Share

Dec 19, 2008

பல நேரங்களில் பல மனிதர்கள்- பாரதி மணி

பல நேரங்களில் பல மனிதர்கள்

R.P. ராஜநாயஹம்: குழும நண்பர்களுக்கு ஒரு செய்தியை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

கடந்த வருடத்தில், நான் உயிர்மையில் எழுதிய 13 கட்டுரைகள், தீராநதியில் எழுதிய ஒரு கட்டுரை, அமுத சுரபியில் எழுதிய 4கட்டுரைகள் – மொத்தம் 18 கட்டுரைகள் கொண்ட ஒரு தொகுப்பு பல நேரங்களில் பல மனிதர்கள் என்ற தலைப்பில் உயிர்மை பதிப்பகம் வெளியீடாக சென்னை புத்தகவிழாவுக்கு முன்பாக வெளிவர இருக்கிறது..புத்தகத்தலைப்பு உபயம் என் நண்பர் வ.ஸ்ரீநிவாஸன். ஜெயகாந்தன் சண்டைக்கு வருவாரா என்று தெரியவில்லை. எனது முதலும் கடைசியுமான இந்த புத்தகத்துக்கு கனம் சேர்ப்பது பல துறைகளிலும் நான் சேர்த்த ஒரே சொத்தான என் நண்பர்களில் பலர் என்னைப்பற்றி உயர்வாக எழுதியிருக்கும் ‘பொய்கள்’. சுமார் 25 பிரபலங்கள் பொய் சொல்லியிருக்கிறார்கள். இதில் பாவண்ணன், அ. முத்துலிங்கம், ஜெயமோகன், நாஞ்சில் நாடன் அடக்கம்.

தவிர இலக்கியத்துறையிலிருந்து அசோக மித்திரன், இ.பா, ஆ. மாதவன், நீல. பத்மநாபன், கடுகு, வாஸந்தி, எஸ். ராமகிருஷ்ணன், நாடகத்துறையிலிருந்து கூத்துப்பட்டறை ந. முத்துசாமி, வெளி ரங்கராஜன், பேரா. எஸ். ராமானுஜம், வேலு சரவணன், இசைத்துறையிலிருந்து லால்குடி ஜெயராமன், T.V.G., சினிமாத்துறையிலிருந்து பி. லெனின், சத்யராஜ், டெல்லி கணேஷ், அம்ஷன் குமார் போன்றோர் என்னைப்பற்றிய உண்மைகளைத்தவிர்த்து நிறையவே புகழ்ந்திருக்கிறார்கள். நாஞ்சில் நாடன் முன்னுரை எழுதுகிறார். எத்தனை பொய்களை அள்ளி வீசுவாரென்று தெரியவில்லை!இத்தனை பிரபலங்களை ஒன்றுசேர்த்து ஆயிரம் பொய்களை சொல்ல வைத்த என்னை எத்தனை பாராட்டினாலும் தகும்! நாஞ்சிலிடம் இந்த புகழாரங்களை உயிருடன் இருக்கும்போதே என் Obituary-யாகத்தான் பார்க்கிறேன் என்று தமாஷாக சொல்லப்போக, அவரிடமிருந்து செமத்தியாக வாங்கிக் கட்டிக்கொண்டேன். நான் இருந்து அவருக்கு வழி நடத்தவேண்டுமாம்! செய்துட்டா போச்சு!போனவருடம் யாராவது என்னிடம் என் புத்தகம் வெளிவரும் என்று சொல்லியிருந்தால், அவனை பரிதாபமாக பார்த்திருப்பேன். ஆக்ராவுக்கு இல்லை கீழ்ப்பாக்கத்துக்கு – திருவனந்தபுரமென்றால் ஊளம்பாறை – போகவேண்டியன் என்று தான் நினைத்திருப்பேன். விதி யாரை விட்டது?இதைப்படித்து விட்டு, எல்லோரும், ‘வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்’ என்று எழுத வேண்டுகிறேன்.

பாரதி மணி

..................

பாரதி மணி பற்றி

தன் பதிவுகளில் R P ராஜநாயஹம் :

சென்ற ஆகஸ்ட் 21 தேதி எனக்கு பிறந்த நாள்.

பிறந்தது பற்றி பெருமை என்ன இருக்கிறது . ஆனால் இந்த தேதியில் பிறந்ததில் எனக்கு ஒரு பெருமை பிறந்த அன்றே ஏற்பட்டுவிட்டது . "தோழர் ஜீவா "பிறந்த தேதி இது .


இந்த வருடம் க.நா.சு வின் மருமகன் பாரதி மணி க்கு போன் போட்டு என்னை அறிமுகபடுத்திகொண்டு அவருடைய ஆசியை பெற்றேன் . மனிதர்"உயிர்மை"பத்திரிகையில் சும்மா சிக்ஸர் ,பௌண்டரி யாக விளாசு,விளாசு என்று விளாசுகிறார் . என்ன ஒரு அனுபவங்கள் , என்ன ஒரு கொண்டாட்டமான வாழ்க்கை .க.நா. சு . உயிரோடிருந்த போது மருமகனுடைய ஆளுமை பற்றிஎதுவும் எழுதவில்லை .சொன்னதாகவும் தெரியவில்லை .
இ.பா வின் "மழை "நாடகத்தில் க.நா.சு. மகளோடு நடிக்கும் போது , மணி காதல் திருமணம் செய்து கொண்டார் என்பது தெரியும் .
இந்த திருமணத்திற்கு தி. ஜானகி ராமன் பண உதவி செய்தார் என்பதை க.நா.சு தன் "பித்தப்பூ " நாவலில் குறிப்பிட்டுள்ளார் .

.....

பாரதி மணி சார் !
உங்களுக்கு என் வலைதளத்தில் எத்தனை வாசகர்கள் தெரியுமா !
உங்களுக்கென்ன சார் ராஜா மாதிரி வாழ்க்கையை கொண்டாடிய மனிதர் !
கவிதை எழுத மனதில் கவலை வேண்டுமே . சலிப்பு வேண்டுமே .
உங்கள் வாழ்க்கையில் கவலை சலிப்பு இவற்றிற்கெல்லாம் இடம் ஏது சொல்லுங்கள் .
எழுபது தானே இப்போது . மாமியை பற்றி' மழை ' நாடக நினைவுகளை கவிதைகளாக எழுதி அசத்தபோகிறீர்கள் பாருங்கள் !
இன்னும் ஐம்பது வருடம் இருக்கிறது .Your Whole future is before you!

4 comments:

 1. I happened to read his essays in Uyirmai and they were too good. I wont miss a chance to get hold of the book.

  ReplyDelete
 2. Sir. வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம் :-)

  ReplyDelete
 3. Mr.Bharathi Mani at his usual humurous self. This book may be his first, but why it should be his last? I am greedy enough to expect more such books from him.

  N.Ramakrishnan

  ReplyDelete
 4. //இதைப்படித்து விட்டு, எல்லோரும், ‘வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்’ என்று எழுத வேண்டுகிறேன்.//

  வணங்கும் பழக்கம் இல்லாததால் வாழ்த்துகிறேன். வாழிய நீடூடி வணக்கத்துடன் !!
  :)

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.