிக்குவா. எம் பொஞ்சாதிக்கு எளகுன மனசுப்பா. கொழந்த மனசு. '
..

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.