Share

Mar 7, 2009

Vertigo ( 1958 movie )

ஹிட்ச்காக் படங்களில் மிகச்சிறந்தது எது என்பதில் எல்லோருக்குமே கருத்து வேறுபாடு உண்டு. எனக்கு அவருடைய 'வெர்டிகோ 'படம் தான் ஆகச்சிறந்த படமாக தெரிகிறது.

இந்த படத்தில் நடித்த ஜேம்ஸ் ஸ்டீவார்ட் (James Stewart) இரண்டாம் உலக யுத்தத்தில் பங்கேற்றவர்.எம்பையர் பத்திரிகை இன்று வரை வந்துள்ள நூறு திரை நாயகர்களில் இவரை பத்தாவது ரேங்கில் வைத்து கௌரவித்தது . இசை ஞானம் உள்ளவர் . அக்கார்டியன் வாசிப்பார் . ஜேம்ஸ் ஸ்டீவார்ட் ஹாலிவுட் நடிகர்களில் மிக வித்தியாசமானவர். முதல் காரணம் அவர் மிகவும் எளிமையானவர் . இரண்டாவது காரணம் தான் அவரை மற்ற ஹாலிவுட் நடிகர்களிடம் இருந்து மிகவும் வேறுபடுத்தி தனிமைப்படுத்தி காட்டுவது . இவருக்கு ஒரே மனைவி . இவர் விவாகரத்து செய்ததே கிடையாது .இவர் மனைவி க்ளோரியா தான் இறக்கும்வரை நாற்பத்தைந்து வருடங்கள் ஸ்டீவார்ட் உடன் குடும்பம் நடத்தியவர் . மனைவி இறந்து மூன்றே வருடங்களில் 1997ல் இறந்து விட்டார் . ஜேம்ஸ் ஸ்டீவார்ட் நடித்த மற்றொரு முக்கியமான படம் It’s a wonderful life (1947 film)

வெர்டிகோ படத்தில் ஸ்டீவார்ட் க்கு Acrophobia – fear of heights!


 உயரமான இடங்களில் இருந்து கீழே பார்க்க பயம் .

High Anxiety என்ற பெயரில் பின்னால்1977 ல் Melbrooks இந்த Acrophobiaகதாநாயகனாக நடித்த படம் சிரித்து வயிறு புண்ணாகி விடும்.

வெர்டிகோ படு சீரியஸ் படம்.கிம் நோவாக் கதாநாயகி.பார்க்க லேசா நம்ம நமீதா சாயல் தெரியும் . படத்தின் முதல் காட்சி யாரும் மிஸ் செய்து விடக்கூடாது . ஹிட்ச்காக்கின் மர்ம திகில் படங்களில் ரசிகர்களுக்கு ஒரு த்ரில் உண்டு . தன் படத்தில் தலை காட்டும் ஹிட்ச்காக்கை கண்டுபிடிக்கிற த்ரில் . அவருடைய சஸ்பன்ஸ் விஷயங்களில் தலையாயது இது .இந்த படத்தில் கதாநாயகியின் கணவர் கவின் எல்ஸ்டார் அலுவலகத்திற்கு கதாநாயகன்போகும்போது தெருவில் விறுவிறுவென்று ஹிட்ச்காக் நடந்து போவார் .
திகில் பட ரசிகர்கள் என்று இல்லை பொதுவாக நல்ல சினிமா தவறாமல் பார்த்து விடுபவர்கள் இந்த வெர்ட்டிகோ படத்தை மிஸ் பண்ணக்கூடாது .


Vertigo is a must- see classic by standard ! An amazing screenplay and arguably Hitchcock’s greatest directing venture.

....


