”திருட்டு வகையில் மகா மோசமானது அறிவுத்திருட்டு.
தீமைக் குணங்களில் மிக மோசமானது உலோபம்.”
-டி.என்.ராமச்சந்திரன்
இன்று குமுதம்(11.07.2012 தேதியிடப்பட்டது) பார்த்தேன். 28ம் பக்கம் சுனிலிடம் கேளுங்கள் கேள்வி பதிலில் நான் காக்கா ராதா கிருஷ்ணன் பற்றி 21.06.2012ல்எழுதிய பதிவில் இருந்து அங்கங்கே அப்படியே சில வாக்கியங்கள் உறுவி வாக்கிய அமைப்பு மாறாமல் வெளியிடப்பட்டிருக்கிறது.
என்று R.P.ராஜநாயஹம் தன் வலைத்தளத்தில் எழுதியிருக்கிறார்
என்றோ அல்லது
நன்றி: R.P. ராஜநாயஹம் என்று ஒரு வார்த்தை கூட இல்லாமல்.
குறைந்த பட்சம் rprajanayahem.blogspot.com என என் ப்ளாக் விலாசம் மட்டும் குறிப்பிட்டிருக்கலாம். ஆனால் குமுதம் செய்யவில்லை.
சுனிலிடம் கேளுங்கள்
காக்கா ராதாகிருஷ்ணனுக்கு அந்த ப் பெயர் ஏன் வந்தது? அவர் நடித்த முதல் படம் எது?
ரகுராம், மயிலை.
பி.யு.சின்னப்பாவின்”மங்கையற்கரசி”(1949) படத்தின் மூலம் தான் திரையில் காக்கா அறிமுகமானார்.
காக்கா பிடித்தால் தான் முன்னுக்கு வர முடியும் என்பதைக் கேட்க நேர்ந்த ராதாகிருஷ்ணன் சிரத்தையுடன் நிஜமாகவே ஒரு காக்கையைப் பிடித்துக்கொண்டு வருவார்! அதனால் தான் காக்கா ராதாகிருஷ்ணன்!
முத்துராமன்,வாணிஸ்ரீ நடித்த கே.எஸ்.ஜியின் ”தபால்காரன் தங்கை’(1970) யில் தியேட்டரே கலகலக்க ”காதர் பாட்சா” என்ற அவர் வசனம் பிரபலம்.நடிகர் சங்கத் தலைவர் தேர்தலில் எம்.ஜி. ஆரை எதிர்த்து போட்டியிட்டவர் காக்கா ராதாகிருஷ்ணன்.
http://rprajanayahem.blogspot.in/2012/06/blog-post_21.html
http://rprajanayahem.blogspot.in/2012/04/blog-post_13.html
http://www.madathuvaasal.com/2012/08/14.html
பெரிய பத்திரிக்கை யே இத்தகைய அலட்சியத்தோடு நடந்திருப்பது கண்டிக்கத்தக்கது!
ReplyDeleteசொந்தமாக யோசிக்கத்தெரியாதவன், அடுத்தவன் சிந்தனையை திருடுபவன்தான் தமிழ்நாட்டில் க்ரியேட்டர், கலைஞானி,..etc......
ReplyDeleteசுய சரக்கு இல்லாதவர்கள் கையில் பத்திரிகைகள் நடத்தும் சூழல், கண்டிக்கத்தக்கது
ReplyDeleteஒரு குறைந்த பட்ச நேர்மை கூட இல்லாமல் இவ்வளவு பெரிய பத்திரிகை இருப்பது அநியாயம். எந்த அளவு நம் வேல்யு சிஸ்டம் கீழிறங்கி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது!
ReplyDeleteஹா ஹா ஹா...
ReplyDeleteஇதேபோல சுனில் எவ்வளவு பேரிடமிருந்து உருகி இருப்பாரோ தெரிய வில்லை...
வெட்க்கம், கேவலம்..
Forgive him !! you've helped him make a living.
ReplyDeleteஇப்படியும் சிலர் பிழைக்க உங்களைப் பயன்படுத்துகிறார்களே!
ReplyDeleteவணக்கம.
ReplyDelete