Share

Mar 24, 2009

காந்தாராவ்


தெலுங்கு நடிகர் காந்தா ராவ் இறந்துவிட்டாராம் .தமிழக மக்களுக்கு டப்பிங் படம் மூலம் அறிமுகமானவர் .
இவருடைய படங்களின் ட்ரைலர் சுவாரசியமாயிருக்கும் .
இவருக்கு வில்லன் ராஜநளா என்ற தெலுங்கு நடிகருக்கு தமிழ் டப்பிங் கே ஆர் ராம்சிங் தான் குரல் கொடுப்பார் .கே ஆர் ராம்சிங் நாடோடி மன்னன் , ஆசைமுகம்,துணிவே துணை படங்களில் நடித்திருக்கிறார் .
இப்போது மாய மோதிரம் ட்ரைலர் !
கே ஆர் ராம்சிங் குரலில் ராஜ நளா " வெண்ணிலா காற்று வீசும் இந்த நேரத்திலே .. ஆ ..( ஏப்பம் விடுவது போல இந்த ஆ ..) விவேகம் இல்லாமல் பேசி விட்டீர்கள் மன்னா !.. ஆ .. "
அரசர் : மந்திரியாரே ! நாம் இப்போது என்ன செய்யவேண்டும் ?
ராஜ நளா :" ஆ ..(தாடியை நீவி விட்டு ) நாம் உடனே வானவீதியிலே பறந்து , மாயாஜால வித்தைகளை கற்று வந்த மாமுனியை அழைத்து வரவேண்டும் ."
டிங் ..டிங் ..டிங்
மாயாஜாலங்கள் காண வாருங்கள் விட்டலாச்சாரியாவின் " மாய மோதிரம் "
..
காந்தாராவ் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு அரச அவையில் கண்ணை உருட்டி ,புருவத்தை தூக்கி ஒரு பார்வை அரசரை பார்த்து " மன்னா ! நீ இந்நாட்டின் அரசன் ! நான் இந்நாட்டின் குடிமகன் !"
டிங் ..டிங் ..டிங்
கனல் தெறிக்கும் வீர வசனங்கள் !
..
காந்தாராவ் அழுதுகொண்டே தன் தாயை பார்த்து " அம்மா ! நீங்கள் என் தாய் ! நான் உங்கள் மகன் !"
டிங் ..டிங் ..டிங்
நெஞ்சை உருக்கும் பாச வசனங்கள் ! பார்க்க தவறாதீர்கள் விட்டலாச்சாரியாவின் 'மாய மோதிரம் '
..
ஜோதிலக்ஷ்மி தொடையை காட்டிகாட்டி ஆட்டி ஆட்டி ஆடும் பாட்டு " இத்தனை நாளாச்சா ? பக்கத்தில் வந்தாச்சா ?" எல் ஆர் ஈஸ்வரி குரலில்.
டிங் ..டிங் ..டிங்
கண்ணை கவரும் நடனங்கள் !
...
காந்தாராவ் நடிகை பாரதியை பார்த்து பாடும் பாடல் ( ஜாப்பான் !லவ் இன் டோக்கியோ! மெட்டு )
' பெண்ணே ! பருவ வயது பெண்ணே !
கண்மலர் தோட்டம் !கண்ணுக்குள் ஆட்டம் !'
டிங் ..டிங் ..டிங்
குதூகலம் ஊட்டும் காதல் காட்சிகள் நிறைந்த படம் 'மாய மோதிரம் '
..
சிரிப்பு நடிகர் ரேலங்கி கிணற்றுக்குள் . மேலே துணை சிரிப்பு நடிகர் .
' ஐயய்யோ நான் கிணத்துக்குள்ள விழுந்துட்டேன் . காப்பாத்துங்க .."
மேலே உள்ள சிரிப்பு நடிகர் " நீ பேயி ! பயமா இருக்கு "
" இல்ல நான் மனுஷன் !"
" இல்லே நீ பேயி !"
ரேலங்கி அழுதுகொண்டே " நான் மனுஷன் .. பயமா இருக்கு ..காப்பாத்துங்க "
" இல்லே நீ பிசாசு ..எனக்கு பயமா இருக்கு "
" ஐயய்யோ நான் மனுஷன்"
"ஐயய்யோ நீ பிசாசு "
டிங் ..டிங் ..டிங்
வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை காட்சிகள் !
விரைவில் இந்த திரையரங்கில் விட்டலாச்சாரியாவின் " மாய மோதிரம் "!
..
காந்தாராவ் கத்தியுடன் ரொம்ப கோபமாக வில்லனிடம் இன்னொரு கத்தியை தூக்கி போட்டு
" இன்று நீயா ? நானா ? பார்த்து விடலாம் . சதிகாரா ! வா என் வாளுக்கு பதில் சொல்.தேச துரோகி !நாட்டை கொள்ளையடித்த சண்டாளா ! வா "
டிங் ..டிங் ..டிங்
பயங்கர கத்தி சண்டைகள் நிறைந்த படம் விட்டலாச்சாரியாவின் ' மாய மோதிரம் '
ட்ரைலர் முடிகிறது
..................................................
என் டி ராமாராவ் ஜனவசியம் ,ராஜ வசியம் மிக்க நடிகர்.தேவுடுகாரு !
நம்ம அமலாவோட மாப்பிள்ளை நாகர்ஜுன் அப்பா நாகேஷ்வர் ராவ் பெரிய ஜனவசியம் இல்லாவிட்டாலும் நல்ல சொத்து ,மக்களிடம் நல்ல நடிகர் என்ற அந்தஸ்து பெற்றவர் .
ஆனால்
பாவம் காந்தாராவ் .
சொந்தபடங்கள் எடுத்து இருப்பதை தொலைத்த துரதிர்ஷ்டசாலி .
இருபத்தைந்து ஆண்டுகளாக இந்த கவலையில் வாழ்ந்தவர் .
சினிமாவில் இருந்த என் நண்பன் ஒருவன்(எப்படியாவது கவிஞர் , இயக்குனர் ,நடிகர் ஆகிவிட மிகவும் முயன்று தோற்று விட்டவன் ) சினிமாவில் கைரேகை பார்ப்பதாக பாவலா செய்து கையை நீட்டுபவர் வாயிலிருந்து வருவதையே ஜோசியமாக சொல்லி விடுவான் . சினிமாக்காரர்களின் ஜோதிட மோகம் இவனுக்கு ஒரு விளையாட்டு . பல பேரை நிஜமாக அசத்தியிருக்கிறான் . இவனிடம் இருபது ஆண்டுகளுக்கு முன் காந்தாராவ் சிக்கிய போது அவர் இவனிடம் தன் கதையைதெலுங்கு கலந்த தமிழில் சொல்லி ,இழந்த சொத்துகளை சொல்லி அழுது புலம்பினாராம் .இவர் துணைவியாரும் அழுது ' இழந்ததை மீண்டும் பெற வழியேதும் உண்டா ? கை ரேகை என்ன சொல்லுது ' என ஏக்கத்துடன் கேட்டாராம் .