டோண்டுவின் பின்னூட்டத்திற்கு என் பதில்

படத்தில் வரும் இரு கிம் நோவாக்குகளும் இறப்பார்கள் என டோண்டு இந்த பதிவுக்கு பின்னூட்டத்தில் குறிப்பிடுகிறார் . அது விஷயமாக ஒரு விளக்கம் . கிம் நோவாக் படத்தில் ஜூடி என்ற பாத்திரமாக வருகிறார் . ஆனால் அவர் மேடலின் என்ற பெண் ஆக ஸ்காட்டி முன் நடிக்கிறார் . மேடலின் என்ற கவின் மனைவி தான் இறப்பதாக காட்சி. கவின் அவரை சர்ச் கோபுரத்திலிருந்து ஜூடி பார்க்கும்போதே தள்ளி விடுவார் . பின்னால் ஜூடி யும் க்ளைமாக்ஸ் காட்சியில் ஒரு கன்னிகா ஸ்திரியை திடீரென்று பார்த்து அதிர்ந்து போய் தானே தவறி விழுந்து இறக்கிறார். கிம் நோவாக் அப்படி பார்த்தால் ஒரு முறை தான் இறப்பார்.
' இந்த இரு பெண் ஒரு சாயலில் தோன்றுகிற திகில் குழப்பம் ,இறந்து போன காதலி ,மனைவி மீண்டும் உயிரோடு வரும் த்ரில் ' என்கிற ஹிட்ச்காக் தீம் தமிழில் நகல்களாக பின்னாளில் அப்போது கலங்கரை விளக்கம் தவிர ஜெய் சங்கர்,ஜெயலலிதா நடித்த "நீ", இந்த இருவருமே நடித்த "யார் நீ " ரவிச்சந்திரன்,கே ஆர் விஜயா நடித்த "இதயகமலம் " ஆகிய படங்களிலும் வந்துள்ளது . 'இதயகமலம் ' படம் மிகவும் தரமாக எல் வி பிரசாத் இயக்கத்தில் வந்தது .கே ஆர் விஜயா அந்த காலங்களில் தான் நடித்த படங்களில் மிகவும் பிடித்தது என்று இதயகமலத்தை தான் குறிப்பிடுவார் .

6 comments:

 1. முக்கியமான ஒரு விஷயத்தை குறிப்பிடவில்லையே. இந்த படத்தை காப்பியடித்துத்தான் கலங்கரை விளக்கம் படம் வந்தது. என்ன, எம்.ஜி.ஆருக்கு வெர்டிகோ இல்லை.

  கிம் நோவாக் இடத்தில் சரோஜாதேவி. ஆங்கில படத்தில் இரு கிம் நோவாக்குகளுமே இறப்பார்கள். நம்ம ஊரில் அவ்வாறெல்லாம் செய்தால் பாசம் படம் போல ஊத்திக் கொண்டு போயிருக்கும்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 2. Dondu sir! great!

  I couldn't get a chance to see your favourite movie " Fiddler on the Roof "

  ReplyDelete
 3. //
  ஜேம்ஸ் ஸ்டீவார்ட் நடித்த மற்றொரு முக்கியமான படம் It’s a wonderful life (1947 film)
  //
  உண்மை.. ரொம்ப முக்கியமான படம்.. அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் அன்று எதாவது ஒரு சேனலில் இந்த படம் கண்டிப்பா ஓடும்

  நான் முதன்முதலில் Mr.Smith goes to washington தான் பார்த்தேன்.. அருமையான படம். அப்புறம் வெர்டிகோ, ரோப், a man who knew too much.. என பல பாத்தாச்சு.. இவர் ஹிட்சாக்கின் ஆஸ்தான நாயகர்களில் ஒருவர்

  அருமையான பதிவு :)

  கொசுறு: நானும் மதுரை காரந்தேன் :))))

  ReplyDelete
 4. Open youtube page, type Fiddler on the roof in the search box and click. Some clippings you can see, especially the songs "If I were a rich man dibi dibi di.." and "Tradition".

  Regards,
  Dondu N. Raghavan

  ReplyDelete
 5. 10 years back i was able to watch almost all the Hitchcock movies and amazed with his talent on scripting the Screenplay (like within 5 minutes of the movie start, create a knot).

  I still feel Hollywood owes him a lot on learning from him how to perfect the story to a successful screenplay.

  ReplyDelete
 6. Rear Window is another one of James Stewart/Alfred Hitchcock classic.

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.