Share

Mar 23, 2009

பாராளுமன்ற தேர்தல் முஸ்தீபு

கேள்வி : பாட்டாளி மக்கள் கட்சியை ஏன் உங்களால் திருப்திப்படுத்த முடியவில்லை?

கருணாநிதி பதில் : நான் 'சாதாரணமானவன்'. ரொம்ப கேட்கிறார்கள் .அவர்கள் கேட்பதை என்னால் தரமுடியவில்லை . அதனால் திருப்திப்படுத்த முடியவில்லை .

பணமுதலை கருணாநிதி தன்னை சாமானியன் , சாதாரணமானவன் என்று சொல்லிக்கொள்வதை கடைசி வரை (!) நிறுத்தமாட்டார் என தெரிந்து விட்டது . இந்த 'சாதாரணமானவன் கருணாநிதி ' என்ற வார்த்தை எவ்வளவு செயற்கையானது . இன்னும் இப்படி சொல்வதை நிறுத்தாமல் பிடிவாதம் செய்கிறார் .

இன்னொன்று !

பாட்டாளி மக்கள் கட்சி பேரம் படியவில்லை என்று இவ்வளவு கொச்சையாக சொல்லவேண்டுமா ?

..

ஒ பண முதலையே !

உன்னைக் குற்றம் சாட்ட

நான் யார் ?

எனக்கு கசப்பது என் வறுமை .

உனக்கு கசப்பது

உபயோகமற்ற உன் செல்வம் .

- பிரமிள்

..

விஜயகாந்த் காஞ்சிபுரத்தில் மக்களை பார்த்து " நீங்கள் என்னை ஆதரிக்கா விட்டால் நான் கூட்டணி வைக்க வேண்டியிருக்கும் " என மிரட்டி விட்டார்.

அடி மடையன் ! மக்கள் ஆதரவு இல்லாமல் தானேடா திமுக ,அதிமுக ஏன் தேசியக்கட்சிகள் காங்கிரஸ் , பி ஜே பி ,கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட கூட்டணி போட தவித்து தக்காளி விற்கின்றன !

"நாற்பது சீட்டிலும் நான் அடையாளம் காட்டும் ஆட்களை ஜெயிக்க வையுங்கள் . மக்களுக்காக நான் நிறைய திட்டங்கள் வைத்திருக்கிறேன் ."

'வாயிலேயே லட்டு சுடுற அரசியல் வாக்குறுதிகள் ' மக்களுக்கு சலித்துப்போன விஷயம் !

.........

ஒரு விஷயம் . பி ஜே பி யும் ,சரத் குமார் கட்சியும் கூட்டணி என்கிறார்கள் . உண்மையா ? அப்பாடா ! இரண்டு கட்சிக்கும் ஒரு ஆறுதல் ! தேறுதல் !

இல .கணேசன் கவனத்திற்கு:

இந்திய நாட்டின் பிரதமர் ஆவது தான் தன் லக்ஷியம் என சரத்குமார் சொல்வாராம் ! அவரது பிரதமர் லக்ஷியம் ஈடேற பி ஜே பி உதவினால் தமிழக நாடார் சமூகம் மிகவும் மகிழும் !ஏதோ எங்க காமராஜருக்கு பின் அகில இந்திய அரசியலில் மிக உச்ச நிலைக்கு வர மிக ,மிக ,மிக விரும்பும் நாடாரை கௌரவித்தால் பி ஜே பி க்கும் பெருமை தானே !

..

கருணாநிதிக்கு சொந்த குடும்பம் !இன்னொரு பணமுதலை ஜெயலலிதாவுக்கு மன்னார்குடி குடும்பம் !

ஜெயலலிதா கூட்டணி தலைவர்களிடமும் ஜாதகம் வாங்கி அனலைஸ் செய்து கொள்கிறாரா ? கம்யூனிஸ்ட் தா . பாண்டியன் ஜாதகம் என்ன சொல்கிறது ?

...

உஷார் ! உஷார் !!

நடிகர் கார்த்திக் !!!

இவருடைய அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி மூன்று தொகுதியில் தனித்து போட்டி .

விருதுநகரில் கார்த்திக் பாராளுமன்ற வேட்பாளர் .

"நீங்க நிற்கிறீங்க ! நின்னு ஜெயிக்கிறீங்க !!"

"நீங்க நிற்கிறீங்க ! நின்னு ஜெயிக்கிறீங்க !!" இந்த வசனம் 'சவாலே சமாளி ' படத்தில் தோற்கபோகிற வேட்பாளரை( டி கே பகவதி ) பார்த்து அழுத்தமாக நாகேஷ் சொல்கிற வசனம் !

3 comments:

 1. Liked the way you lampooned the parties in fray. All are past masters in double game. Whom to vote for is a trillion dollar question !

  ReplyDelete
 2. இந்த‌ தா. பாண்டிய‌ன் நிலைமைதான் ரொம்ப‌ சோக‌மான‌து. இந்த‌ ஆள் ப‌த்தி என‌க்கு சுமார் 25 ஆண்டுகளா தெரியும். (என் வ‌ய‌சு 33 தான்.. lol). முத‌லில் எம். க‌ல்யாண‌சுந்த‌ர‌மோட‌ சீட‌ன். அவ‌ர் போன‌தும் யு சி பி ஐ த‌லைவ‌ர். அப்போதான் ர‌ஜீவ் கொலை அப்போ 140 ஸ்ப்லின்ட‌ர்ஸ் உட‌ம்புக்குள் நுழைந்து ம‌னித‌ன் செத்துப்பிழைத்தார். he was the designated translater that fateful night. இப்போ சி பி ஐ த‌லைவ‌ர். ஆனா அதே புலிக‌ளுக்கு ஆத‌ர‌வா ம‌திய‌ உண‌வு ம‌ற‌க்க‌வும் துணிகிறார். அம்மாவோடு தோள் உர‌சுகிறார். அட‌.. கால‌த்தின் கோல‌த்தை என்ன‌ சொல்ல‌!

  ReplyDelete
 3. \\பாட்டாளி மக்கள் கட்சியை ஏன் உங்களால் திருப்திப்படுத்த முடியவில்லை? கருணாநிதி பதில் : நான் 'சாதாரணமானவன்'. ரொம்ப கேட்கிறார்கள் .அவர்கள் கேட்பதை என்னால் தரமுடியவில்லை . அதனால் திருப்திப்படுத்த முடியவில்லை .பணமுதலை கருணாநிதி தன்னை சாமானியன் , சாதாரணமானவன் என்று சொல்லிக்கொள்வதை கடைசி வரை (!) நிறுத்தமாட்டார் என தெரிந்து விட்டது . இந்த 'சாதாரணமானவன் கருணாநிதி ' என்ற வார்த்தை எவ்வளவு செயற்கையானது . இன்னும் இப்படி சொல்வதை நிறுத்தாமல் பிடிவாதம் செய்கிறார் .\\

  அதுதான் கருணாநிதி...
  சரியாக எழுத்தில் கொண்டு வந்துள்ளீர்கள்.

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.