வெங்கடேஷ் : நம்ம அருள் கிடைச்சவங்களை பூலோகத்தில வருமான வரி, அமலாக்கத்துறை, சி.பி.ஐ, போலீஸ் படுத்துற பாட்டை நினைச்சா ரொம்ப சங்கடமா இருக்கு.
என் வேலய கொறை சொல்ற மாதிரியில்ல இருக்கு. என்ன நான் சொல்றது?
பத்மா : நீங்க ’காக்கும் தொழில்’ செய்ய வேண்டியிருக்கிறதால நல்ல வேளை மல்லயாவ லண்டனுக்கும் நீரவ் மோடிய நியூயார்க்குக்கும் அனுப்பிட்டீங்க.
அங்கயும் நிம்மதியா இருக்க முடியுதா, பாவம்.
வெங்கடேஷ் : ’சிஸ்டம் சரியில்ல.
நானும் பேங்க்கு மூலமா தான
அருள் பாலிக்க வேண்டியிருக்கு.
அத இப்படி கரிச்சி கொட்டுறாங்கே..
ஜெயில்ல போட்டப்புறம் கூட என்ன பாடு படுத்தறானுங்க.
பர்ச்சேஸ் பண்ண வெளிய போயிட்டு வந்தா கூட பிரச்ன.’
பத்மாவதி : 'லட்சுமி கடாட்சம்' என்பத கிரிமினல் வேலங்கறானுங்க.
கிலோ கணக்குல தங்கம், வைரம்,
லட்சக்கணக்கில பணம்னு
உண்டியல்ல போடறவங்க
நம்ப அருள் கிடைச்சவங்க தான..
பதிலுக்கு அவங்களுக்கு
நாமளும் நாலு செய்யணும்னு நெனக்கிறதே
தப்பா அர்த்தமாயிடுச்சே...’
...............
பெற்றோர் திருப்பதிக்கு குழந்தையை அழைத்துக் கொண்டு போய் மொட்டை போட்டு
சாமி வெங்கடேசப்பெருமாள் தரிசனத்திற்காக கூண்டில் அடைபட்டு,
அடைபட்டு சாமி கும்பிட்டு விட்டு
உண்டியலில் ஒரு முழு ஐம்பது ரூபாய் போட்டார்கள்.
முன்னதாக அந்த ரூபாய் நோட்டில்
“அனுஸ்ரீக்கு சளி, மூக்கடைப்பு நல்லா போகனும். வெங்கடேசாய நம”
என்று சீனிவாசப்பெருமாளுக்கு விவரம் எழுதி போடுகிறார்கள்.
வெங்கடேசப்பெருமாள் அனுஸ்ரீயின் ஏட்டை எடுக்கிறார்.
சளி, மூக்கடைப்பு நிவர்த்தி விஷயமாக மஹாலட்சுமியிடம் என்ன செய்யலாம் என கேட்கிறார்.
பத்மாவதி தாயாரின் reply: 'ஐம்பது ரூபாய் தானே.. இப்போதைக்கு சளியை மட்டும் நிவர்த்தி செய்வோம். ஒரு நூறு ரூபாயில்
அல்லது இருநூறு ரூபாய் நோட்டில் விபரம் எழுதியிருந்தாலாவது மூக்கடைப்பையும் சரி செய்திருக்கலாம்.
தமிழ் நாட்டில் இருந்து திருப்பதி வருகிறார்கள்.
ஆகிற செலவோடு உண்டியலிலும் நல்ல தொகை போடுவதற்கென்ன?
இதில எதுக்கு கஞ்சத்தனம்.'
The temple bell stops?
திருப்பதி உண்டியலில் போட்ட ஐம்பது ரூபாய் எங்கெங்கோ சுற்றி,
ஆந்திராவை விட்டு கிளம்பி,
தமிழ் நாட்டின் தலை நகரத்திற்கு வந்திருக்கிறது.
உலகம் ரொம்ப சின்னது தானே?
ஆற்காட் ரோட்டில் நான் நூற்றைம்பது ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு விட்டு இருநூறு ரூபாய் நோட்டை நீட்டிய போது
எனக்கு மீதியாக வந்த நோட்டு அதே ஐம்பது ரூபாய்.
மெடிக்கல் ஷாப்பில் மருந்து வாங்குவதற்கு
அந்த நோட்டைத் தான் கொடுத்தேன்.
......
மீள் பதிவு
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.