Share

Dec 5, 2008

கல்யாண்குமார் சொந்தகுரல்

ராசுக்குட்டி படத்தில் மறைந்த கல்யாண்குமார் கதாநாயகனின் தந்தை . அவர் கன்னடபடங்கள் நூறுக்கு மேல் நடித்தவர் என்றாலும் தமிழில் அவர் கதாநாயகனாக நடித்த நெஞ்சில் ஓர் ஆலயம் , நெஞ்சம் மறைப்பதில்லை , மணி ஓசை , தாயில்லாபிள்ளை,யாருக்கு சொந்தம் ஆகிய படங்களில் சொந்த குரலில் தான் பேசியிருக்கிறார் .
அவர் ராசுக்குட்டி படத்தில் நடித்தபோது அவருக்கு அந்த காலத்தில் ஏற்படாத சிக்கல் ஒன்று ஏற்பட்டது .
கதாநாயக இயக்குனரின் உதவி இயக்குனர் கூட்டம் ' அவருக்கு டப்பிங் பேச வேறு ஆள் போட வேண்டும் . அவர் பேச்சில் கன்னட வாடை அடிக்கிறது ' என்று பேச ஆரம்பித்தது . அவர்கதாநாயகனாய் தமிழ் பேசி நடித்த போது பிறந்திருக்காத ஜென்மங்கள் . " தாயில்லா பிள்ளை " படத்தில் இன்றைய முதல்வர் வசனத்தை பேசி நடித்தவருக்கு இப்படி ஒரு புறக்கணிப்பு . அதோடு கன்னடத்துக்காரர் தான் என்றாலும் நாற்பது வருடங்களாக சென்னையில் வாழ்ந்து வந்தவர்.
நான் இப்படி பேச்சு அடிபடுவதை கல்யாண்குமார் அவர்களிடம் வேதனையுடன் தெரிவித்தேன் . அவருக்கு அதிர்ச்சி ! நான் கேட்டேன் “Who will break the ice?” கல்யாண்குமார் சற்று நம்பிக்கையுடன் சொன்னார் “I will break the ice! டைரக்டர் இடம் நான் பேசி அவரை சம்மதிக்க வைத்து விடுவேன் . நான் கருணாநிதி எழுதிய தமிழ் வசனங்களையே உச்சரிப்பு சுத்தமாக பேசியவன் ." அப்படி அவர் பேசிவிட்டு என்னிடம் சந்தோசமாக " டைரக்டர் என் ரோலுக்கு நானே குரல் கொடுக்க சம்மதித்து விட்டார் "
டப்பிங் தியேட்டரில் கல்யாண்குமார் ரோலுக்கு தீனரட்சகன் என்ற டப்பிங் ஆர்டிஸ்ட் தான் குரல் கொடுத்தார் .
பாவம் கல்யாண்குமார் ! படத்தில் அவருக்கு டப்பிங் குரல் தான் !

6 comments:

 1. என்ன ஆச்சு ராஜநாயஹம்? மூன்றாவது நாளாக உங்கள் பதிவை காணோம். வேலைப் பளுவா, உடல்நிலை ஏதும் சரியில்லையா? உங்கள் பதிவில்லாத நாளில் சுவாரஸ்யங்களில் ஒன்று குறைந்துவிடுகிறது நிச்சயம். Get well soon, if you are not feeling alright.

  ReplyDelete
 2. சாமிகூட்டத்தின் எண்ணமே எனக்கும். ஆனா உள்ளூர ஒரு சந்தேகம் இருக்கிறது. Figure ஏதாவது வுசார் ஆகி தல நாள் fulla Phonelaiyum அல்லது நேர்லயும் மொக்க podudho? என்ன பண்றது நம்ம புத்தி இப்படி தான் யோசிக்குது... Girl friend கிடைச்சிருந்தா Congrats..... otherwise ....
  //உங்கள் பதிவில்லாத நாளில் சுவாரஸ்யங்களில் ஒன்று குறைந்துவிடுகிறது நிச்சயம். Get well soon, if you are not feeling alright.//

  ReplyDelete
 3. Now that we are so addicted to your blog, daily we expect a post from you.

  Mr Rajanayahem, I suggest you make this as a weekly column. This will reduce your burden as well as tamp down our expectations.

  ReplyDelete
 4. dear rpr,

  i only know how many times i have checked your blog these 3/4 days looking for new post. i must admit that your writing is so impressive and bubbling with something that comforts me. i just see a man who had seen many ups and downs in life.....perhaps i see myself. write more....write whenever time permits.

  gopi g

  ReplyDelete
 5. இலக்கியம் போல் பதிவும் தன்னைத்தானே எழுதிக் கொள்ளும்.
  கோழி போல் தினம் முட்டை போட
  அவர் என்ன வலைப்பதிவுக் கோழியா?

  ReplyDelete
 6. கல்யாண் குமார் எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர். ராசுக்குட்டி படம் ரிலீஸ் ஆனபோது எனக்கு பதினைந்து வயது இருக்கும். அந்த படத்தின் ஒரு லட்ச ரூபா விலை சேலை பற்றி குமுதத்தில் படித்தேன். இந்த படத்தை பலமுறை பார்த்துள்ளேன்.நீங்கள் அந்த படத்தில் இன்ஸ்பெக்டர் ஆக நடித்ததை பற்றிய இடுகையையும் படித்தேன்.இந்த உலகில் உங்களை போன்ற உண்மையான திறமை உள்ள பலருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதையும், மறைகப்படுவதையும் நினைத்தால் வேதனையாக உள்ளது.

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.