Share

Dec 20, 2008

நோபல் பரிசு ஊழல்

நோபல் பரிசு கமிட்டி ஜூரி ஒருவர் லஞ்ச குற்றச்சாட்டிற்கு உள்ளாகி ஒரு பெரிய சர்ச்சை உருவாகி இருக்கிறது .
இது ஒரு கெட்ட செய்தி தான் . அப்படி தான் .இல்லையா?

அடடா ! நம்முடைய தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நோபல் பரிசு வாங்கிவிட வழியேதும் தெரியாமல் பல கழக தலைவர்களும் பல்கலை கழக துணை வேந்தர்களும் தவித்து கொண்டிருந்தார்களே. மருமகன் மாறன் பிள்ளைகள் கூட ரஜினியின் 'எந்திரன்' படத்தை இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாரிக்க கூடிய பணபலம் மிக்கவர்கள் . தாத்தா வுடன் இப்போது இணக்கமாகி சுமுகமாக இருக்கிறார்கள் . கருணாநிதியின் செல்வசெழிப்பிற்கு இனி நோபல் பரிசு கூட எட்டா கனி அல்ல போல ஒரு நம்பிக்கைஒளி ஏற்பட்டிருக்கிறதே .

உண்மையான யோக்கியதாம்சம் ,தகுதியுள்ள அசோகமித்திரன் ஏழை ! நோபல் கமிட்டியை 'கவனிக்க ' அருகதை அற்ற துர்பாக்கிய சாலி ..அதிர்ஷ்டகட்டை .

......


இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பன்னிரண்டாம் தேதி பதிவு கீழே :

அபினவ் பிந்த்ரா சாதனையும் கருணாநிதியின் சோதனையும்
ஒலிம்பிக்கில் அபினவ் பிந்த்ரா( இலுப்பம்பூ சக்கரை! )இந்தியா வுக்கு தங்கம் வாங்கித்தந்த சந்தோசத்தை அனுபவித்த அதே நேரத்தில் ஒரு சோக செய்தியையும் கேட்கும் துர்பாக்கியம் ஏற்பட்டதை சொல்லாமல் இருக்க முடியவில்லை .

பழைய பல்லவி தான் .ஆனால் பாவம் இந்த முறை இவர்களிடம் ஷேக்ஸ்பியர் சிக்கி விட்டார். ஒரு தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர் 'திரு. கருணாநிதி அவர்கள் ஷேக்ஸ்பியர் யை தாண்டிபோய்விட்டார். அதனால் அவருக்கு உடனே நோபெல் பரிசு உடனே உடனே தந்தேயாக வேண்டும்' என்று பிரகடனபடுத்தியுள்ளார். கிட்டத்தட்ட நோபல் கமிட்டிக்கு விடப்பட்டுள்ள மிரட்டல்!

The possession of power , unavoidably spoils the free use of reason-Immanuel kant.

எதிர்காலத்தில் எப்படியெல்லாம்கருணாநிதி மீசையில் மண் ஒட்டவில்லை என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும் . அதற்கு சில டிப்ஸ் தர விரும்புகிறேன் .

நோபல் கமிட்டீ பரிசு கொடுக்க தவறிய எழுத்தாளர்கள் வரிசையில் கருணாநிதியையும் சேர்த்து நோபல் கமிட்டீ யின் திறமையின்மையை, மெத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுவது அவரது மகத்துவத்தை வெளிப்படுத்தும் . லியோ டால்ஸ்டாய் , ஜாய்ஸ் , போர்ஹே , ஆகிய மகத்தானவர்களுக்கும் நோபல் பரிசு கிடைக்காததை சுட்டிக்காட்டி கருணாநிதியை அவர்கள்தோளோடு நிறுத்தி கழக கண்மணிகளுக்கு ஆறுதல் சொல்லலாம் .இவ்வளவு ஏன் ? மஹாத்மா காந்தியின் பெயர் அவர் உயிரோடு இருந்த காலத்தில் ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதுகளில் , நாற்பதுகளில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஐந்து முறை சிபாரிசு செய்யப்பட்டும் நோபல் கமிட்டீ காந்தியாருக்கு பரிசு தர மறுத்த அவலத்தை சுட்டிக்காட்டி கழகத்தின் இரண்டாம் மட்ட தலைவர்களும் , மூன்றாம் மட்டமான தலைவர்களும் தங்களை தேற்றிகொள்ளலாம் .

3 comments:

  1. The Nobel Committee will only do itself proud if it bestows the 'Nobel for Literature' jointly on 'Kalaignar' Karunanidhi and 'Kavithayini' Kanimozhi. The world will stand still for a moment in awe and rightly so!!

    N.Ramakrishnan

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.