4 comments:

 1. பயங்கர மொக்கைகள் நிறைந்த ப்ளாக்
  ”R P ராஜநாயஹம்” படிக்க வாருங்கள்

  டிங் டிங் டிங்

  சும்மா லுலுலாயிங்கோவ்!

  ReplyDelete
 2. Sir,

  A good take on K.Rao movies. It reminds me of some Tamil movie trailers I watched as a child. The one I remember (for obvious reasons) is a Sivaji movie trailer with hilarious punchlines such as 'Nadigar Thilagam Sivaji Ganesananin arputhamana nadanangal(?), Gumgum kuthugal (fights)' etc. I remember the title of another film, 'Ellamae panaththukku thaanda'. Have you heard of this movie?,

  Regards, N.Ramakrishnan

  ReplyDelete
 3. ராஜநாயஹம் சார்,

  நான் பார்த்த தெலுங்கு டப்பிங் படங்கள் பத்துக்கு மேல் இருக்காது! அவற்றில் ஏதோ ஒன்றில் (ஜாக்பாட் ஜாங்கோ??) ஜோதிலட்சுமி 'அப்துல்லா, subaahnallaah! அப்துல்லா , .....' என்று ஒரு சேட்டுக்கு எதிரே ஏதேதோ பாடி ஆடிக் காட்டுவார்! இன்னொன்றில் (மோதிப் பார்??) ஜோதிலட்சுமியோ , விஜயலலிதாவோ யாரோ ஒருவர் 'என்னைப் பாத்துக்கோ! தண்ணி போட்டுக்கோ!' என்று பாடி ஆடிக் காட்டுவார்! இவை தவிர ஜெயமாலினியின் 'ஜெகன்மோகினி' நன்றாக நினைவில் இருக்கிறது!

  நன்றி!

  சினிமா விரும்பி

  ReplyDelete
 4. how do you remember to the detail ? great...

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.