Share

Dec 9, 2019

எம்.ஜி.ஆர் சங்கீத கொடை


முதல்வர் எம்.ஜி.ஆர் தன்னை வந்து சந்திக்கும்படி பாலமுரளி கிருஷ்ணாவிற்கு தகவல் சொல்கிறார்.
தமிழக முதல்வரை பாலமுரளி கிருஷ்ணா சந்திக்கிறார்.
எம்.ஜி.ஆர் அளித்த பணி ஒன்று. ’தியாகப்ரும்மத்தின் கீர்த்தனைகளை தமிழில் மொழிபெயர்த்து இசைத்து பாடவேண்டும்.’
பாலமுரளி சிரமேற்கொள்கிறார்.
தியாகராஜ கீர்த்தனைகளை தமிழில் மொழி பெயர்த்து பாடல்களை இசைப்படுத்துகிறார்.
கீர்த்தனைகளை மொழிபெயர்த்தவர் அவருடைய துணைவி அபயம் அவர்கள் தான்.
ஆறே மாதத்தில் எள் என்றால் எண்ணையாக தயாராகி விட்டார் பாலமுரளி கிருஷ்ணா.
எம்.ஜி.ஆரிடம் இருந்து அழைப்பு வரும் என்று நினைத்திருக்கிறார்.
”இன்னேரம் நொறுங்கியிருக்கணுமே” சபாஷ் மீனா பட சிவாஜி போல.
முதல்வரை சந்திக்க இவரே முயற்சித்தும் பார்த்திருக்கிறார்.

அவ்வளவு சுலபமா அது?

எம்ஜிஆர் மறந்து விட்டார் போலிருக்கிறது.
ராஜாங்க தலைமைக்கு எத்தனையோ சுமை.

சரிதான் என்று பாலமுரளி பிரமைகளை உதிர்த்து வேறு காரியங்கள் பார்க்க ஆரம்பித்திருக்கிறார். வெளி நாட்டு சங்கீத கச்சேரியே போதாதா?
இரண்டு வருடம் ஓடி விட்டது.
எம்.ஜி.ஆரிடம் இருந்து அழைப்பு.
”நான் உங்களிடம் சொன்ன வேலையை மறந்து விட்டீர்களா? இரண்டு வருடம் ஆகி விட்டது.”
பாலமுரளிக்கு எப்படியிருந்திருக்கும்?
When Caesar says “Do it”, it is performed.
பதற்றத்துடன் “அந்த பணியை நான் ஒன்றரை வருடம் முன்னரே முடித்து விட்டேன்.”
”அப்புறம் என்ன? என்னிடம் வந்து ஏன் சொல்லவில்லை?”
“ உங்களை சந்திக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவே இல்லை”
வழி மறித்து தடுக்கிற நந்திகளுக்கு எம்.ஜி.ஆர் என்ற மஹாபுருஷர் விலக்கல்லவே. அவரும் அறியாததல்ல.
மிக சிறப்பான விழாவிற்கு எம்.ஜி.ஆர் ஆணையிடுகிறார்.
தியாகப்ரும்ம கீர்த்தனைகளை தமிழில் பால முரளி பாடி அரங்கேற்றுகிறார்.
எம்.ஜி.ஆர் உதவியாளரை அழைத்து சொல்கிறார். “பாலமுரளியிடம் பிரசாதத்தை கொடுங்கள்”
பிரசாத பை பெரிதாய் பாலமுரளி கையில்.

பாலமுரளி வீட்டிற்கு வந்து பார்க்கிறார்.
கத்தை கத்தையாய் பணக்கட்டு.
கட்டிலில் தான் அதையெல்லாம் எடுத்து வைக்கிறார்.
பத்து லட்சம் என்பது அன்று மிக மிகப்பெரிய தொகை.
அதோடு பாலமுரளி கிருஷ்ணா அதுவரை பார்த்தேயிராத பெருந்தொகை.
பால முரளி விம்மி,விம்மி அழுகிறார்.
தேம்பி அழுகிறார்.
…......

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.