Share

Dec 27, 2019

M.D.ராமநாதன் பாடும்போது...



ஓவியத்தில் ஒரு கோபுரத்தின் உயரத்தைக்
காட்ட வேண்டுமானால் அந்த கோபுரத்தின் பக்கத்தில் ஒரு தென்னை மரத்தை வரைந்து விட்டால் போதும்.

எம்.டி.ராமநாதன் பாவத்தோடு பாடும்போது இப்படி இசை சித்திரமாக விரியும்.
டைகர் வரதாச்சாரியின் சீடன் M.D.ராமநாதன்.
டைகர் மாறுகண் கொண்டவர்.

ராமநாதன் எந்த அளவுக்கு குருவை உள்வாங்கி செரித்துக்கொண்டார் என்றால்,அவருடைய மாறுகண் கூட இவருக்கும் வந்து விட்டது.
The best example of a true devotee to Guru! The relationship was so noble that the student inherited even the squint in the eyes.
தேவச பாகவதரின் மகனாக பாலக்காடு மஞ்சப்பராவில் பிறந்து
பிசிக்ஸில் பி.எஸ்.சி பட்டம் பாலக்காடு விக்டோரியா கல்லூரியில்.
கலாசேத்ராவில் இசையில் பட்டம்.
முதல் பேட்சில் இவர் ஒரே மாணவர் தான்.
டைகர் வரதாச்சாரியின் இசை ஞானத்தை முழுவதுமாக உறிஞ்சிக்குடிப்பதைக் கண்டு (கிட்டத்தட்ட கொள்ளை)செல்லமாக ராமநாதனை “திருடன்!” என்றே சொல்வார்.
A Fitting recognition of merit!
இவருடைய வாய்ப்பாட்டு ஸ்லோ டெம்போ.
Speed is a hindrance and never a help.
Be very relaxed, and much will happen.
- Osho
ராமநாதனின் இசையை அனுபவிப்பது தேர்ந்த இசை ரசிகர்களுக்கும் ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாக தெரியும். என்ன இது இப்படி சவுக்கத்திலும் சவுக்கம் என்று தோன்றும்.
MD ராமனாதனின் கச்சேரியைக் கேட்கும் போது மேடைக் க்சசேரி பந்ததி என்பது உருவானதற்கு முன்பு கர்னாடக சங்கீதத்தை எல்லோரும் இப்படித்தான் பாடியிருப்பார்களோ என்று தோன்றும்.
அவரது சாரீரம் அற்புதமான ஒன்று.
மைக்கே தேவையில்லை என்ற அளவுக்கு கணீரென்ற குரல்.
ராகத்தை அனுபவித்துப் பாடுவார். அதன் ஒவ்வொரு அம்சத்தையும் கொஞ்சங் கொஞ்சமாக நமக்கு அளிப்பார்.
ராமனாதனின் இசையில் மனதைப் பறி கொடுத்தவர்கள் அவரை விட்டு என்றுமே விலகியது கிடையாது.
சஹானா, யதுகுல காம்போதி, ஸ்ரீ, கேதாரம் இதெல்லாம் இவர் பாடக்கேட்க பிரபல வாய்ப்பாட்டுக்காரர்கள் தவம் இருப்பார்கள்.
இவர் ஒரு ம்யூசிக் தெரபிஸ்ட் என்று சொல்லப்படுவதுண்டு.
ரத்தக்கொதிப்பு குணமாகி விட்டதாக இவர் பாடல்களைக் கேட்ட ஒரு ரசிகர் சொன்னதுண்டு.
மயிலை கபாலீசுவரர் மீது ‘பரமகிருபாநிதே’ என்றும் ‘சம்போ மஹாதேவா’ என்றும் கீர்த்தனைகள் இயற்றியிருக்கிறார்.
பாகேஸ்வரி ராக ’சாகர சயனா’ இவர் இயற்றியது.
இந்திய அரசாங்கம் எம்.டி.ராமநாதனுக்கு பத்மஸ்ரீ பட்டம்1974ல் வழங்கி கௌரவித்தது.
சங்கீத நாடக அகாடமி விருது,
இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின்
சங்கீத கலாசிகாமணி விருது வாங்கியவர்.
முத்துசாமி தீட்சிதரின் நாட்டை ராக ’மஹா கணபதிம்’
ஸ்ரீ வரத தாசாவின் அடானா ராக ’ஹரியும் ஹரனும்’
இவர் பாடியதை கேட்பது ரசானுபவம்.
இவர் இயற்றிய எல்லா கிருதிகளும் வரத தாச என்ற முத்திரையைப்பெற்றிருக்கும்.
வரதாச்சாரியின் தாசன் என்பதையே அது குறிக்கும்.
தியாகய்யரின் ஹிந்தோளம் ‘சாமஜ வரகமனா’ ஓராயிரம் தடவை ஒரு நூறு பேர் பாடக்கேட்டிருக்கிறேன்.ஆனால் எம்.டி ராமநாதன் பாடுவது மட்டும் ஒரு புது அனுபவம் தான்.
தியாகய்யரின் சஹானா ’கிரிபை நெல’ இவர் பாடி மட்டுமே கேட்கவேண்டும். ஆத்மீக அனுபவம்.
காபி தில்லானா தரும் ஆசுவாசம்.
1984ல் இவர் மறைந்த போது வயது 61.
எம்.டி.ராமநாதன் மாதிரி இன்னொரு வித்வான் தோன்ற எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டுமோ?
...........
M.D.ராமநாதன் பற்றிய கவிதை
ராமநாதன் பாடும்போது
(இசை மேதை M.D.ராமநாதனுக்குச்
சமர்ப்பணம்)
ராமநாதன் பாடும்போது
ஏதோ பனிமூடிய பூமியில்
புதைந்து போன
புராதன நகரத்தெருக்களில் திரியும் ரசிகன்
இப்போதும் வற்றாது தவழ்ந்தோடும் மனித
சப்தத்தின்
தெளிந்த நீர்ச்சுனையைக் கண்டடைகிறான்.
ராமநாதன் பாடும்போது
இறந்து கொண்டிருக்கும் பூமியிலிருந்து
பறந்துயரும்
கடைசி விண்வெளிவீரன்
வேறொரு நட்சத்திரத்தில் இலை விரித்து
முளைக்கும்
உயிரின் தளிரைக் கண்டடைகிறான்
- சச்சிதானந்தன் எழுதிய கவிதை
மலையாளத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு 1991ல் மீட்சி 35வது இதழில் வெளியானது
.......

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.